Kadi Jokes: கவலை மறக்க சிரி! கண்ணில் நீர் வர சிரி! உங்களை சிரிக்க வைக்கும் கடி ஜோக்குகள் இதோ!
Kadi Jokes: நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளால் நாம் தினமும் சிரிப்பதற்கு மறந்து விடுகிறோம். மனமகிழ்ச்சி மட்டுமில்லாமல் மனதை அமைதி படுத்தவும் தினம் தோறும் மகிழ்ச்சியுடன் சிரிப்பதே சிறந்த மெடிடேஷன் ஆகும். அதிக ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளையும் மருத்துவர்கள் சிரிக்குமாறு பரிந்துரை செய்கின்றனர்.

வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும் ஒரு புதுவித அனுபவத்தை நமக்கு இந்த வாழ்க்கை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த அனுபவங்களை தாண்டி நம்மை உயிர்ப்போடு வைத்திருப்பது நமது மன மகிழ்ச்சியே. நம் வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகளால் நாம் தினமும் சிரிப்பதற்கு மறந்து விடுகிறோம். மனமகிழ்ச்சி மட்டுமில்லாமல் மனதை அமைதி படுத்தவும் தினம் தோறும் மகிழ்ச்சியுடன் சிரிப்பதே சிறந்த மெடிடேஷன் ஆகும். அதிக ரத்த அழுத்தம் உள்ள நோயாளிகளையும் மருத்துவர்கள் சிரிக்குமாறு பரிந்துரை செய்கின்றனர். நாமும் நமது வேகமான வாழ்க்கையில் சிரிப்பதற்கு என்று நேரம் ஒதுக்காமல் சென்று கொண்டிருக்கிறோம். ஆனால் தினம் தோறும் சிரிப்பதே நம் மனதை அமைதிப்படுத்தும். உங்களது இன்றைய நாளை மகிழ்ச்சியுடன் சிரிப்பதற்கு நாங்கள் இங்கு சில கடி ஜோக்குகளை கொண்டு வந்துள்ளோம். இந்த கடி ஜோக்குகளை படித்து சிரித்து மகிழுங்கள். மேலும் இதை உங்கள் வீட்டில் உள்ளவர்கள் இடமும் நண்பர்களிடமும் பகிர்ந்து அவர்களுக்கும் மகிழ்ச்சியை வழங்குங்கள்.
நண்பன் 1: அதிக வெயிட் தூக்குற பூச்சி எது?
நண்பன் 2: மூட்டை பூச்சி
நண்பன் 1: பொருள் வைக்க யூஸ் பண்ண முடியாத பை எது?
நண்பன் 2: தொப்பை.
நண்பன் 1: எலிக்கு ஏன் வால் இருக்கு?
நண்பன் 2: எலி செத்த பின்னாடி தூக்கி போடுறதுக்கு தான்
வாத்தியார்: லெட்டர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்: லெட்டர் கிழிச்சிட்டு படிப்போம் புத்தகத்தை படிச்சிட்டு கிழிப்போம்.
நண்பன் 1: ஒரு மாமி இட்லியை தலை வைத்து இருக்கிறார்கள் ஏன்?
நண்பன் 2: ஏன்?
நண்பன் 1: ஏன்னா அந்த இட்லி மல்லிகை பூ போல இருந்துச்சாம்.
நண்பன் 1: குடிக்க முடியாத டீ எது?
நண்பன் 2: கரண்டி
நண்பன் 1: நாம ஏன் படுத்துகிட்டே தூங்குறோம்?
நண்பன் 2: நின்னுக்கிட்டே தூங்கினால் கீழே விழுந்து விடுவோம்.
நகராட்சி பணியாளர்: கொசு நம்ம வீட்டுக்கு வராமல் இருக்க என்ன பண்ணனும்?
பொதுமக்கள்: அது கிட்ட நம்ம வீட்டு அட்ரஸ் கொடுக்காம இருக்கணும்.
நண்பன் 1: எல்லா பிரியாணிக்கும் டெஸ்ட் வச்சா எந்த பிரியாணி பெயில் ஆகும்?
நண்பன் 2: முட்டை பிரியாணி.
நண்பன் 1: ஒருத்தன் தலையிலிருந்து இலையா கொட்டுச்சாம் ஏன்?
நண்பன் 2: ஏன்னா அவன் மரமண்டையாம்.
கேள்வி: அமெரிக்காவில் பிறந்த குழந்தை பல்லு என்ன கலர் இருக்கும்?
விடை: பிறந்த குழந்தைக்கு தான் பல்லே இருக்காதே.
நபர் 1: அந்த பையனா எதுக்கு மாலையெல்லாம் போட்டு அலங்காரம் பண்ணி சுடுகாட்டுக்கு கூட்டு போறாங்க ஏன்?
நபர் 2: ஏன்னா அந்த பையன் கல்யாணம் பண்ண அடக்கமான பொண்ணு வேணும்னு கேட்டானாம்.
தோழி 1: ரம்யா நகை கடையில் போய் மோதிரம் எடுத்து அதை காலில் போட்டுக்கிட்டாளாம் ஏன்?
தோழி 2: ஏன்னா அது கால் பவுன் மோதிரமாம்.
ரமேஷ்: தினேஷ் எப்போதும் மாத்திரை குடிக்கும் போது கதவை மூடிக்கொண்டுதான் குடிக்கிறார் ஏன் தெரியுமா?
சுரேஷ்: ஏனென்றால், டாக்டர் அரைமூடி மாத்திரை தான் குடிக்க சொல்லி இருக்கிறார்.

டாபிக்ஸ்