கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத்; காரசாரமாக, நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்து! இதோ ரெசிபி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத்; காரசாரமாக, நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்து! இதோ ரெசிபி!

கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத்; காரசாரமாக, நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்து! இதோ ரெசிபி!

Priyadarshini R HT Tamil
Jan 06, 2025 02:43 PM IST

கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்வது எப்படி என்று பாருங்கள்.

கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத்; காரசாரமாக, நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்து! இதோ ரெசிபி!
கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத்; காரசாரமாக, நாவின் சுவை அரும்புகளுக்கு விருந்து! இதோ ரெசிபி!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் கொண்ட தக்காளியில் இருந்து நாம் எண்ணற்று உணவுகளை தயாரிக்க முடியும். இது அன்றாட பயன்பாட்டில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. தக்காளியைப் பயன்படுத்தி தற்போது கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் செய்வது எப்படி என்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

அரிசி – ஒரு கப்

(அரை மணி நேரம் ஊறவைத்துக்கொள்ளவேண்டும்)

நெய் – ஒரு ஸ்பூன்

எண்ணெய் – ஒரு ஸ்பூன்

பிரியாணி இலை – 1

பட்டை – 1

கிராம்பு – 2

ஸ்டார் சோம்பு – 1

ஏலக்காய் – 1

பெரிய வெங்காயம் – 1 (நீளவாக்கில் நறுக்கியது)

தக்காளி – 1 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை பட்டாணி – ஒரு கப்

பச்சை மிளகாய் - 1

இஞ்சி – பூண்டு விழுது – ஒரு ஸ்பூன்

கரம் மசாலா – ஒரு ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

ஊறவைத்து அரைக்க தேவையான பொருட்கள்

தக்காளி – 2

பூண்டு – 4 பல்

(இதை மட்டும் சூடான தண்ணீரில் சேர்த்து அரை மணி நேரம் ஊறவைத்துவிடவேண்டும். பின்னர் மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல மையாக அரைத்துக்கொள்ளவேண்டும்)

மல்லித்தழை – சிறிது

செய்முறை

முதலில் ஒரு குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானவுடன், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஸ்டார் சோம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவேண்டும். பச்சை பட்டாணியையும் சேர்த்துக்கொள்ளவேண்டும். அடுத்து தக்காளி சேர்த்து வதங்கியவுடன், கறிவேப்பிலை இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவேண்டும். பச்சை மிளகாய் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவேண்டும்.

அடுத்து அரைத்த விழுது மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். இவையனைதுதும் பச்சை வாசம் போனவுடன், ஊறவைத்த அரிசியைச் சேர்த்து நன்றாக கிளறி, இரண்டே கால் கப் தண்ணீர் சேர்த்து, 4 விசில் விட்டு எடுத்தால் சூப்பர் சுவையான கர்நாடகா ஸ்பெஷல் தக்காளி பாத் தயார். மல்லித்தழை தூவி இறக்கினால் மணம் ஊரையே கூட்டும். சுவையிலும் தெறிக்கவிடும். இதற்கு தொட்டுக்கொள்ள தயிர் பச்சடி போதுமானது.

இதை உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் ருசிப்பீர்கள். உங்களுக்கு இந்த ரெசிபி கட்டாயம் பிடிக்கும். எனவே ஒருமுறை கட்டாயம் முயற்சி செய்து பாருங்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.