Kadi Jokes : ‘சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க’ நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Jokes : ‘சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க’ நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!

Kadi Jokes : ‘சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க’ நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!

Priyadarshini R HT Tamil
Jan 24, 2025 02:05 PM IST

Kadi Jokes : நீங்கள் மனம்விட்டு மகிழ இங்கு சில ஜோக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.

Kadi Jokes : ‘சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க’ நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!
Kadi Jokes : ‘சிரிங்க சிரிங்க சிரிச்சுக்கிட்டே இருங்க’ நீங்கள் வெடித்து சிரிக்க இதோ கடி ஜோக்குகள்!

புனேதான், வேறென்ன? ஹாஹாஹா!

 

தேங்காய் ஏன் கீழ விழுது?

ஏன்னா அது மேல போக முடியாதுல்ல, அதான். ஹாஹாஹா!

 

உலகத்துலயே பணக்கார மீன் எது?

வேற எது? தங்க மீன்தாங்க, ஹாஹாஹா!

 

யாராலயும் அணைக்க முடியாத நெருப்பு எது?

வேற எது, ஃப்ரி ஃபயர்தான். ஹாஹாஹா!

 

இந்தியா, பாகிஸ்தான் இரண்டுக்கும் நடுவில் என்ன இருக்கு?

வேற என்ன? கமாதான் இருக்கு. ஹாஹாஹா!

 

லாவண்யா மேத்ஸ் எக்ஸாம்ல மட்டும் 0 மார்க் எடுப்பாளாம், ஏன்?

ஏன்னா அவுங்க டீச்சர் 0க்குதான் வேல்யூ அதிகம்னு சொல்லியிருக்காரம். ஹாஹாஹா!

 

சின்சான் அவன் நாயோட காதுல பால் ஊத்துனானாம், ஏன்?

ஏன்னா அதான் வாயில்லா ஜீவனாச்சே. அதான் காது வழியா சாப்பாடு குடுக்குறானாம். ஹாஹாஹா!

 

ராகுல் டெயிலியும் ஓட்டல்ல பார்சல் வாங்கிட்டு வந்து சாப்பிடுறாராம், ஏன்?

ஏன்னா, டாக்டர் அவர்கிட்ட ஓட்டல்ல சாப்பிடக் கூடாதுன்னு 

சொல்லியிருக்காராம். ஹாஹாஹா!

 

ஒருத்தன் டாக்டர பாக்க சிலிண்டர் எடுத்துட்டு போனானாம், ஏன்?

ஏன்னா, அவனுக்கு கேஸ் ட்ரபுளாம். ஹாஹாஹா!

 

ஒரு கல்யாணத்துக்கு வந்த எல்லாரும் பிரட் எடுத்துட்டு வந்தாங்களாம், ஏன்?

ஏன்னா, அந்த கல்யாணம் ஜாம், ஜாம்ன்னு நடந்துச்சாம். ஹாஹாஹா!

 

ஒருத்தர் அவர் பொன்னாட்டி முகத்துல எப்போதும் தண்ணீ தெளிச்சுக்கிட்டே இருப்பாராம். ஏன்?

ஏன்னா, அவரோட மாமனார் என் பொண்ண பூ மாதிரி பாத்துக்கங்க மாப்பிள்ளை அப்படின்னு சொன்னாராம். ஹாஹாஹா!

 

ஆகாஷ் ஹைவேயில உட்கொர்ந்து எக்ஸாம்க்கு படிக்கிறானாம், ஏன்?

ஏன்னா, அவன் பப்ளிக் எக்ஸாம்க்கு படிக்கிறானாம். ஹாஹாஹா!

 

இனிஷியல் உள்ள மிருகம் எது?

வேற எது, ஓநாய்தான். ஹாஹாஹா!

 

ஒருத்தன் ஓட்டல் போயிட்டு இட்லிய பாத்தவுடனே பயந்து ஓடிட்டானாம். ஏன்?

ஏன்னா இட்லிலேந்து ஆவி வந்துசாம். அவனுக்கு பேய்னா பயமாம். ஹாஹாஹா!

 

டீச்சர், how old are you வ தமிழ்ல சொல்ல சொன்னாங்களாம்? அதுக்கு ஸ்டூடன்ஸ் என்ன சொன்னாங்களா?

எவ்ளோ பழசு நீன்னு சொன்னாங்களாம்!

இத்தனை நேரம் வாய்விட்டு சிரித்து மனம் விட்டு மகிழ்ந்திருப்பீர்கள். இனி உங்களுக்கான சிந்தனை வரிகளை தெரிந்துகொள்ளங்கள்.

 

இன்றைய சிந்தனை வரிகள்

உங்களை மற்றவர்களுடன் ஒட்பபிடாதீர்கள். உங்களை நேற்று நீங்கள் யாராக இருந்தீர்கள் என்று ஒப்பிட்டு பாருங்கள்.

இந்த சிந்தனை வரிகளை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.