Kadi Jokes: உங்க நண்பனை சிரிக்க வைக்கணுமா? இதோ இந்த கடி ஜோக்ஸ் சொல்லி பாருங்க! லைட்டா கடுப்பேத்தவும் வைக்கலாம்!
Kadi Jokes: நீங்கள் நண்பர்களிடம் பேசி சிரிப்பதற்கு ஏற்றாற் போல சில கடி ஜோக்குகளை நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். இவற்றை உங்கள் நண்பர்கள் இடத்தில் சொல்லும் போது அவர்கள் சிரிக்கவும் செய்யலாம், கடுப்பாகி கத்தவும் செய்யலாம். கடி ஜோக் என்றாலே கடிக்கத்தானே செய்யும்.

நண்பர்களுக்குள் எத்தனை பிரச்சனை இருந்தாலும் கூட்டமாக சேர்ந்து விட்டால் போதும் ஏதேனும் சொல்லி மகிழ்ச்சியாக்கி விடுவது தான் நண்பர்கள் கூட்டம். இந்த நண்பர்கள் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும், அலுவலகங்களிலும் என அனைத்து இடத்திலும் இருப்பார்கள். இந்த நண்பர்கள் கூட்டத்தில் இருந்தாலே மனதுக்கு ஒரு நிறைவு கிடைக்கும். அவர்களிடம் மனம் விட்டு பேசி சிரித்தால் தான் சிலருக்கு அந்த நாளே நன்றாக இருக்கும். அப்படி நீங்கள் நண்பர்களிடம் பேசி சிரிப்பதற்கு ஏற்றாற் போல சில கடி ஜோக்குகளை நாங்கள் இங்கு கொண்டு வந்துள்ளோம். இவற்றை உங்கள் நண்பர்கள் இடத்தில் சொல்லும் போது அவர்கள் சிரிக்கவும் செய்யலாம், கடுப்பாகி கத்தவும் செய்யலாம். கடி ஜோக் என்றாலே கடிக்கத்தானே செய்யும்.
1. நண்பன் 1: கடல் தண்ணீ ஏன் உப்பா இருக்கு?
நண்பன் 2: இனிப்பா இருந்தா ஈ மொய்க்கும்ல அதான்.
2. நண்பன் 1: Fanக்கும் பேன் க்கும் என்ன வித்தியாசம்?
நண்பன் 2: தெரியலயே
நண்பன் 1: இரண்டுமே தலைக்கு மேல தான சுத்திக்கிட்டே இருக்கு!
3. நண்பன் 1: ஆங்கில எழுத்துக்கள் மொத்தம் 26, அதுல A ஓடி போச்சுனா மீதம் எத்தனை எழுத்து?
நண்பன் 2: A போச்சுனா மீதம் 25 தான?
நண்பன் 1: அதான் இல்ல A O D இந்த மூணு எழுத்தும் போச்சுனா 23 தான்!
4. வாத்தியார்: கும்பகர்ணன் மாத கணக்கில் தூங்கினான் அது என்ன காலம்?
மாணவன்: கொசுவே இல்லாத காலம் சார்.
5. வாத்தியார்: எல்லா Letter-ம் வர மாதிரி ஒரு Word சொல்லுங்க?
மாணவன்: Post Box சார்.
6. நண்பன் 1: ரொம்ப காஸ்ட்லியான கிழமை எது?
நண்பன் 2: வெள்ளிக்கிழமை.
7. டாக்டர்: உங்க Kidney Fail ஆகிடிச்சி!
நோயாளி: நான் என்னோட Kidney-ய படிக்க வைக்கவே இல்லையே அப்பறம் எப்படி டாக்டர் அது Fail ஆகும்.
8. வாத்தியார்: ஏன்டா நாய் படம் வரைந்து விட்டு வாய் மட்டும வரையாமல் வச்சி இருக்க?
மாணவன்: அது வாயில்லா பிராணி சார்.
9. நண்பன் 1: பன்னுல தண்ணீர் போனா என்னாகும்?
நண்பன் 2: “பன்னீர்” ஆகும்.
10. நண்பன் 1: ஒரு பாம்பு ரொம்ப நேரம் அழுதுகிட்டு இருந்துச்சாம் ஏன்?
நண்பன் 2: ஏன்னா அது எடுத்த படம் FLOP ஆயிடுச்சாம்.
11. நண்பன் 1: எந்த Watch கரெக்டா Time காட்டும்?
நண்பன் 2: எந்த Watch-ம் காட்டாது நாம தா பாத்துக்கணும்.
12. நண்பன் 1: ஒரு இஞ்சினியர் ரோடு போட்டாரம். அப்றம் அதுக்கு பக்கத்துலேயே ஒரு வாழைமரம் நாட்டு வச்சாராம் ஏன்?
நண்பன் 2: ஏன்னா அவரு போட்டது தார் ரோடாம்.
13. நண்பன் 1: எல்லா கிளியும் பறக்கும். ஆனா இந்த ஒரு கிளி மட்டும் பறக்காது அது என்ன கிளி?
நண்பன் 2: சங்"கிலி"

டாபிக்ஸ்