Kalyana Virundhu Avarai Kootu : கல்யாண வீட்டு அவரைக்காய் கூட்டு; சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் வீட்டிலே செய்யலாம்!
Kalyana Virundhu Avarai Kootu : கல்யாண வீட்டு அவரைக்காய் கூட்டு; சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால் வீட்டிலே செய்யலாம். கல்யாணத்தில் மட்டும் ருசிக்கும் அவரைக்காய் கூட்டு ரெசிபி இதோ உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது.
அவரைக்காயில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. ஒரு கப் அவரைக்காயில் 13 கிராம் புரதம் உள்ளது. இது உங்கள் உடலுக்கும் தேவையான தாவரபுரதத்தைக்கொடுக்கிறது. உங்கள் உணவில் அதிக புரதச்சத்துக்களை சேர்த்துக்கொள்ள விரும்பினால் அவரைக்காய் ஒரு சிறந்த தேர்வு. நார்ச்சத்துக்கள் அதிகம் உள்ளது. ஒரு கப் அவரைக்காயில் 9 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்களின் செரிமான மண்டலத்துக்கு உதவுகிறது. இது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத்தருகிறது. இதில் கலோரிகள் குறைவு. உடல் எடை குறைக்க உதவுகிறது. இதில் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் உள்ளது. இது உங்களுக்கு கொழுப்பை குறைக்க உதவுகிறது. இதில் இரும்புச்சத்துக்கள், மெக்னீசியம், ஃபோலேட், காப்பார், சிங்க், வைட்டமின் பி மற்றும் சி ஆகிய சத்துக்கள் உள்ளன. இது எலும்பு மற்றும் மூளை இயக்கத்துக்கு உதவுகிறது. உங்களின் நோய் எதிர்ப்பு மண்டலத்தையும் அதிகரிக்கிறது. ஆண்டு முழுவதும் அவரைக்காய் அதிகம் கிடைக்கும். இதை நீங்கள் உங்களின் அனைத்து வகை உணவுடனும் சேர்த்துக்கொள்ளலாம். இதை நீங்கள் சாலட், வறுவல், பொரியல், கறி என எதுவேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.
தேவையான பொருட்கள்
கடலை – 2 டேபிள் ஸ்பூன்
பட்டை – 1
கிராம்பு – 4
வரமல்லி – 2 டேபிள் ஸ்பூன்
சீரகம் – அரை ஸ்பூன்
வெந்தயம் – சிறிது
கொப்பரைத் தேங்காய் – 2 டேபிள் ஸ்பூன்
பூண்டு – 8 பல்
இஞ்சி – அரை இன்ச்
புளி – சிறிது
கஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
அவரைக்காய் – கால் கிலோ
நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
உளுந்து – கால் ஸ்பூன்
கடலை பருப்பு – அரை ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
தக்காளி – 2
செய்முறை
ஒரு கடாயில் வேர்க்கடலை, பட்டை, கிராம்பு, வரமல்லி, சீரகம், வெந்தயம், கொப்பரைத் தேங்காய் என அனைத்தையும் சேர்த்து நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
அதை ஆற வைத்ததுக்கொள்ள வேணடும். அரைக்கும்போது அதனுடன் புளி, கஷ்மீரி மிளகாய்த்தூள் சேர்த்து அரைத்துக்கொள்ளவேண்டும். இதனுடன் உப்பும் சேர்த்து நல்ல மையாக தண்ணீர் விட்டு அரைத்துக்கொள்ளவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவேண்டும். மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவேண்டும். பச்சை மிளகாய், தக்காளி என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அனைத்தும் நன்றாக சுருள வறுபட்டு வந்தவுடன், அதில் அரைத்த மசாலா விழுதை சேர்த்துக்கொள்ளவேண்டும்.
பின்னர் கழுவி, சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய அவரைக்காயையும் சேர்த்து நன்றாக வேகவைத்து இறக்கினால், இதன் சுவையும், மணமும் சாப்பிட்டுக்கொண்டே இருக்கத்தூண்டும். இனி கல்யாணி விருந்து அவரைக்காய் கூட்டு சாப்பிட யாரும் கல்யாண வீட்டுக்குச் செல்லமாட்டார்கள். உங்கள் வீட்டுக்கு வருவார்கள்.
இதுபோன்ற எண்ணற்ற சுவை மற்றும் ஆரோக்கியமான ரெசிபிக்களை ஹெச்.டி தமிழ் தினமும் தொகுத்து வழங்கி வருகிறது. மேலும் இதுபோன்ற ரெசிபிக்கள், ஆரோக்கிய குறிப்புகள் மற்றும் தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து எங்கள் இணைய பக்கத்தில் இணைந்திருங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்