Kerala Pazhampori : கேரளா ஸ்பெஷல் பழம்பொரி! நேந்திரன் வாழைப்பழத்தில் செய்வது! மழைக்கு இதமானது! இதோ ரெசிபி!
உடலுக்கு சூட்டை தரக்கூடியது நேந்திரன் வாழைப்பழம். எனவே அளவாக சாப்பிடுவது நல்லது. அதிகம் சாப்பிட்டால் சூட்டை கிளப்பி வயிற்றுப்போக்கை ஏற்படுத்திவிடும். உஷ்ண பழம் என்பதால் மழைக்காலத்துக்கு ஏற்றது.

நேந்திரன் வாழைப்பழத்தில் உள்ள நன்மைகள்
ரத்த சிவப்பணுக்களை அதிகரிக்க உதவுகிறது. பலவீனமானவர்களுக்கு தெம்பளிக்கும். உடல் மெலிந்து இருப்பவர்களுக்கு உடல் எடை அதிகரிக்க உதவும். பிறந்த குழந்தைகளுக்கு 6 மாதத்தல் வேகவைத்து மசித்து நெய் சேர்துது கொடுத்தால் குழந்தைகளின் உடல் எடை அதிகரிக்க உதவும். ஞாபக சக்தியை அதிகரிக்க உதவும். உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. இருமல் இருந்தால் எடுத்துக்கொள்ள பலன் தரும். இரும்புச்சத்து குறைபாட்டை சரிசெய்யும். இதய நோய்கள் வராமல் தடுக்கும். காசநோய்க்கு மருந்தாகிறது.
பழம்பொரி செய்ய தேவையான பொருட்கள்
மைதா – ஒரு கப்
அரிசி மாவு – கால் கப்
இட்லி மாவு – அரை கப்
உப்பு – தேவையான அளவு
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
பேக்கிங் சோடா – கால் ஸ்பூன் ‘
பழுத்த நேத்திரன் வாழைப்பழம் – 3
எண்ணெய் – பொரித்து எடுக்க தேவையான அளவு (உங்களுக்கு பிடித்த அல்லது நீங்கள் வழக்கமாக பயன்படுத்திக்கொள்ளும் என்ன எண்ணெய் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்)
செய்முறை
ஒரு அகலமான பாத்திரத்தில் ஒரு மைதாவை சலித்து எடுத்துக்கொள்ள வேணடும்.
அதில் அரிசி மாவு, இட்லி மாவு, உப்பு, சர்க்கரை, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.
தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்துக்கு கரைத்துக்கொள்ள வேண்டும்.
கடைசியாக சிறிது பேக்கிங் சோடா சேர்க்க வேண்டும். அப்போதுதான் பழம்பொரி சுவையாகவும், மிருதுவாகவும் இருக்கும்.
இப்போது நன்கு பழுத்த நேந்திரன் வாழைப்பழங்களை நீளவாக்கில் பஜ்ஜிக்கு வாழைக்காயை கட்செய்வது போல் நறுக்கிக்கொள்ள வேண்டும்.
எண்ணெயை சூடாக்கி நறுக்கிய வாழைப்பழங்களை மாவில் தோய்த்து இருபுறமும், நன்றாக ஒட்டியிருக்கும்போது எடுத்துவிடவேண்டும்.
காய்ந்த எண்ணெயில் பொறித்து எடுக்க சுவையான பழம்பொரி தயார்.
மாலை நேரத்தில் சூடான உங்கள் வழக்கமாக பானத்துடன் சேர்த்து பரிமாறலாம்.
உங்கள் வீடுகளுக்கு திடீர் விருந்தாளிகள் வந்தாலும் இதை செய்து கொடுத்து அசத்தலாம். குழந்தைகளுக்கு ஹெல்தியான மாலை நேர சிற்றுண்டி, விரும்பியும் சாப்பிடுவார்கள்.
இந்தப்பழம்பொரி கேரளா மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பயங்கர பிரபலம். அங்கு டீக்கடைகளில் இந்த ஸ்னாக்ஸ் தேநீருடன் சேர்த்து சாப்பிட நிறைய அடுக்கி வைத்திருப்பார்கள்.

டாபிக்ஸ்