Kadi Jokes : அதிரி புதிரி சிரிப்பு உறுதி! இந்த ஜோக்ஸ்லாம் படிச்சு சிரிச்சுக்கிட்டே இருங்க!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Kadi Jokes : அதிரி புதிரி சிரிப்பு உறுதி! இந்த ஜோக்ஸ்லாம் படிச்சு சிரிச்சுக்கிட்டே இருங்க!

Kadi Jokes : அதிரி புதிரி சிரிப்பு உறுதி! இந்த ஜோக்ஸ்லாம் படிச்சு சிரிச்சுக்கிட்டே இருங்க!

Priyadarshini R HT Tamil
Jan 31, 2025 03:08 PM IST

Kadi Jokes : நீங்கள் சிரித்து மகிழ சில ஜோக்குகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை படித்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகுங்கள்.

Kadi Jokes : அதிரி புதிரி சிரிப்பு உறுதி! இந்த ஜோக்ஸ்லாம் படிச்சு சிரிச்சுக்கிட்டே இருங்க!
Kadi Jokes : அதிரி புதிரி சிரிப்பு உறுதி! இந்த ஜோக்ஸ்லாம் படிச்சு சிரிச்சுக்கிட்டே இருங்க!

 

ஒரு பையனோட அம்மா சாப்பாட்டுக்கு எதாச்சும் வாங்கிட்டு வரச் சொன்னாங்களாம். அதுக்கு அவர் நேரா மெக்கானிக் ஷாப்க்குப் போனானாம். ஏன்?

ஏன்னா, அவன் வாங்கப் போனது வீல் சிப்ஸாம், ஹாஹாஹா!

 

காசு ஆணா, பெண்ணா?

பெண் தாங்க, தலைக்கும் பின்னாடி பூ இருக்குல்ல, ஹாஹாஹா!

 

பெண்களுக்கு மட்டும் ஏன் நிறைய முடி வளருது?

ஏன்னா, செடியா இருந்தாலும், முடியா இருந்தாலும் களிமண் இருக்க இடத்துலதான் நிறைய வளருமாம். ஹாஹாஹா!

 

விஸ்கிக்கும், பாய்சன்க்கும் என்ன வித்யாசம்?

விஸ்கி குடிச்சா 4 பேருக்கு முன்னாடி நாம ஆடுவோம். பாய்சன் குடிச்சா நமக்கு முன்னாடி 4 பேர் ஆடுவாங்க. ஹாஹாஹா!

 

ஒருத்தன் தோசை சுடும்போது தோசை பறந்து போச்சாம், ஏன்?

ஏன்னா அது பேப்பர் தோசையாம் அதான் பறந்து போச்சாம். ஹாஹாஹா!

 

கழுகுக்கும், மனிதனுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு, அது என்ன?

இரண்டுமே ரஜினி காந்த் நடித்த படம். ஹாஹாஹா!

 

லவ் லெட்டர்க்கும், எக்ஸாம்க்கும் என்ன வித்யாசம்?

லவ் மனசுக்குள்ள நிறைய இருக்கும், ஆனா ஒண்ணுமே எழுத வராது. ஆனா எக்ஸாம் மனசுக்குள்ள ஒண்ணுமே இருக்காது. ஆனா நிறைய எழுதுவோம். ஹாஹாஹா!

 

ஒருத்தர் அடிக்கடி சர்க்கரை டப்பாவ திறந்து பார்க்க சொன்னாராம், ஏன்?

டாக்டர்தான் அவர அடிக்கடி சுகர் செக் பண்ணிக்க சொன்னாராம். ஹாஹாஹா!

 

காலை உணவுக்கு சாப்பிட முடியாத இரண்டு உணவுகள் எது?

மதிய உணவும், இரவு உணவும் தான் வேற எது? ஹாஹாஹா!

 

டிக்ஸ்னரில எந்த வார்த்த தவறாக எழுதப்பட்டு இருக்கு?

‘தவறு’ன்ற வார்த்த தான். வேற என்ன? ஹாஹாஹா!

 

புடவைக்கும், புருஷனுக்கும் என்ன வித்யாசம் தெரியுமா?

புடவைய நெனச்சதுக்கு அப்புறம் துவைக்கலாம். ஆனால், புருஷன நொனக்கும்போதெல்லாம் துவைக்கலாம். ஹாஹாஹா!

 

ஒருத்தர் கடிகாரத்த பாத்துக்கிட்டே சாப்பிட்டாராம்? ஏன்?

ஏன்னா, டாக்டர் டைம் பாத்து சாப்பிட சொன்னாராம்? ஹாஹாஹா!

 

ஒரு அம்மா டீவில தண்ணீய தெளிச்சாங்களாம், ஏன்?

ஏன்னா, கோலங்கள் சீரியல் போடப்போறாங்களாம். ஹாஹாஹா!

 

ஒருத்தன் அவருடைய பையன மண்ணெண்ணெய் ஊற்றி குளிப்பாட்டினாராம், ஏன்?

ஏன்னா அவர் பையன் துருதுருன்னு இருப்பானாம்.

 

ஒருத்தன் எப்பவும் கட்டையோடதான் சுத்திக்கிட்டு இருப்பானாம், ஏன்?

ஏன்னா அவரு கட்ட பிரம்மச்சாரியாம்.

 

சிரித்தது போதும், இன்றைய சிந்தனை வரிகளைப் பார்க்கலாம்

 

கல்வி என்பதுதான் சுதந்திரத்தின் பொன் கதவுகளை திறக்கும் சாவி.

 

கல்வி உங்களை வாழ்க்கை தயார்படுத்தும் ஆயுதமல்ல, கல்வி என்பது தான் வாழ்க்கை

 

கல்வி என்பது ஒரு சக்தி வாய்ந்த ஆயுதம். அதனால் உலகையே மாற்ற முடியும்.

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.