Keerai dal Kootu : கீரை பருப்பு கூட்டு செய்வது எப்படி? உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்!
Keerai dal Kootu : கீரை பருப்பு கூட்டு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் இதை கட்டாயம் அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்
கீரை – ஒரு கட்டு
துவரம் பருப்பு – ஒரு கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி – 3 (பொடியாக நறுக்கியது)
பூண்டு – 5 பல்
பச்சை மிளகாய் – 2
புளி – எலுமிச்சை அளவு
மஞ்சள்தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – ஒரு ஸ்பூன்
தாளிக்க தேவையான பொருட்கள்
நெய் – ஒரு ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – ஒரு ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
சீரகம் – ஒரு ஸ்பூன்
தட்டிய பூண்டு – 5 பல்
வர மிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காய தூள் – கால் ஸ்பூன்
செய்முறை
முதலில் ஊறவைத்த பருப்பு, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு பல், புளி, மஞ்சள்தூள், உப்பு, மிளகாய் தூள் என அனைத்தும் சேர்த்து குக்கரில் தேவையான அளவு தண்ணீர் வைத்து நான்கைந்து விசில் வரும் வரை வேவைத்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் சமைத்த பருப்பு கலவையை ஒரு மத்தால் நன்றாக மசித்து தனியாக வைக்கவேண்டும். ஒரு கடாயில் நான்கு ஸ்பூன் நெய் ஊற்றவேண்டும்.
அதனுடன் உளுத்தம் பருப்பு, கடுகு, சீரகம் சேர்த்து பொரியவிடவேண்டும். கடுகு பொரிந்தவுடன், வர மிளகாய், கறிவேப்பிலை, பெருங்காயம் மற்றும் தட்டிய பூண்டு பல் சேர்த்து தாளிக்கவேண்டும்.
அதனுடன் வெந்த பருப்பு, கீரை கலவையை சேர்த்து நன்றாகக் கலந்து, மேலும் சில நிமிடங்கள் கீரை வதங்கி வரும் வரை கொதிக்கவிடவேண்டும்.
சுவையான பருப்பு கீரை கூட்டு தயார். இதை சூடான சாதத்தில் நெய்யுடன் கலந்து சாப்பிட சுவை அள்ளும்.
இதை அடிக்கடி குழந்தைகளுக்கு கட்டாயம் செய்து கொடுக்கவேண்டியது அவசியம். ஏனெனில் குழந்தைகளுக்கு வளரும் பருவத்தில் கீரையை அதிகம் உணவில் சேர்ப்பது நல்லது.
கீரையில் உள்ள நன்மைகள்
கீரைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வயிறு உப்புசத்தை குறைக்கிறது. உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. ஆரோக்கியமாக வயோதிகத்தை அடைய உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது.
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நன்முறையில் பராமரிக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. செரிமான எண்சைம்களை வலுப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.
தினமும் உணவில் ஒரு கீரை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.
சரியான அளவு தினமும் அல்லது வாரத்தில் கட்டாயம் மூன்று நாட்கள் என முறைவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்