சத்தான கம்பு இட்லியும் ருசியான வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பும் செம!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  சத்தான கம்பு இட்லியும் ருசியான வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பும் செம!

சத்தான கம்பு இட்லியும் ருசியான வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பும் செம!

I Jayachandran HT Tamil
Jan 13, 2023 09:19 PM IST

சத்தான கம்பு இட்லியும் ருசியான வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பும் செய்வது குறித்து இங்கு பார்க்கலாம்.

வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பு
வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பு

வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பு செய்யத் தேவையான பொருட்கள்-

1 கட்டு வெந்தயக் கீரை

1 குழி கரண்டி எண்ணெய்

1 கைப்பிடி சின்ன வெங்காயம்

1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது

1 கப் உரித்த மொச்சை

1உருளைக்கிழங்கு

4 கத்திரிக்காய்

1 மேஜை கரண்டி மிளகாய் தூள்

2 மேஜை கரண்டி மல்லித்தூள்

1/4 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

1 தேக்கரண்டி மஞ்சள் தூள்

1 துண்டு தேங்காய்

3 தக்காளி

தேவைக்கேற்ப உப்பு

வெந்தயக்கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்பு செய்முறை-

ஸ்டெப் 1

சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காய விழுதை சேர்த்து வதக்கவும். கூடவே இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்.

ஸ்டெப் 2

மிளகாய் தூள் மஞ்சள் தூள் மல்லித்தூள் கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பச்சை மொச்சை அதற்கு தேவையான உப்பு சேர்த்து வதக்கி கூடவே உருளைக்கிழங்கு நறுக்கி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி போட்டு காய் என்பது சதவீதம் வேக விடவும்.

ஸ்டெப் 3

மொச்சைக்காய் முக்கால் பதம் வெந்தபின் வெந்தயக்கீரை மற்றும் கத்தரிக்காய் நறுக்கி சேர்த்து கரம் மசாலா தூள் சேர்த்து மேலும் 10 நிமிடங்கள் சிறு தீயில் வேக விடவும்.

ஸ்டெப் 4

குழம்புக்குத் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.

ஸ்டெப் 3

கடைசியாக தேங்காய், தக்காளியை நைசாக அரைத்து குழம்பில் ஊற்றி உப்பு சரி பார்த்து நன்றாக கொதித்த பின் அடுப்பை அணைத்து இறக்கவும்.

கம்பு இட்லி
கம்பு இட்லி

அடுத்ததாக கம்பு இட்லி செய்யலாம்.

கம்பு இட்லி செய்யத் தேவையான பொருட்கள்-

1 கப் கம்பு

1 கப் இட்லி அரிசி

1/2 கப் உருட்டு உளுந்தம் பருப்பு

1/2 டீஸ்பூன் வெந்தயம்

தேவையானஅளவு உப்பு

கம்பு இட்லி செய்முறை-

ஸ்டெப் 1

மேற் கூறிய அளவுகளில் தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக தண்ணீரில் போட்டு நன்றாக கழுவிக் கொள்ளவும். ஐந்து முதல் ஆறு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.

ஸ்டெப் 2

பிறகு மிக்ஸி ஜாரில் ரவை பதத்திற்கு கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும். உப்பு தேவையான அளவு சேர்த்து கலந்து கொள்ளவும்.

ஸ்டெப் 3

பத்து மணி நேரம் வரை மாவை புளிக்க விடவும். பிறகு மாவை கரண்டியில் நன்கு கலந்து இட்லி தட்டில் ஊற்றி 10 நிமிடம் வரை வேக விடவும்.

ஸ்டெப் 4

வெந்தவுடன் எடுத்து சுட சுட தட்டில் ஹாட்பாக்ஸில் எடுத்து வைக்கவும். ஆரோக்கியமான இட்லி தயார். இட்லி மிருதுவாக இருக்கும்.

இனி ஏற்கெனவே செய்து வைத்துள்ள வெந்தயக் கீரை மொச்சை கத்திரிக்காய் குழம்புடன் இந்த இட்லியை தட்டில் வைத்துப் பரிமாறவும்.

Whats_app_banner

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.