Karnataka Monkey Fever : கர்நாடகாவை அச்சுறுத்தி வரும் குரங்கு காய்ச்சல்! அறிகுறிகள் இதுதான்!
Karnataka Monkey Fever : கர்நாடகாவை அச்சுறுத்தி வரும் குரங்கு காய்ச்சல்! அறிகுறிகள் இதுதான்!
கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ், இது குரங்கு காய்ச்சல் என்று அழைக்கப்படுகிறது. இது கர்நாடகா மாநிலம் உத்தாரா கன்னடா மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இங்கு 31 பேர் இந்த குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாதிக்கப்பட்டவர்களுள், 12 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மற்றவர்களுக்கு வீடுகளிலே சிகிச்சையளிக்கப்படுகிறது. அனைவரும் நலமாக உள்ளனர் மற்றும் யாரும் கவலைக்கிடமாக இல்லை என்பது ஆறுதலான செய்தி, இதில் பாதிக்கப்பட்டது பெரும்பாலும் சித்தாப்பூர் தாலுகாவைச் சேர்ந்தவர்கள் என்று பிடிஐ தெரிவிக்கிறது.
குரங்கு காய்ச்சல் என்று வழக்கில் உள்ள கியாசனூர் ஃபாரஸ்ட் டிசீஸ் என்பது அதிகளவில் பரவிவரும் நோய். இது முதலில் வனப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விலங்குகளில் உடலில் உள்ள உண்ணிகள் கடிப்பதால் ஏற்படுகிறது.
இந்தியாவில் பல இடங்களில் இந்நோய் பரவி வருகிறது. குறிப்பாக கோவா, கர்நாடகா மற்றும் மஹாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் அதிகளவில் பரவிவருகிறது. இந்த வைரஸ் முதலில் குரங்குகளில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. குறிப்பாக லங்கூர் குரங்குகளில் இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. பின்னர் சுற்றுப்புறத்தில் பல்கி பெருகுகிறது.
இதன் அறிகுறிகள் காய்ச்சல், கடுமையான தலைவலி, தசையில் வலி மற்றும் சோர்வு ஆகியவை ஆகும். நோயாளிகளுக்கு உடலில் குளிர்ச்சி, தலைசுற்றல் மற்றும் கண் கூச்சம் ஆகியவை ஏற்படுகிறது.
இந்த நோய் முற்றினால், வயிறு தொடர்பான உபாதைகள், வாந்தி, வயிற்றுப்போக்கு உள்ளிட்டவைகள் ஏற்படுகிறது. இன்னும் அதிகமானால், மூக்கில் ரத்தம் வடிதல், பற்களின் வேர்களில் ரத்தம் வடிதல் ஆகியவை ஏற்படுகிறது. நரம்பியல் கோளாறுகளும் ஏற்படுகிறது. மன குழப்பங்களும் ஏற்படுகிறது.
இந்த அறிகுறிகள் குறித்து, முன்னதாகவே கண்டுபிடித்துவிட்டால் போதும், மருந்து எடுத்துக்கொண்டு, இந்த நோயை விரட்டலாம். இது ஒரு விலங்கியல் நோய், விலங்குகளின் உடல்களில் ஒட்டி வாழும் ஒட்டுண்ணிகளில் கடிப்பதால் ஏற்படுகிறது.
தொற்று ஏற்பட்ட 3 முதல் 5 நாளில் அறிகுறிகள் தென்படும்
குரங்கு காய்ச்சல் ஏற்பட்ட 3 முதல் 5 நாளில் இதன் அறிகுறிகள் தோன்றும். அது அதிக காய்ச்சல், கடும் உடல் வலி, தலைவலி, கண் சிவத்தல், சளி மற்றும் இருமல் ஆகியவை ஆகும். தற்போது கர்நாடகாவில் 31 பேருக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. 12 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டடுள்ளனர். அனைவரும் நலமாக உள்ளனர். யாரும் கடுமையாக பாதிக்கப்படவில்லையென கர்நாடக அரசு தெரிவித்துள்ளது.
போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கிராம பஞ்சாயத்து அளவிலும், கிராம சபை கூட்டங்களில் சுகாதார அதிகாரிகள் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்கள். மாநிலத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளில் போதிய வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்நோயிலிருந்து காத்துக்கொள்ள மக்கள், சுகாதாரத்தை பேண வேண்டும். தொடர்ந்து கைகளை கழுவுவது, விலங்குகளுடன் தொடர்பில் இருப்பதை தவிர்ப்பது, குறிப்பாக உணவுகளை கொறித்து உண்ணும் எலி உள்ளிட்ட விலங்குகளிடம் இருந்து விலகியிருக்க வேண்டும். பாதிக்கப்பட்ட விலங்குகளை கையாளும்போது பாதுகாப்பாக இருக்க வேண்டும். அதிக ஆபத்துக்கள் நிறைந்த பகுதிகளில் வசிப்பவர்கள் கட்டாயம் தடுப்பூசிகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
உங்கள் சுற்றுப்புறத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது மிகவும் அவசியம். தொற்று பரவுவதை தடுக்க வேட்டை விலங்குகளில் உணவுகளை தவிர்க்க வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொள்ள வேண்டும். மருத்துவர்களின் அறிவுரைகளை கேட்டு அதற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ள வேண்டும்.
முன்னதாகவே கண்டுபிடித்து, தனிமைப்படுத்தி சிகிச்சையளித்தால் அவர்கள் குணமடைவார்கள். இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்நோய் பரவும் ஆபத்தை குறைக்காலாம். குரங்கு காய்ச்சல் அல்லது குரங்கு அம்மை, வைரஸ்களால் பரவும் ஒரு விலங்குகளால் பரவக்கூடிய நோய்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்