கடி ஜோக்ஸ் : ‘இதுக்குத்தான் ஊருக்கு ஒரு ஆள் இன் ஆள் அழகு ராஜா வேணும்’ விழுந்து விழுந்து சிரிக்கலாம் வாங்க!
கடி ஜோக்ஸ் : வாழ்க்கையில் விரக்தியின் விழும்பில் இருந்தாலும் நம்மை எழும்பி விடச் செய்யும் மாயம் ஒன்றுக்கு மட்டும் உண்டு. அதுதான் ஜோக்ஸ். இதோ நீங்கள் மனம் விட்டு சிரிக்க சில ஜோக்குகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. சிரித்து மகிழுங்கள்.

எது பெரிசு?
ஒரு டீச்சர் அவங்க ஸ்டூடன்ஸ்கிட்ட எறும்பு பெரிசா? யானை பெரிசான்னு கேட்டாங்க?
அதுக்கு அவங்கள் ஸ்டூடன்ஸ் சொன்னாங்க, அப்படி சொல்ல முடியாது சார். பிறந்த தேதி தெரியணுமே? அப்டீன்னு சொன்னாங்களாம். ஹாஹாஹா!
டாக்டர் கடி இல்லாத ஒரு ஜோக் கண்டன்ட்டா?
ஒரு பேஷன்ட் டாக்டர்கிட்ட, என்ன நாய் கடிச்சிடுச்சு டாக்டர் அப்டீன்னு சொன்னாராம்.
அதுக்கு டாக்டர் எந்த இடத்திலன்னு கேட்டாராம்?
அதுக்கு அந்த பேஷன்ட் சொன்னாராம். பெருமாள் கோயில் சந்துலன்னு… ஹாஹாஹா!
இது என்னடா சோதன?
வெற்றிலையுடன் சேராத பாக்கு எது?
மைசூர் ‘பாக்கு’ தான் வேற எது? ஹாஹாஹா!
எத்தனை தடவ கேட்டாலும் சலிக்காத கடி
மனைவி கணவர் கிட்ட கேட்டாங்க, ஏங்க நீங்க அடிக்கடி கிச்சன் பக்கம் போறீங்கன்னு?
அதுக்கு அந்த கணவர் சொன்னாராம், டாக்டர் என்ன அடிக்கடி சுகர் இருக்கான்னு செக் பண்ணிக்க சொன்னாரு. ஹாஹாஹா!
இது எப்படி இருக்கு?
எனக்கு இன்டர்வ்யூக்கு போறது பிடிக்காதுடான்னு ஒருத்தர் தன்னோட பிரண்ட்கிட்ட சொல்றாரு?
ஏன்டா அப்டி சொல்றன்னு அவரு திருப்பி கேக்குறாரு.
நாலு பேர் கேள்வி கேக்குறமாதிரி நடந்துக்க கூடாதுன்னு எங்கப்பா சொல்லியிருக்காரு டான்னு சொன்னாராம். ஹாஹாஹா!
மேலும் வாசிக்க - இன்னும் இன்னும் ஜோக்ஸ் வேணுமா? அப்போ கிளிக்குங்க பாஸ்
தானம் செய்வீர்
தானத்தில் சிறந்த தானம் எது?
மை‘தானம்’ ஹாஹாஹா!
தேவையா இது?
ஒரு டீச்சர் அவரோட ஸ்டுடன்ட்கிட்ட கேக்குறாரு, ஏன்டா நாய் படம் வரஞ்சிட்டு வாய் மட்டும் வரையாம வெச்சிருக்க?
அதான் வாயில்லா பிராணியாச்சே சார். ஹாஹாஹா!
இந்த டாக்டர்ஸே இப்படித்தான்
டாக்டர் இவ்ளோ மாத்திரைய 2 நாள்ல சாப்பிட்டு முடிக்க சொல்றீங்களே, ஏன்?
ஏன்னா, 2 நாளைக்கப்புறம் எக்ஸ்பையரி டேட் முடிஞ்சிரும்ல. ஹாஹாஹா!
ராமயணத்துகே டஃப் கொடுப்போம்ல?
கும்பகர்ணன் மாதக்கணக்கில் தூங்கினான். அது என்ன காலம்?
அது கொசுவே இல்லாத காலம். ஹாஹாஹா!
அட அட அட என்ன ஒரு அறிவு?
ஒரு மனைவி அவங்க கணவர் கிட்ட கேட்டாங்களாம், எதுக்குங்க ஸ்பூன பாதியா உடைச்சு இருக்கீங்க?
டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிட சொன்னாரு? ஹாஹாஹா!
குத்தி குத்தி குத்தி
முள்ளு குத்தினா ஏன் ரத்தம் வருது?
யாரு குத்துனான்னு பாக்க வருது, ஹாஹாஹா!
ஆறும் அது ஆழம் இல்ல
ஆறும், ஆறும் சேர்ந்தா என்ன வரும்?
வெல்லம் வரும். ஹாஹாஹா!
நீங்க ஒரு வில்வேஜ் விஞ்ஞானி பாஸ்
தங்கச் செயின உருக்கினா தங்கம் வரும், வெள்ளிச் செயின உருக்கினா வெள்ளி வரும். ஆனால் சைக்கிள் செயின உருக்கினா சைக்கிள் வருமா?
ஓட்டல்ல காசு இல்லன்னு சொன்னா மாவாட்ட சொல்லுவாங்க. ஆனா பஸ்ல காசு இல்லன்னு சொன்னா பஸ் ஓட்ட சொல்லுவாங்களா?
இன்றைய சிந்தனை வரிகள்
பிறர் பொறமைபடும் அளவுக்கு வாழ ஆசையில்லை. பிறர் சபிக்காத அளவுக்கு வாழ்ந்தால் போதும்.

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்