கேரளா தக்காளி ரசம் : தக்காளி ரசம்; சாதாரணமா நினைச்சுடாதீங்க, இது கேரளா ஸ்டைல்! எப்படி செய்வது தெரியுமா?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கேரளா தக்காளி ரசம் : தக்காளி ரசம்; சாதாரணமா நினைச்சுடாதீங்க, இது கேரளா ஸ்டைல்! எப்படி செய்வது தெரியுமா?

கேரளா தக்காளி ரசம் : தக்காளி ரசம்; சாதாரணமா நினைச்சுடாதீங்க, இது கேரளா ஸ்டைல்! எப்படி செய்வது தெரியுமா?

Priyadarshini R HT Tamil
Updated Mar 23, 2025 01:39 PM IST

கேரளா தக்காளி ரசம் : தக்காளி ரசம்தானே என்று எண்ணாதீர்கள் கேரளா ஸ்டைல் தக்காளி ரசம் எத்தனை சுவையானது என்று பாருங்கள். நீங்கள் வழக்கமாக வைக்கும் ரசத்தை மேலும் ருசியாக்கும்.

கேரளா தக்காளி ரசம் : தக்காளி ரசம்; சாதாரணமா நினைச்சுடாதீங்க, இது கேரளா ஸ்டைல்! எப்படி செய்வது தெரியுமா?
கேரளா தக்காளி ரசம் : தக்காளி ரசம்; சாதாரணமா நினைச்சுடாதீங்க, இது கேரளா ஸ்டைல்! எப்படி செய்வது தெரியுமா?

தேவையான பொருட்கள்

• தக்காளி – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)

• கடுகு – கால் ஸ்பூன்

• கறிவேப்பிலை – ஒரு கொத்து

• பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை

• பூண்டு – 8 பல் (தட்டி எடுத்துக்கொள்ளவேண்டும்)

• நெய் அல்லது தேங்காய் எண்ணெய் – ஒரு ஸ்பூன்

• புளி பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன்

• மிளகாய்த் தூள் – அரை ஸ்பூன்

• மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

• உப்பு – தேவையான அளவு

• மிளகுத் தூள் – கால் ஸ்பூன்

• சீரகத் தூள் – கால் ஸ்பூன்

செய்முறை

1. ஒரு கடாயில் எண்ணெய் அல்லது நெய்யை சூடாக்கி அதில் கடுகு, பெருங்காயத் தூள் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும். கடுகு வெடித்தவுடன், பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்க்கவேண்டும். அடுத்து தட்டி எடுத்த பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

2. உப்பு சேர்த்து தக்காளி நன்றாக வதங்கும் வரை மூடிவைக்கவேண்டும்

3. தக்காளி நன்றாக வதங்கியவுடன் புளி பேஸ்ட், மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மிளகுத் தூள், சீரகத் தூள் சேர்த்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் நன்றாக கலந்துவிட்டு, போதிய அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.

4. எப்போதும் ரசத்தை அதிகம் கொதிக்கவிடக்கூடாது. நுரை கூடி வரும்போதே மல்லித்தழை தூவி இறக்கிவிடவேண்டும். சூப்பர் சுவையான கேரளா ஸ்டைல் ரசம் தயார்.

நாம் தக்காளியை கரைத்து சேர்ப்போம். இதில் தக்காளியை நன்றாக மசிய வேகவைத்து செய்யப்படுகிறது. இதனால், தக்காளி மசிந்து தக்காளியின் சுவை முழுவதும் ரசத்தில் இறங்கி ரசம் ஒரு வித்யாசமான சுவையைத்தரும். நாம் வர மிளகாயை கிள்ளி சேர்ப்போம், இங்கு மிளகாய்த் தூள் சேர்க்கப்படுகிறது. இதுவும் ரசத்துக்கு ஒரு வித்யாசமான சுவையைத் தரும்.

மேலும் நீங்கள் ரசப்பொடியை பயன்படுத்திதான் ரசம் வைப்பீர்கள் என்றால், மிளகுத்தூள், சீரகத்தூளுக்கு பதில் அந்த ரசப்பொடியை சேர்த்துக்கொள்ளலாம். நீங்கள் வழக்கமாக பருப்பு தண்ணீரை ரசத்தில் சேர்ப்பீர்கள் என்றால், அதையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம். சூப்பர் சுவையாக இருக்கும். வழக்கமான தமிழ் முறையில் அல்லாமல் இந்த கேரளா ஸ்டைல் ரசத்தை ஒருமுறை முயற்சித்துப்பாருங்கள். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும் இதேபோல் தினமும் ரசம் வைக்க துவங்கிவிடுவீர்கள்.