Kadi Jokes in Tamil: இருக்கு இருக்கு! இன்னைக்கு இடைவிடாத சிரிப்பு இருக்கு! கடுப்பேத்தும் கடி ஜோக்கும் இருக்கு!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Jokes In Tamil: இருக்கு இருக்கு! இன்னைக்கு இடைவிடாத சிரிப்பு இருக்கு! கடுப்பேத்தும் கடி ஜோக்கும் இருக்கு!

Kadi Jokes in Tamil: இருக்கு இருக்கு! இன்னைக்கு இடைவிடாத சிரிப்பு இருக்கு! கடுப்பேத்தும் கடி ஜோக்கும் இருக்கு!

Suguna Devi P HT Tamil
Jan 28, 2025 05:39 PM IST

Kadi Jokes in Tamil: ஒரு மனிதனின் வாழ்க்கையை புன்னகையே முழுமையாக்குகிறது. ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு நாளும் எத்தனை முறை சிரிக்கிறார்கள் என்று என்பதை பொறுத்து அவர்களது வாழ்வு நன்றாக இருக்கிறதா என்பதை கணக்கிட முடியும். அந்த அளவை அந்த அளவிற்கு மனிதர்களது வாழ்வில் சிரிப்பும் ஒரு முக்கிய பங்காகிவிட்டது.

Kadi Jokes in Tamil: இருக்கு இருக்கு! இன்னைக்கு இடைவிடாத சிரிப்பு இருக்கு! கடுப்பேத்தும் கடி ஜோக்கும் இருக்கு!
Kadi Jokes in Tamil: இருக்கு இருக்கு! இன்னைக்கு இடைவிடாத சிரிப்பு இருக்கு! கடுப்பேத்தும் கடி ஜோக்கும் இருக்கு! (pexel)

1. நண்பன் 1  - நெஞ்சைத் தொடும் ஒரு வார்த்தை சொல்லு

     நண்பன் 2 - பனியன்

2. மனைவி - குன்னக்குடி வைத்தியநாதன் வயலின் கேட்டிருக்கிங்களா?

     கணவர் -  நாம கேட்டா கொடுப்பாரா?

3. டீச்சர் - ராமன் கடன் வாங்கினான். இது என்ன காலம் சொல்லு?

    மாணவன் -   அது ராமனோட கஷ்டகாலம் சார்

4. டீச்சர் -     நீ ஏன் பரட்டைத் தலையோட இருக்க?

     மாணவன் - எண்ணெய்” சேர்க்கக்கூடாதுனு டாக்டர் சொல்லிருக்காரு டீச்சர் !

5. கணக்கு வாத்தியார் - கணக்கு பரிட்சையில் கணக்கு போடாமல் எதுக்குடா இப்படி டான்ஸ் ஆடிட்டு இருக்க.?

    மாணவன்-  சார் நீங்க தான் சொன்னீங்க ஸ்டெப்ஸ்க்கு மார்க் உண்டு என்று

6. நண்பன் 1 - ஏண்டா மெதுவா லட்டர் எழுதுற ?

    நண்பன் 2  -எங்க அம்மாவுக்கு வேகமா படிக்க வராதது மாப்ள  அதான் !!

7. நண்பன் 1 - 500 ரூபா கடன் கிடைக்குமா? சுத்தமா பணம் இல்லைங்க!

நண்பன் 2 - அழுக்கா” இருந்தாலும் பரவாயில்லைங்க!

8. அம்மா - டேய் பனியில் நிக்காதடா! சளி பிடிக்கும்.

பையன் - நான் பனியில நிக்கலமா! காலில் தான் நிற்கிறேன்.

9. வாத்தியார்: மேலே பந்து வீசினால் அது தானாக கீழே வந்துடுதே, எப்படி?

மாணவன்- ஏன்னா, மேல பிடிக்க ஆள் இல்ல சார், அதான் கீழ வந்துடுது சார்.

10 . பல் மருத்துவர்: எங்கே ஈ காட்டு பாக்கலாம்?

நோயாளி: நீங்க ‘ஈ” பார்த்ததில்லையா டாக்டர்!

காமெடி தத்துவங்கள் 

என்னதான் பைத்தியக்கார டாக்டரா இருந்தாலும் அவருக்கு பைத்தியம் பிடிச்சா வைத்தியம் பார்க்க முடியாது. 

அண்ணன் பொண்டாட்டியை அண்ணி ன்னு கூப்பிடலாம். ஆனா தம்பி பொண்டாட்டிய தண்ணீ ன்னு கூப்பிட முடியுமா? 

இந்த ஜோக்குகளை உங்கள் வீட்டில் இருப்பவர்களிடமும், நண்பர்களிடமும் கூறி அவர்களையும் சிரிக்க வைத்து நீங்களும் சிரித்து மகிழுங்கள். உங்களது வாழக்கையை அனுபவியுங்கள். 

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.