தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Keerai Charu : ஈசியா செய்யவும் ருசியா சாப்பிடவும் கீரைய இப்படி செஞ்சு பாருங்க! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

Keerai Charu : ஈசியா செய்யவும் ருசியா சாப்பிடவும் கீரைய இப்படி செஞ்சு பாருங்க! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

Priyadarshini R HT Tamil
Jun 03, 2024 05:20 AM IST

Keerai Charu : ஈசியா செய்யவும் ருசியா சாப்பிடவும் கீரைய இப்படி செஞ்சு பாருங்க. இந்த கீரைசாறால் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

Keerai Charu : ஈசியா செய்யவும் ருசியா சாப்பிடவும் கீரைய இப்படி செஞ்சு பாருங்க! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!
Keerai Charu : ஈசியா செய்யவும் ருசியா சாப்பிடவும் கீரைய இப்படி செஞ்சு பாருங்க! ஆரோக்கியமும் அதிகரிக்கும்!

ட்ரெண்டிங் செய்திகள்

கீரையில் உள்ள ஆரோக்கிய நன்மைகளை விளக்கிக்கூறும் அவர், நாம் கீரையை அன்றாக உணவில் ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்தார்.

கீரையில் உள்ள அத்தனை ஆரோக்கிய நன்மைகளுக்காகவே எப்போதும் சூப்பர் ஃபுட்டான கீரையில் இருந்து ஒரு சூப்பர் ரெசிபி கீரைச்சாறு செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினம் ஒரு கீரை அல்லது வாரத்தில் மூன்று நாட்கள் கீரை அல்லது உணவில் அடிக்கடி கீரை என கீரையை சாப்பிடவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

தேவையான பொருட்கள்

அரைக்கீரை – 2 கப்

சின்ன வெங்காயம் – 10 (பொடியாக நறுக்கியது)

புளி – பெரிய எலுமிச்சை அளவு

வெந்தயம் – கால் ஸ்பூன்

கடுகு - கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன்

மஞ்சள்தூள் – அரை ஸ்பூன்

நல்லெண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

அரைக்க தேவையான பொருட்கள்

சீரகம் – ஒரு ஸ்பூன்

வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

துவரம் பருப்பு – அரை டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 9

சின்ன வெங்காயம் – ஒரு கைப்பிடியளவு

பூண்டு பற்கள் – 10

செய்முறை

புளியை கொதிக்கும் நீரில் 30 நிமிடங்கள் ஊறவைக்கவேண்டும். பின் 2 கப் தண்ணீர் ஊற்றி கரைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு சிறிய சட்னி ஜாரில் சீரகம், வர மல்லி, துவரம் பருப்பு, மிளகாய் வற்றல், சின்ன வெங்காயம் மற்றும் பூண்டு பற்கள் சேர்த்து தண்ணீர் விடாமல் அரைக்கவேண்டும்.

மண்சட்டியில் நல்லெண்ணெய்விட்டு சூடானவுடன், அதில் வெந்தயம் சேர்த்து சிவந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளித்துக்கொள்ளவேண்டும். பின்னர் பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும்.

வெங்காயம் வதங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள விழுதை சேர்த்து கைவிடாமல் வதக்கவேண்டும். அவை நன்றாக வதங்கி பச்சை வாசம் போனவுடன், புளிக்கரைசல் சேர்த்து மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.

புளிக்கரைசல் கொதிக்க ஆரம்பித்தவுடன், பொடியாக நறுக்கிய அரைக்கீரை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேகவிடவேண்டும்.

கீரை புளிக்கரைசலில் நன்றாக வெந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்து மேலும் சில நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கவேண்டும். சுலபமான கீரைச்சாறு குழம்பு தயார். இதற்கு வாழைக்காய் பொரியல் மற்றும் பொட்டுக்கடலை துவையல் வைத்து சூடாக பரிமாறவேண்டும்.

கீரையை வெறுக்கும் குழந்தைகள் கூட இதுபோல் செய்துகொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். எனவே கீரையை உங்கள் உணவில் அடிக்கடி சேர்த்து பயன்பெறுங்கள்.

கீரையில் உள்ள நன்மைகள்

கீரைகள் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. வயிறு உப்புசத்தை குறைக்கிறது. உங்கள் சருமத்தை பளபளப்பாக்குகிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. ஆரோக்கியமாக வயோதிகத்தை அடைய உதவுகிறது. வீக்கத்தை குறைக்கிறது.

ரத்தத்தில் குளுக்கோஸ் அளவை நன்முறையில் பராமரிக்க உதவுகிறது. குடல் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது. செரிமான எண்சைம்களை வலுப்படுத்துகிறது. நச்சுக்களை வெளியேற்றுகிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது.

தினமும் உணவில் ஒரு கீரை கட்டாயம் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஆனால், கீரைகளை அதிகம் எடுத்துக்கொள்ளக்கூடாது. அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் உடல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.

சரியான அளவு தினமும் அல்லது வாரத்தில் கட்டாயம் மூன்று நாட்கள் என முறைவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

சமையல் செய்முறை இந்த வீடியோவில் உள்ளது. 

 

WhatsApp channel

டாபிக்ஸ்