தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kambu Koozh : கொளுத்தும் வெயிலை அடித்து துரத்தும் கம்மங்கூழ்! பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

Kambu Koozh : கொளுத்தும் வெயிலை அடித்து துரத்தும் கம்மங்கூழ்! பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

Priyadarshini R HT Tamil
Apr 05, 2024 03:26 PM IST

Kambu Koozh : கொளுத்தும் வெயிலை அடித்து துரத்தும் கம்மங்கூழ் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

Kambu Koozh : கொளுத்தும் வெயிலை அடித்து துரத்தும் கம்மங்கூழ்! பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?
Kambu Koozh : கொளுத்தும் வெயிலை அடித்து துரத்தும் கம்மங்கூழ்! பாரம்பரிய முறையில் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

தண்ணீர் – 4 கப்

மோர் – 4 கப்

உப்பு – தேவையான அளவு

தொட்டுக்கொள்ள தேவையான பொருட்கள்

பெரிய வெங்காயம் – 1 (நீள வாக்கில் நறுக்கியது)

பச்சை மிளகாய் – 1

ஊறுகாய்

வடகம்

மிளகாய் வத்தல் வறுத்தது

செய்முறை 

உடைத்த கம்பை குக்கரில் சேர்த்து, தண்ணீருடன் மிதமான தீயில் 4 விசில் விடவேண்டும்.

குக்கர் ரிலீஸ் ஆனவுடன், அதை அடுப்பில் வைத்து கெட்டியாகும் வரை கிளறி ஆறவிடவேண்டும்.

ஆறியவுடன், உருண்டைகளாக உருட்டிக்கொள்ள வேண்டும். இந்த உருண்டைகளை ஒரு பாத்திரத்தில் சேர்த்து அவை மூழ்கும் அளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். தண்ணீர் சேர்க்கும்போது உருண்டைகள் உடைந்துவிடக்கூடாது. இதை ஒரு மணி நேரம் ஊறவிடவேண்டும். (இதை ஓரிவு ஃபிரிட்ஜில் வைத்தும் ஊறவைத்துக்கொள்ளலாம்)

ஒரு மணிநேரம் ஊறவைக்க பிரிட்ஜிலும் வைத்துக்கொள்ளலாம். பின்னர் எடுத்து நன்றாக கட்டியில்லாமல் கரைக்க வேண்டும். பின்னர் மோர், தண்ணீர், உப்பு சேர்த்து நல்ல கூழ் பதம் அல்லது அதைவிட தண்ணீராக கரைத்துக்கொள்ள வேண்டும்.

இதை தொட்டுக்கொள்ள கொடுத்துள்ளவற்றுடன் பரிமாறினால், சொர்கம்தான்.

வெயிலுக்கு இதமானது. வெயில் காலத்தில் ஏற்படும் உடல் சூட்டை தணிக்கக்கூடியது.

கம்பில் உள்ள சத்துக்கள் மற்றும் நன்மைகள்

100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.

கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை பொறுமையான செரிமானம் நடைபெற உதவுகிறது. இதனால் குளுக்கோஸை நீண்ட நாட்களுக்கு சரியான அளவில் பராமரிக்கிறது. எனவே கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது – இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.

சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது. இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.

அல்சர் மற்றும் அசிடிட்டிக்கு மருந்தாகிறது – வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.

மலச்சிக்கலை போக்குகிறது – சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது – கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.

எலும்பை வலுவாக்குகிறது – கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்து உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது.

கொழுப்பை குறைக்கிறது – கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தை உணவு – கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது – உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது.

உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது.

குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.

WhatsApp channel