கேரளா ஸ்பெஷல், நேந்திரம் பழம் நொறுக்கு! குழந்தைகளுக்கு வித்யாசமான ஸ்னாக்ஸ்! ரெசிபி இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கேரளா ஸ்பெஷல், நேந்திரம் பழம் நொறுக்கு! குழந்தைகளுக்கு வித்யாசமான ஸ்னாக்ஸ்! ரெசிபி இதோ!

கேரளா ஸ்பெஷல், நேந்திரம் பழம் நொறுக்கு! குழந்தைகளுக்கு வித்யாசமான ஸ்னாக்ஸ்! ரெசிபி இதோ!

Priyadarshini R HT Tamil
Jan 04, 2025 11:27 AM IST

குழந்தைகளுக்குப்பிடித்த சூப்பர் ஸனாக்ஸ் ரெசிபிகள் இரண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்துகொள்ளுங்கள்.

கேரளா ஸ்பெஷல், நேந்திரம் பழம் நொறுக்கு! குழந்தைகளுக்கு வித்யாசமான ஸ்னாக்ஸ்! ரெசிபி இதோ!
கேரளா ஸ்பெஷல், நேந்திரம் பழம் நொறுக்கு! குழந்தைகளுக்கு வித்யாசமான ஸ்னாக்ஸ்! ரெசிபி இதோ! (yummy tummy)

நெய் – 2 ஸ்பூன்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு

திராட்சை – ஒரு கைப்பிடியளவு

தேங்காய் துருவல் – ஒரு கப்

சர்க்கரை – ஒரு ஸ்பூன்

ஏலக்காய்ப் பொடி – கால் ஸ்பூன்

செய்முறை

நேந்திரம் பழத்தை துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் நெய் சேர்த்து அதில் அதை பொன்னிறமாகும் வரை வறுத்துக்கொள்ளவேண்டும். அதை தனியாக வைத்துக்கொள்ளவேண்டும். அடுத்து மீண்டும் நெய் விட்டு, முந்திரி, திராட்சை, தேங்காய்த் துருவல் சேர்த்து வறுத்துக்கொள்ளவேண்டும்.

கடைசியாக சர்க்கரை சேர்த்து ஒரு பிரட்டு பிரட்டி, ஏற்கனவே வறுத்து வைத்துள்ள நேந்திரம் பழத்தை அதில் சேர்த்து வறுக்கவேண்டும். ஏலக்காய்ப் பொடி தூவி இறக்கினால், சூப்பர் சுவையான நேந்திரம் பழம் நொறுக்கு தயார். சர்க்கரை சேர்த்தவுடன் வேகமாக மற்ற பொருட்களை சேர்த்து இறக்கிவிடவேண்டும். சர்க்கரை அதிகம் முறுகினால் சுவை நன்றாக இருக்காது.

இது சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபியாகும். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். மாலையில் பள்ளிவிட்டு வீடு திரும்பும் குழந்தைகளுக்கு இதை செய்து கொடுத்தால் அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்களே மீண்டும், மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள்.

குறிப்புகள்

பழங்கள் தேர்ந்தெடுக்கும்போது நல்ல பழமாக எடுத்துக்கொள்ளவேண்டும். வறுக்கும்போது தீய்ந்து விடக்கூடாது. குறைவான தீயிலே பொன்னிறமாகும் வரை வறுத்தால் போதும். நெய்யும் அளவாக சேர்க்கவேண்டும். அதிகம் சேர்த்தால் தெவிட்டிவிடும். சர்க்கரை, நாட்டுச்சர்க்கரை வேண்டுமானாலும் சேர்த்துக்கொள்ளலாம். இதை காலையில் ப்ரேக் ஃபாக்ஸ்ட்டாகவும் சாப்பிலடாம்.

மேலும் ஒரு ரெசிபியையும் தெரிந்துகொள்ளுங்கள்

முட்டை சாப்பாத்தி, குழந்தைகளுக்குப் பிடித்தது

தேவையான பொருட்கள்

சப்பாத்தி மாவு செய்ய

கோதுமை மாவு – ஒன்றரை கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

முட்டை கலவை செய்ய

முட்டை - 4

உப்பு – தேவையான அளவு

பெரிய வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் – 2 (பொடியாக நறுக்கியது)

பூண்டு – 8 பல் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – அரை இன்ச் (பொடியாக நறுக்கியது)

கொத்தமல்லித் தழை – ஒரு கைப்பிடியளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, எண்ணெய் போட்டு கலந்து, தேவையான அளவு இளஞ்சூடான தண்ணீரை ஊற்றி, மாவை நன்றாக பிசைந்து அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ள வேண்டும்.

பின்னர், சிறிய உருண்டைகளாக பிரித்து, உருட்டி சப்பாத்திபோல் தேய்த்து கொள்ளவேண்டும்.

அடுத்து ஒரு பாத்திரத்தில் முட்டை, உப்பு, வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்றாக அடித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

தோசைக்கல்லை சூடாக்கி, சப்பாத்தியை போட்டு இருபுறமும் நெய் தடவி சுட்டெடுக்கவேண்டும். அடுத்து சப்பாத்தியின் ஒருபுறத்தில், செய்து வைத்த முட்டை கலவையில் சிறிதளவு ஊற்றி மீண்டும் அதை திருப்பிப்போட்டு சுட்டு எடுக்கவேண்டும். இரண்டுபுறமுமே நன்றாக வெந்ததும் முட்டை சப்பாத்தி தயார்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.