Kadi Jokes: வாய் விட்டு சிரிக்க! உங்களை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் இதோ! படிங்க சிரிங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Jokes: வாய் விட்டு சிரிக்க! உங்களை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் இதோ! படிங்க சிரிங்க!

Kadi Jokes: வாய் விட்டு சிரிக்க! உங்களை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் இதோ! படிங்க சிரிங்க!

Suguna Devi P HT Tamil
Jan 20, 2025 03:37 PM IST

உங்களது நாளை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் சில கடிஜோக்குகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். இந்த கடிஜோக்குகளை படித்து சிரித்து மகிழுங்கள்.

Kadi Jokes: வாய் விட்டு சிரிக்க! உங்களை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் இதோ! படிங்க சிரிங்க!
Kadi Jokes: வாய் விட்டு சிரிக்க! உங்களை கடுப்பேத்தும் கடி ஜோக்ஸ் இதோ! படிங்க சிரிங்க! (Pixabay)

மனிதர்களாகிய நமக்கு பல பிரச்சனைகள் இருந்த போதும் நம்மால் மட்டுமே சிரிக்க முடிகிறது. விலங்கினங்களால் மனிதர்களைப் போல சிரிக்க முடிவதில்லை. விலங்குக்கும் மனிதனுக்கும் இடையே உள்ள பல வித்தியாசங்களில் புன்னகையும் ஒன்று. எனவே உங்களது நாளை மகிழ்ச்சியாக வைத்திருக்க உதவும் சில கடிஜோக்குகளை நாங்கள் இங்கே கொடுத்துள்ளோம். இந்த கடிஜோக்குகளை படித்து சிரித்து மகிழுங்கள்.

1. அப்பா: கடவுள் ஒரு கதவை மூடினால் இன்னொரு கதவை திறப்பார்! இதிலிருந்து என்ன தெரியுது? 

மகன்: கடவுளையும் மனுஷன் வாட்ச்மேன் ஆக்கிட்டானு தெரியுது.

2. புரொஃபசர்: பிராக்டிகல்கும் தியரிக்கும் என்ன வித்தியாசம்?

மாணவன்: பிராக்டிகல்னா நாங்க அறுப்போம் தியனா நீங்க அறுத்தவங்க சார்.

3. நண்பன் 1:ஒரு தண்ணி தொட்டில காக்கவும் கழுகும் விழுந்திடுச்சு ஆனா கழுகு பறந்துடுச்சி காக்கா பறக்கல ஏன் தெரியுமா?

நண்பன் 2:ஏன்? 

நண்பன் 1: ஏன்னா காக்கா கரையும். அதான் தண்ணீரில கரைஞ்சுருச்சு. 

4.நண்பன் 1: கம்ப்யூட்டர் படிச்சா வேலை கிடைக்குமாடா? 

நண்பன் 2: இல்லடா, நீ படிச்சா தான் உனக்கு வேலை கிடைக்கும்

5. வாத்தியார்: எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும் என்று சொல்லச் சொன்னா ஏன்டா முடியாதுங்கிறா?

மாணவன்: ஏன்னா எனக்கு எழுத்தறிவித்ததே எல்.கே.ஜி டீச்சர் தான் சார்.

6. மகன்: அப்பா எங்க கணக்கு வாத்தியாருக்கு கணக்கே தெரியல!

அப்பா: எப்படி சொல்ற? 

மகன்: நேத்து 7 யும், 3 யும் கூட்டினா 10னு சொன்னாரு. இன்னைக்கு 5 யையும் 5 யையும் கூட்டினா 10னு சொல்றாரு

7. வாத்தியார்: அன்னைனைக்கு நடத்துற பாடத்தை அன்னைனைக்கு படிக்கணும் புரியுதா? 

மாணவன்: ஒரு சந்தேகம் சார்! ஞாயிற்றுக்கிழமை எந்த பாடத்தை படிக்கிறது?

8. வாத்தியார்: இங்க ஒருத்தன் கழுதை மாறி கத்துகிட்டு இருக்கேன், காது கேட்கலையா? 

மாணவன்: கேட்டது சார் ஆனா கழுதை மாதிரி இல்ல எருமை மாதிரி இருந்தது சார்

9. மாணவன்: அந்த காலத்துல வள்ளல்கள் கடை வைத்திருந்தார்களா சார்? 

வாத்தியார்: இல்லையே ஏன் கேக்குற? 

மாணவன்: பின்ன ஏன் சார் கடை ஏழு வள்ளல்கள்னு சொல்றாங்க

10. நபர்1: என் பையன் எறும்பு மாதிரி! 

நபர் 2: அவ்ளோ சுறுசுறுப்பா? 

நபர்1: அட இல்லைங்க, ஸ்னாக்ச எங்க ஒளிச்சி வைச்சிருந்தாலும் கண்டுபிடித்து எடுத்துடுவான்.

பேரன்: பாட்டி! நான் ஓட்டப் பந்தயத்திற்கு போறேன். ஆசிர்வாதம் பண்ணுங்க!

பாட்டி: நல்லா “மெதுவா” பார்த்து ஓடிட்டு வா கண்ணு சரியா!

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.