கடி ஜோக்ஸ் : ‘கடல்லே இல்லையாம்’ வகையான கடி ஜோக்குகள்; சிரிக்கவும், சிந்திக்கவும் நேரம் ஒதுக்குங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கடி ஜோக்ஸ் : ‘கடல்லே இல்லையாம்’ வகையான கடி ஜோக்குகள்; சிரிக்கவும், சிந்திக்கவும் நேரம் ஒதுக்குங்கள்!

கடி ஜோக்ஸ் : ‘கடல்லே இல்லையாம்’ வகையான கடி ஜோக்குகள்; சிரிக்கவும், சிந்திக்கவும் நேரம் ஒதுக்குங்கள்!

Priyadarshini R HT Tamil
Updated Feb 22, 2025 01:56 PM IST

Kadi Jokes : கடும் பணிச் சூழல் மற்றும் பல்வேறு பிரச்னைகள் காரணமாக நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறீர்களா? எனில் இந்த ஜோக்குகள் உங்களை ரிலாக்ஸ் செய்யும். இதைப்படித்து ரிலாக்ஸ் செய்து மகிழ்ந்திருங்கள்.

Kadi Jokes : ‘கடல்லே இல்லையாம்’ வகையான கடி ஜோக்குகள்; சிரிக்கவும், சிந்திக்கவும் நேரம் ஒதுக்குங்கள்!
Kadi Jokes : ‘கடல்லே இல்லையாம்’ வகையான கடி ஜோக்குகள்; சிரிக்கவும், சிந்திக்கவும் நேரம் ஒதுக்குங்கள்!

ஏன்னா அவனுக்கு நாளைக்கு ப்ளட் டெஸ்டாம். ஹாஹாஹா!

மன்னா! என்னா?

ஒரு சமயம் சேர நாடு சோழ நாட்டு மேல படையெடுத்தாங்க, ஆனா நாட்டுக்குள்ள நுழைஞ்சதும் பின்வாங்கிட்டாங்களாம். ஏன்?

ஏன்னா, சோழ நாட்டுல பின் ரொம்ப மலிவு விலைல கெடச்சுதாம். ஹாஹாஹா!

நடிகன்டா, நீ ஒரு மகா நடிகன்டா

ஒருத்தன் கறி கடைக்கும்போய் அஜித் கறி கேட்டானாம். ஏன்?

ஏன்னா, அஜித்தான் தலயாச்சே, அதான் தலக்கறிக்கு பதில் அப்படி கேட்டானாம். ஹாஹாஹா!

சந்திரரே, சூரியரே

சூரியன் நைட் ஆனா எங்க போகும்?

நைட் இருட்டா இருக்கும்ல சூரியனுக்கு மட்டும் எப்படி கண்ணு தெரியும்? ஹாஹாஹா!

பஸ்ல கூடயா?

7 மணிக்கு ஒரு பஸ் போகுது, 7.40க்கு ஒரு பஸ் போகுது, எந்த பஸ் முன்னாடி போகும்?

ரெண்டுமே முன்னாடிதான் போகும். பின்னாடி போகாது. ஹாஹாஹா!

சாப்பாட்ட மறக்கலாமா?

வளராத செடி என்ன செடி?

வேற எது, அதாங்க கிச்சடி, ஹாஹாஹா!

இது வேற பிசினஸ்

ஒரு பழக்கடையில மட்டும் எப்போதும் காமெடி சானல்தான் பாப்பாங்களாம். ஏன்?

ஏன்னா, அப்பதான் பழம் அழுகாம இருக்கும்ல, ஹாஹாஹா!

இது மரண கடிங்க

எந்த டிரஸ்ஸ துவைக்க முடியாது?

வேற எது, அ‘ட்ரஸ்’ தான் ஹாஹாஹா!

இத படிச்சா பட்டாசா சிரிப்பீங்க

ஒரே ஒரு வலி மட்டும் எல்லாருக்கும் பிடிக்கும். அது என்ன வலி?

அதாங்க, தீபா‘வளி’ ஹாஹாஹா!

அரண்மனை 4 காமெடிங்க இது

ஒரு பங்களா ஃபுல்லா பாலா இருந்துச்சாம். ஏன்?

ஏன்னா, அந்த பங்களா பாழலடைஞ்ச பங்களாவாம். ஹாஹாஹா!

கோடை கடி

வெயில் தாங்க முடியலன்னு ஏசி முன்னாடியே உக்காந்து இருந்தாலும் வியர்க்குதாம். ஏன்?

ஏன்னா ஏசி ஆன் பண்ணவே இல்லையாம். ஹாஹாஹா!

இப்டியெல்லாமா யோசிப்பாங்க

ஒரு பையன் தலைக்கு அடியில டிக்ஷ்னரி வெச்சுட்டுதான் தூங்குவானாம். ஏன்?

ஏன்னா அவனுக்கு அர்த்தமில்லாத கனவு வருது. ஹாஹாஹா!

மண்ணெண்ணெய் குளியல் சேலன்ச் போட்டர்லாமா?

ஒருத்தன் அவருடைய பையனுக்கு மண்ணெண்ணெய் ஊற்றி குளிப்பாட்டினாராம், ஏன்?

ஏன்னா, அவருடைய பையன் துருதுருன்னு இருப்பானாம். ஹாஹாஹா!

ஒது இதுதான கட்ட பிரம்மச்சாரின்றதோ?

ஒருத்தன் எப்பவும் கட்டையோடதான் சுத்திக்கிட்டு இருப்பானாம், ஏன்?

ஏன்னா, அவரு கட்ட பிரம்மச்சாரியாம். ஹாஹாஹா!

குண்டு ஒன்னு வெச்சுருக்கேன், வெடி குண்டு ஒன்று வெச்சுருக்கேன்

ஒருத்தன் கடையில ஊசி வாங்குனானாம் அது வெடிச்சிருச்சாம். ஏன்?

ஏன்னா, அது குண்டூசியாம். ஹாஹாஹா!

சிந்திக்க சில வரிகள்

உன்னை புரிந்துகொள்ளாத எதுவும் உன்னிடம் நிலைப்பதில்லை. உன்னை புரிந்துகொண்ட எதுவும் உன்னை விட்டு விலகுவதில்லை.