தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kara Kuzhipaniyaram Kara Kuzhipaniyaram Can Be Used For Both Dip And Snacks Full Of Flavor

Kara Kuzhipaniyaram : கார குழிப்பணியாரம்; டிபஃன், ஸ்னாக்ஸ் என இரண்டுக்கும் பயன்படும்! ருசியும் நிறைந்தது!

Priyadarshini R HT Tamil
Mar 31, 2024 07:01 AM IST

Kara Kuzhipaniyaram : வழக்கமான டிபஃன் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இட்லி, தோசை மாவிலே இன்ஸ்டன்ட் காரம் அல்லது இனிப்பு குழிப்பணியாரம் செய்து கொடுத்து அசத்தலாம்.

Kara Kuzhipaniyaram : கார குழிப்பணியாரம்; டிபஃன், ஸ்னாக்ஸ் என இரண்டுக்கும் பயன்படும்! ருசியும் நிறைந்தது!
Kara Kuzhipaniyaram : கார குழிப்பணியாரம்; டிபஃன், ஸ்னாக்ஸ் என இரண்டுக்கும் பயன்படும்! ருசியும் நிறைந்தது!

ட்ரெண்டிங் செய்திகள்

பச்சரிசி – ஒரு கப்

உளுத்தம்பருப்பு – அரை கப்

வெந்தயம் – அரை ஸ்பூன்

தேங்காய்த்துருவல் – அரை கப்

பச்சை மிளகாய் – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

இஞ்சி – 2 ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)

வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கியது)

கறிவேப்பிலை – 2 கொத்து

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – ஒரு ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

குழிப்பணியாரம் சில நேரங்களில் காலை உணவாகவும், மாலை நேர ஸ்னாக்ஸ் என இரண்டாகவும் உட்கொள்ளப்படுகிறது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒன்றாகவும் குழிப்பணியாரம் இருக்கிறது.

வழக்கமான டிபஃன் சாப்பிட மறுக்கும் குழந்தைகளுக்கு இட்லி, தோசை மாவிலே இன்ஸ்டன்ட் காரம் அல்லது இனிப்பு குழிப்பணியாரம் செய்து கொடுத்து அசத்தலாம்.

இனிப்பு பணியாரம் செய்வதற்கு இதே மாவில் தனியாக 2 டேபிள் ஸ்பூன் கடலை பருப்பு சேர்த்துக்கொள்ளலாம். அது பணியாரத்தின் சுவையை வித்யாசமாகக் காட்டும். 

அரிசியே சேர்க்காமல் பாசிபருப்பில் வெறும் இனிப்பு பணியாரம் செய்யலாம். அது இன்னும் சுவை நிறைந்ததாக இருக்கும். பணியாரத்தில் தேங்காயை துருவியும் சேர்க்கலாம் அல்லது பல்லாக நறுக்கி நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம். அதுவும் பணியாரத்தின் சுவையை அதிகரிக்கும். 

தாளிப்புடன் சிறிது எள்ளு சேர்த்து வறுத்தும் போடலாம். இரண்டு பணியாரத்துக்குமே எள்ளு வறுத்து சேர்க்க சுவை அள்ளும். 

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் இட்லி அரிசி, பச்சரிசி, உளுத்தம்பருப்பு மற்றும் வெந்தயம் சேர்த்து இரண்டு முறை கழுவிக் கொள்ளவேண்டும். பின் போதிய நீர் விட்டு 3 முதல் 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

பின் கிரைண்டரில் அல்லது மிக்ஸி ஜாரில் தேவையான அளவு தண்ணீர் விட்டு நைசாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து 6 முதல் 8 மணி நேரம் புளிக்க வைக்கவேண்டும்.

கடாயில் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். பின் பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி சேர்த்து வதக்கவேண்டும். அவை வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவேண்டும். அவை வதங்கியதும் தேங்காய்த்துருவல் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பை அணைத்துவிடவேண்டும்.

புளித்த மாவில் வதக்கியவற்றை சேர்த்து நன்றாக கலந்துகொள்ளவேண்டும்.

குழிப்பணியார கல்லை சூடாக்கி ஒவ்வொரு குழியிலும் 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய்விட்டு சூடானவுடன், ஒரு டேபிள் ஸ்பூன் மாவை ஒவ்வொரு குழியிலும் ஊற்றி மூடிவைத்து குறைந்த சூட்டில் வேகவிடவேண்டும்.

கீழ்புறம் பொன்னிறமாக மாறியதும் மெதுவாக திருப்பிப்போட்டு மேலும் சில நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும். பஞ்சு போல மிருதுவான கார குழிப்பணியாரம் தயார். சூடாக தேங்காய் சட்னி‌ அல்லது தக்காளி சட்னியோடு பரிமாற சுவை அள்ளும்.

இதேபோல் தாளிப்பு பொருட்கள் சேர்த்தற்கு பதிலாக வெல்லம், முந்திரி, தேங்காய் சேர்த்து செய்தால் இனிப்பு பணியாரம் தயார்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

 

 

 

 

WhatsApp channel

டாபிக்ஸ்