தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Kamanjoru Gumanjoru Prevents Colon Cancer Delicious To Eat With Fish Broth

Kamanjoru : குடல் புற்றுநோயை தடுக்கும் கம்மஞ்சோறு; மீன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்!

Priyadarshini R HT Tamil
Feb 20, 2024 05:28 PM IST

Kamanjoru : குடல் புற்றுநோயை தடுக்கும் கம்மஞ்சோறு; மீன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்!

Kamanjoru : குடல் புற்றுநோயை தடுக்கும் கம்மஞ்சோறு; மீன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்!
Kamanjoru : குடல் புற்றுநோயை தடுக்கும் கம்மஞ்சோறு; மீன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்! (home cooking)

ட்ரெண்டிங் செய்திகள்

தண்ணீர் – இரண்டரை கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கம்பை ஒருமுறைக்கு இருமுறை சுத்தமாக கழுவவேண்டும். 15 நிமிடம் முதல் அரை மணி நேரம் வரை ஊறவைக்க வேண்டும்.

மிக்ஸியில் நன்றாக உடைத்துக்கொள்ள வேண்டும். குருணை பதத்தில் இருக்க வேண்டும்.

நீங்கள் உடைத்தும் செய்யலாம் அல்லது முழு கம்பையும் வைத்து செய்யலாம். உடைத்து செய்யும்போது அது விரைவில், வெந்துவிடுகிறது.

உடைந்த கம்பு பருப்புடன் உப்பு மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து, குக்கரில் வைத்து வேக வைத்துக்கொள்ளுங்கள். இதை 4 முதல் 5 விசில்கள் வேகவிடுங்கள். குக்கர் விசில் அடங்கியவுடன், எடுக்க வேண்டும். இது சாதாரண அரிசியைவிட வேக கொஞ்சம் கூடுதல் நேரம் எடுத்துக்கொள்ளும்.

இதை ஊறுகாய் அல்லது காய்கறிகள், சின்ன வெங்காயம், அசைவ வறுவல்கள், கிரேவிகள் என எதனுடன் வேண்டுமானாலும் பரிமாறாலாம். எனவே, சாதத்துக்கு பதில் வாரத்தில் ஒரு நாள் இதை செய்து சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியமும் கிடைக்கும். இதை மீன் குழம்புடன் சாப்பிட சுவை அள்ளும்.

குக்கரில் சமைக்காவிட்டால், நேரடியாக பாத்திரத்தில் வைத்தும் சமைத்துக்கொள்ளலாம். நேரடியாக சமைத்தாலும் கம்பு வேக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும்.

கம்பின் நன்மைகள்

100 கிராம் கம்பில் புரதச்சத்துக்கள் 10.96 கிராம், நார்ச்சத்து 11.49 கிராம், கொழுப்பு 5.43 கிராம், கார்போஹைட்ரேட்ஸ் 61.78 கிராம் உள்ளது.

கம்பு நீரிழிவு நோய்க்கு சிறந்தது. கம்பில் கார்போஹைட்ரேட் சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை பொறுமையான செரிமானம் நடைபெற உதவுகிறது. இதனால் குளுக்கோஸை நீண்ட நாட்களுக்கு சரியான அளவில் பராமரிக்கிறது. எனவே கம்பு நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சிறந்த தேர்வாக உள்ளது.

இதய ஆரோக்கியத்துக்கு நல்லது – இதில் உள்ள நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பை குறைக்கும் பொருட்கள், இதய நோயாளிகளுக்கு சிறந்தது.

சிலியாக் நோய்கள் எனப்படும் குளுட்டன் அழற்சி மற்றும் குளுட்டன் ஏற்றுக்கொள்ளாமைக்கு சிறந்தது – இது குளுட்டன் ஃப்ரியாக இருப்பதால் இதை எல்லோருக்கும் பொருந்துகிறது.

அல்சர் மற்றும்அசிடிட்டிக்கு மருந்தாகிறது – வயிற்றில் உள்ள அசிடிட்டியை போக்குகிறது. இதனால் அல்சர் ஏற்படாமல் தவிர்க்கப்படுகிறது.

மலச்சிக்கலை போக்குகிறது – சிறந்த குடல் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகிறது. இதை அவ்வப்போது எடுத்துக்கொள்வதால் மலச்சிக்கல் நீங்குகிறது. அதற்கு காரணம் இது நார்ச்சத்து நிறைந்த உணவாக உள்ளது.

சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு புரதச்சத்தை வழங்குகிறது – சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு இறைச்சி மற்றும் மீன் உணவுகளில் இருந்து கிடைக்கும் புரதச்சத்து கிடைக்காமல் போகிறது. 

கம்பு அந்த குறையை போக்கி, சைவ உணவு மட்டுமே உண்பவர்களுக்கு தேவையான புரதச்சத்தை வழங்குகிறது. இதை ராஜ்மா, பாசிபருப்பு, கொண்டடைக்கடலை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடும்போது, அது உடலுக்கு மேலும் பல நன்மைகளை வழங்குகிறது.

ரத்த அழுத்தத்தை குறைக்கிறது – கம்பில் பொட்டாசியச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அவை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறந்தது. பொட்டாசியச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது உங்கள் உடலில் அதிகப்படியாக உள்ள சோடியச்சத்துக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் ரத்த அழுத்தம் குறைகிறது.

எலும்பை வலுவாக்குகிறது – கம்பில் உள்ள அதிக பாஸ்பரஸ் சத்து உங்கள் உடலில் உள்ள எலும்பை இரும்பாக்குகிறது.

கொழுப்பை குறைக்கிறது – கம்பில் போதிய அளவு கொழுப்புச்சத்து உள்ளது. இது அதிக கொழுப்பு உள்ள நோயாளிகளுக்கு நல்லது.

ஊட்டச்சத்து நிறைந்த குழந்தை உணவு – கம்பு எளிதில் செரிமானமாகக்கூடிய ஒரு சிறு தானியம். எனவே குழந்தைகளுக்கும் எளிதாக செரித்துவிடக்கூடியது என்பதால், குழந்தைகள் உணவில் அதிகம் சேர்க்கப்படுகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது – உடலில் செல்கள் இழப்பை தடுக்கிறது. விரைவில் வயோதிக தோற்றம் ஏற்படுவது தவிர்க்கப்படுகிறது. அல்சைமர்ஸ், பார்க்கின்சன்ஸ் மற்றும் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. காயங்களை விரைந்து குணமாக்குகிறது.

உடல் எடையை பராமரிக்கவும், பருமனை குறைக்கவும் உதவுகிறது.

குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது. கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் சிறந்த உணவாகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

https://twitter.com/httamilnews

https://www.facebook.com/HTTamilNews

https://www.youtube.com/@httamil

Google News: https://bit.ly/3onGqm9

WhatsApp channel

டாபிக்ஸ்