Kalyana Virundhu Sambar : ‘கல்யாண சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம்; விருந்து சாம்பார் வீட்டிலே வேண்டுமா? இதோ ரெசிபி!
Kalyana Virundhu Sambar : கல்யாண விருந்து சாம்பார் வீட்டிலேயே செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்
இளசான முருங்கைக்காய் – 1
உருளைக்கிழங்கு – 1
பீன்ஸ் – 4
சிறிய கத்திரிக்காய் – 2
சின்ன வெங்காயம் – 12
சிறிய நாட்டுத் தக்காளி -2
வாழைக்காய் -1
கேரட் – 1
தேங்காய் துருவல் - அரை மூடி
புளி – எலுமிச்சை அளவு
மல்லித்தூள் - ஒன்றரை ஸ்பூன்
வரமிளகாய் தூள்- அரை ஸ்பூன்
சாம்பார் தூள் – 2 ஸ்பூன்
துவரம் பருப்பு – 100 கிராம்
மஞ்சள் தூன் – கால் ஸ்பூன்
பெருங்காயத் தூள் – ஒர சிட்டிகை
வெந்தயம் – கால் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சிரகம் – அரை ஸ்பூன்
வரமிளகாய் – 2
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மல்லித்தழை – ஒரு ஸ்பூன் (பொடித்தது)
எண்ணெய் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
துவரம் பருப்பை குழைய வேக வைத்து எடுத்து தனியாக வைக்க வேண்டும். தேங்காயைத் துருவி அதை விழுதாக அரைத்து எடுத்து வைக்க வேண்டும். புளியை நன்கு திக்கான கரைசலாகக் கரைத்து வைக்க வேண்டும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி அனைத்து காய்களையும் சாம்பாரில் போடும் அளவு வெட்டிக் கொள்ள வேண்டும். சின்ன வெங்காயத்தை தோல் உரிந்து இரண்டாக வெட்டினால் போதும்.
கடாயில் எண்ணெய்விட்டு, அது சூடானவுடன், நறுக்கிய காய்கறிகளை சேர்த்து எண்ணெயில் நன்றாக வதக்க வேண்டும். பின்னர் புளிக்கரைசல், மல்லித்தூள், வரமிளகாய்த் தூள், சாம்பார் தூள், தேவையான அளவு உப்பு சிறிதளவு கொஞ்சம் சேர்த்து ஒருமுறை நன்றாகக் கிளறிவிட்டு ஒரு கொதி வரும் வரை வேகவிட வேண்டும்.
பின்னர் வேக வைத்த துவரம் பருப்பு, தேங்காய் விழுது, தேவையான தண்ணீர் சேர்த்து கிளறி கொதிக்கவிட வேண்டும். கொதி வரும் முன் சிறிதளவு வெல்லம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன், அடுப்பை சிம்மில் வைத்து விட வேண்டும்.
ஒரு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காயவிட்டு, கடுகு, சீரகம், வெந்தயம், 2 வரமிளகாயைக் கிள்ளிப் போட்டு, கறிவேப்பிலை போட்டு நன்றாக தாளித்து அதில் சேர்த்து அடுப்பில் இருந்து இறக்கி வைத்து சாம்பாரில் கொத்தமல்லித் தழைகள் தூவ வேண்டும்.
இதோ ருசி மிகுந்த கல்யாண விருந்துச் சாம்பார் தயார். சூடான சாதத்தில் ஒரு ஸ்பூன் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு இந்த சாம்பாரை ஊற்றி பிசைந்து சாப்பிடுங்கள். சூப்பர் சுவையானதாக இருக்கும். உங்கள் வீட்டில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் மீண்டும், மீண்டும் வேண்டும் என்று கேட்குமளவுக்கு சுவையானதாக இருக்கும். எனவே கட்டாயம் ஒருமுறை ருசித்துப் பாருங்கள்.
நன்றி - வெங்கடேஷ் ஆறுமுகம், ஷ்யாம் ப்ரேம்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்