Kadi Jokes: சிடுசிடுவென இருப்பவர்களையும் கலகலவென சிரிக்க வைக்கும் கடி ஜோக்ஸ்! லைட்டா கடுப்பேத்தவும் வாய்ப்பு இருக்கு!
Kadi Jokes: . பள்ளிகளில் நடக்கும் கடி ஜோக்குள் மாணவர்கள் நண்பர்களிடையே நடக்கும் விவாதங்கள் என பலவற்றில் இந்த ஜோக்குகள் உள்ளன. அப்படிப்பட்ட கடி ஜோக்குகளில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். இந்த ஜோக்குகளை படித்து நீங்களும் உங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களிடம் சொல்லி காண்பித்து சிரித்து மகிழுங்கள்.

புன்னகையே ஒரு மனிதனின் வாழ்க்கையை அழகு படுத்தும். அவன் வாழ்க்கையில் சந்தித்த அனைத்து பிரச்சினைகளையும் மறந்து சிரிக்கும் பொழுது தான் ஒரு மனிதன் மனிதனாகவே உணர்கிறான் என பல சொற்பொழிவாளர்கள் கூறியுள்ளனர். சிரிக்கத் தெரிந்த ஒரு விலங்காகவும் மனிதன் இருந்து வருகிறான். ஒவ்வொரு நாளும் வீட்டில் அலுவலகங்களில் நடக்கும் பிரச்சினைகளை மறந்து சிரிப்பதற்கு ஒரு சிறிய ஜோக் போதுமானதாக இருக்கிறது. அதிலும் நமது தமிழில் கூறப்படும் கடி ஜோக்குகள் நம்மை வாய்விட்டு சிரிக்க வைப்பது மட்டுமில்லாமல் சற்று கடுப்பேற்றவும் வைக்கிறது. பள்ளிகளில் நடக்கும் கடி ஜோக்குள் மாணவர்கள் நண்பர்களிடையே நடக்கும் விவாதங்கள் என பலவற்றில் இந்த ஜோக்குகள் உள்ளன. அப்படிப்பட்ட கடி ஜோக்குகளில் சிலவற்றை இங்கே கொடுத்துள்ளோம். இந்த ஜோக்குகளை படித்து நீங்களும் உங்கள் சுற்றுவட்டாரத்தில் உள்ளவர்களிடம் சொல்லி காண்பித்து சிரித்து மகிழுங்கள்.
கேள்வி: ஒரு பையன் தலைக்கு அடியில் Dictionary வெச்சிட்டு தூக்குறானாம். ஏன்?
பதில்: ஏனா, அவனுக்கு அர்த்தமில்லாத கனவு வருதாம்.
ஆசிரியர்: கிணத்துல கல்லை போட்டால் ஏன் முழ்குகிறது?
மாணவன்: ஏன்னா, கல்லுக்கு நீச்சல் தெரியாது சார்.
கேள்வி: ஒருத்தவங்க Sugar டப்பாவில், Saltனு எழுதி வெச்சாங்க ஏன்?
பதில்: எல்லா எறும்பையும் ஏமாத்த.
கேள்வி: ஒருத்தர் எப்பவும் கட்டையோடு சுற்றிக்கொண்டு இருந்தாராம். ஏன்?
பதில்: ஏன்னா அவரு கட்ட பிரம்மச்சாரி.
கேள்வி: ஒருத்தன் கடையில ஊசி வாங்கினான். அது வெடிச்சிடுச்சி. ஏன்?
பதில்: ஏன்னா, அவன் வாங்கியது குண்டு ஊசியாம்.
கேள்வி: ஒரு Inspector தேங்காய் எடுத்துக்கிட்டு கைதியை பார்க்க போனாராம்… ஏன்?
பதில்: துருவி துருவி கேள்வி கேட்க தான்.
ஆசிரியர்: இந்த ஆண்டு எந்த ஊருக்கு விருது கொடுத்து இருக்காங்க தெரியுமா?
மாணவர்கள்: விருது(Award) நகர்.
கேள்வி: ஒருத்தர் எப்பவும் மத்தவங்க கையை தான் எதிர் பார்த்து இருப்பாரு. ஏன்?
பதில்: ஏன்னா அவரு கை ரேகை ஜோசியராம்..
ஆசிரியர்: மரம் செடியெல்லாம் இல்லாத காடு எது?
மாணவர்: சிம் கார்டு
கேள்வி; பத்து யானையில் 9 யானை பேருந்தில் ஏறிவிட்டனர் ஒரு யானை மட்டும் அந்த பேருந்தில் ஏற முடியவில்லை ஏன்?
பதில்: அது ஆண் யானை வந்ததோ லேடீஸ் பஸ்.
ஆசிரியர் ; வேடாந்தங்கல்லுக்கு பறவைகள் எங்கிருந்து வருகின்றன?
மாணவன்: முட்டையிலிருந்து.
கேள்வி; எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வச்சா எந்த பிரியாணி பெயில் ஆகும்?
பதில்: முட்டை பிரியாணி.
கேள்வி; அண்ணனுக்கும் தம்பிக்கும் என்ன வித்தியாசம்?
பதில்: வயசு வித்தியாசம்.
பேங்க் மேனேஜர்; ஒருத்தர் கல்யாணம் பண்றதுக்கு விவசாய கடன் கேட்டார்
வாடிக்கையாளர்: ஏன்?
பேங்க் மேனேஜர்: ஏன்னா அது ஆயிரம் காலத்துப் பயிர்ல.
கேள்வி; தீபாவளிக்கும் பொங்கலுக்கு என்ன வித்தியாசம்?
பதில்: தீபாவளி அன்னைக்கு பொங்கல் சாப்பிடலாம் ஆனால் பொங்கல் அன்னைக்கு தீபாவளி சாப்பிட முடியாது.
ஆசிரியர்; எறும்பு பெருசா யானை பெருசா?
மாணவன்: அப்படியெல்லாம் சொல்ல முடியாது சார் பிறந்த தேதி வேணும்.
டாக்டர்; என்ன நாய் எந்த இடத்தில கடித்து விட்டது ?
நோயாளி: பெருமாள் கோவில் சந்துல.

டாபிக்ஸ்