Kadi Jokes : ‘ஒரு ஜோக் சொல்லட்டுமா சார்?’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க கடி மற்றும் மொக்க ஜோக்குகள் இதோ!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Jokes : ‘ஒரு ஜோக் சொல்லட்டுமா சார்?’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க கடி மற்றும் மொக்க ஜோக்குகள் இதோ!

Kadi Jokes : ‘ஒரு ஜோக் சொல்லட்டுமா சார்?’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க கடி மற்றும் மொக்க ஜோக்குகள் இதோ!

Priyadarshini R HT Tamil
Jan 20, 2025 03:24 PM IST

இந்த கடி ஜோக்ஸ் படிச்சு கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்க. விழுந்து விழுந்து சிரிச்சு மகிழ்ந்து இருங்கள்.

Kadi Jokes : ‘ஒரு ஜோக் சொல்லட்டுமா சார்?’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க கடி மற்றும் மொக்க ஜோக்குகள் இதோ!
Kadi Jokes : ‘ஒரு ஜோக் சொல்லட்டுமா சார்?’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க கடி மற்றும் மொக்க ஜோக்குகள் இதோ!

ஏன்னா, அது கரன்ட் அக்கவுன்ட்டாம். ஹாஹாஹா!

 

டன் கணக்கில் துணி துவைக்கும் இடம் எது?

வாஷிங்டன் தான், வேற எது? ஹாஹாஹா!

 

ரொம்ம காஸ்ட்லியான கிழமை எது?

வெள்ளிக்கிழமை தான், வேற எது? ஹாஹாஹா!

 

ஒருத்தன் தலையில் இருந்து இலையா கொட்டுச்சாம், ஏன்?

ஏன்னா அவன் மரமண்டையாம். ஹாஹாஹா!

 

எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வெச்ச எந்த பிரியாணி ஃபெயில் ஆகும்?

முட்டை பிரியாணி தாங்க. பேர்லயே முட்டை இருக்கும்போது எப்படி பாஸ் பண்ணுவாங்க? ஹாஹாஹா!

 

கோயிலுக்கும் சாமிக்கும் என்ன வித்யாசம்?

வேறென்ன, கோயில் சிம்பு நடிச்சப்படம், சாமி விக்ரம் நடிச்ச படம். இதுதான வித்யாசம். ஹாஹாஹா!

 

ஆப்பிள நரிக்கி வெச்சா என்னாகும்?

வேற என்னாகும்? நரி சாப்டுடும். ஹாஹாஹா!

 

அமெரிக்கால பிறந்த குழந்தையோட பல்லு என்ன கலர்ல இருக்கும்?

அட பிறந்த குழந்தைக்குத்தான் பல்லே இருக்காதே. ஹாஹாஹா!

 

சாப்பிட முடியாத கனி எது?

வேற எது, நம்ப பால்கனிதான். ஹாஹாஹா!

 

எந்த ஊருல அதிர்ஷ்டமே இருக்காது?

வேற எங்க, நம்ம லக்னோ லதான். லக்னோன்னு வெச்சதுக்கு பதிலா ஒரு எஸ் போட்டு லக்எஸ்னு வெச்சு இருக்கலாம். ஐடியா இல்லாத பசங்க, ஹாஹாஹா!

 

தினேஷ் எப்போதும் சேர்லே உட்கார்ந்துட்டு இருப்பானாம் ஏன்?

ஏன்னா? அவன் சேர்மனாம். பேட்மேன்னா எங்க உட்காருவாரு? ஹாஹாஹா!

 

பிரயா ஒரு உணவ சாப்பிடும்போது மட்டும் காத மூடிக்கிட்டே சாப்பிடுவாளாம், ஏன்?

ஏன்னா அது ‘இடி’யாப்பமா? ஹாஹாஹா!

 

சர்க்கிளுக்கும், ட்ரையாங்கிளுக்கும் டெஸ்ட் வெச்சா யாரு ஃபெயில் ஆவாங்க?

சர்க்கிள் தான். ஏன்னா அதுக்குத்தான் மூளையே இல்லையே. ட்ரையாங்கிளுக்குத்தான் 3 மூளை இருக்கே. ஹாஹாஹா!

 

தினேசுக்கு கல்யாணமாம். ஆனா அவன மண்டபத்துக்கு கூட்டிக்கிட்டு போகாம, சுடுகாட்டுக்கு கூட்டிக்கிட்டு போறாங்களாம். ஏன்?

ஏன்னா? தினேஷ் அடக்கமான பொண்ணு வேணும்னு கேட்டானாம். அப்போ கரெக்ட்டாதான் கூட்டிக்கிட்டு போயிருக்காங்க. ஹாஹாஹா!

 

ஆகாஷ் அவனோட அப்பா பேர எழுதி ஃபிரிட்ஜ்குள்ள வெச்சுட்டானாம். ஏன்?

ஏன்னா, அவனோட அப்பா பேர கெட்டுப்போகாம பாத்துக்கிறானாம். ஹாஹாஹா!

 

ஒரு ஸ்கூல்ல எக்ஸாம் அன்னிக்கு எல்லாரும் கலர் டிரஸ் போட்டுட்டு போனாங்களாம்.

ஏன்னா அது மாடல் எக்ஸாமாம். ஹாஹாஹா!

 

ரம்யா, நகை கடையில போய் மோதிரம் வாங்கி. அதை காலில் அணிந்து கொண்டாராம் ஏன்?

ஏன்னா, அது ‘கால்’ பவுன் மோதிரமாம். அப்போ ரம்யா செஞ்சசு சரிதானே? ஹாஹாஹா!

 

ராகுல் தினமும் ஸ்கூலுக்கு மெதுவாத்தான் போவானாம், ஏன்?

ஏன்னா, அவன் போற வழில ஸ்கூல் உள்ளது. மெதுவாகச் செல்லவும்னு போர்ட் வெச்சு இருக்காங்களாம். அப்போ மெதுவாத்தானே போக முடியும். ஹாஹாஹா!

 

சூர்யா காய்கறிகளுக்கு கிச்சுகிக்சு மூட்டிக்கிட்டு இருந்தானாம். ஏன்?

ஏன்னா, அவங்க அப்பா காய்கறியெல்லாம் அழுகாம பாத்துக்க சொன்னாராம்.

 

100க்கும் 105க்கும் நடுவுல என்ன இருக்கு?

வேற என்ன? 0 தான் இருக்கு.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.