மசாலாவில் முக்கிய இடம்பெறும் கல்பாசி! சிறுநீரகக் கற்களை அடித்து விரட்டுவது முதல் எத்தனை நன்மைகள் பாருங்கள்?
மசாலாவில் முக்கிய இடம்பெறும் கல்பாசி, சிறுநீரகக் கற்களை அடித்து விரட்டுவது முதல் எத்தனை நன்மைகள் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

இந்திய உணவுகளில் அதிகம் சேர்த்துக்கொள்ளப்படுவது, இந்த கல்பாசி உங்கள் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கிறது. உங்கள் உணவை சுவை நிறைந்ததாக மாற்றும் மாயம் செய்யும் கல்பாசி, இந்தியாவில் விளையும் பயிராகும். இது உணவுக்கு சுவையைக் கொடுப்பதுடன் உடலுக்கு ஆரோக்கியத்தரும் மசாலாவாகும். கல்பாசி கருப்பு அல்லது பிரவுன் நிறத்தில் இருக்கும். இது இமாச்சல பிரதேசம் முதல் அருணாச்சல பிரதேசம் வரை உள்ள பகுதிகளில் பரவலாக விளைகிறது. இது மரங்களில் வளரும் சாப்பிடக்கூடிய பூஞ்ஜையாகும். மலைகளிலும், மரத்திலும் விளைவிக்கப்படாமல் இயற்கையில் தானாகவே வளரும் தன்மைகொண்டது. இது உணவுக்கு சுவை மற்றும் நிறத்தைக் கொடுக்கிறது. இதை தமிழ்நாடு மற்றும் மஹராஷ்ட்ராவில் அதிகளவில் உணவில் காணலாம். தென்னிந்தியாவிலும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
வலியைக் குறைக்கிறது
கல்பாசி, பல்வேறு தசைவலி, மூட்டு வலி, சுளுக்கு ஆகியவை ஏற்படும்போது வலியைக் குறைக்கிறது. வீக்கத்துக்கு எதிரான, பாக்டீரியாக்களுக்கு எதிரான, பூஞ்ஜைக்கு எதிரான, வைரஸ்களுக்கு எதிரான குணங்களுடன் வலி மற்றும் வீக்கத்தைப் போக்குகிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது
கல்பாசியில் செரிமான எண்சைம்கள் உள்ளது. அது உங்கள் உடலில் செரிமானத்தைத் தூண்ட உதவுகிறது. இது உங்களுக்கு வயிறு தொடர்பான வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், வாந்தி, அதிகப்படியான வாயு மற்றும் உப்புசம் ஆகியவற்றைப் போக்குகிறது. இது ஒட்டுமொத்த செரிமான ஆரோக்கியத்தையும் முறைப்படுத்துகிறது. இதனால் செரிமானம் சீராகிறது.