கடி ஜோக்ஸ் : ‘நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஜோக்குகள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  கடி ஜோக்ஸ் : ‘நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஜோக்குகள்!

கடி ஜோக்ஸ் : ‘நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஜோக்குகள்!

Priyadarshini R HT Tamil
Updated Feb 28, 2025 11:16 AM IST

உங்கள் மனதை ரிலாக்ஸ் செய்யவும், உங்களை குஷிப்படுத்தவும் சில ஜோக்குகள் இங்கு உங்களுக்காகக் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை படித்து மகிழ்ந்திருங்கள்.

கடி ஜோக்ஸ் : ‘நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஜோக்குகள்!
கடி ஜோக்ஸ் : ‘நம் ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே’ நீங்கள் விழுந்து விழுந்து சிரிக்க ஜோக்குகள்!

அசைவோமா?

உப்பு சைவமா? அசைவமா?

சாம்பார்ல போட்டா சைவம், கறிக்கொழம்புல போட்ட அசைவம். ஹாஹாஹா!

இது அவரு மனைவிக்கு தெரியுமா?

ஒருத்தர் அவரோட மனைவி வரும்போது மட்டும் கண்ணாடிய எடுத்துப்போட்டுக்குவாராம். ஏன்?

ஏன்னா, டாக்டர் தலைவலி வரும்போது மட்டும்தான் கண்ணாடிய போடச்சொன்னாராம். ஹாஹாஹா!

இப்படி ஒரு பையனா?

ஒரு பையன் கல்யாண தரகர் கிட்ட எனக்கு ஸ்மார்ட்ஃபோன் வெச்சிருக்கிற பையன்தான் வேணும் அப்டீன்னு கேட்டானாம். ஏன்?

ஏன்னா, அப்போதான் அந்தப்பொண்ணு குனிஞ்ச தலை நிமிராம இருக்குமாம். ஹாஹாஹா!

டெக்னாலஜிக்கே டஃப் கொடுப்போம்?

ஒருத்தன் காக்கா வளர்த்தானாம், அந்த காக்கவ தொட்டா ரொம்ப ஷாஃப்டா இருக்குமாம். அவன் அந்த காக்கவுக்கு என்ன பேர் வெச்சு இருப்பான்?

‘My Crow Soft’ ஹாஹாஹா!

தும்மலோ தும்மல் ஏன்?

தியேட்டர்ல படம் போட்டதுக்கு அப்புறம் எல்லாரும் தும்முறாங்களாம். ஏன்?

ஏன்னா, அது மசாலாப் படமாம். ஹாஹாஹா!

இது நல்லாருக்கே?

ஒரு அம்மா அடிக்கடி ஹாஸ்பிடல் போய் வாயில தையல் போட்டுக்கிறாங்களாம். ஏன்?

ஏன்னா, அவங்க வாய் கிழிய கிழிய பேசுவாங்களாம். ஹாஹாஹா!

இதெல்லாம் காந்தி காலத்து ஜோக்

ஒரு யானை வேக வேகமாக ரேஷன் கடைக்கு ஓடி போச்சாம். அது அங்க போய் மொதல்ல என்ன வாங்கும்?

வேற என்ன? மூச்சுதான். ஹாஹாஹா!

கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா?

டைவர்ஸ்க்கு முக்கியமான காரணம் என்ன?

வேறென்ன, கல்யாணம்தான். ஹாஹாஹா!

குதிரையெல்லாமா?

குதிரை ரொம்ப பசியா இருக்கும்போது, ஓடிப்போய் ஒரு தாத்தாவ கடிச்சுச்சாம், ஏன்?

ஏன்னா, அவரு கொள்ளு தாத்தாவாம். ஹாஹாஹா!

என்ன ஒரு புத்திசாலித்தனம்?

ஒரு பையன் தலைக்கு அடியில டிக்ஷனரிய வெச்சுக்கிட்டு தூங்குறானாம். ஏன்?

ஏன்னா, அவனுக்கு அர்த்தமில்லாத கனவுகள் வருதாம். ஹாஹாஹா!

எது பாதாம் பாலா?

ஒருத்தன் மாட்டுக்கு பாதாம் பருப்பா கொடுத்தானாம், ஏன்?

ஏன்னா, பாதாம் பால் வருதான்னு பாக்கத்தான். ஹாஹாஹா!

என்ன ஒரு சோகம்?

சோகமா இருக்குற மரம் எந்த மரம்?

அ‘சோக’ மரம் ஹாஹாஹா!

இந்து பேப்பர் கதை

இந்து பேப்பர் ஏன் ரொம்ப வெயிட்டா இருக்கு?

ஏன்னா அது மேல யானை இருக்குல்ல. ஹாஹாஹா!

என்ன ஒரு சோதனை

ஒரு பூனைக்கு எதிர்ல பால், மீன் இரண்டையும் வெச்சா அதோட கண்ணு எது மேல இருக்கும்?

வேற எதுமேல மூக்கு மேல தான். ஹாஹாஹா!

டாக்டர் காமெடி இல்லாமலா?

நடிகருக்கும், மருத்துவருக்கும் என்ன ஒற்றுமை?

ரெண்டு பேருமே தியேட்டர்ல போட்டு யாரையாவது அறுத்துக்கிட்டுதான் இருப்பாங்க. ஹாஹாஹா!

இன்றைய சிந்தனை வரிகள்

வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டுமென்றால் நல்ல நண்பர்கள் தேவை. வாழ்நாள் முழுவதும் வெற்றி பெறவேண்டுமென்றால் ஒரு எதிரியாவது தேவை.

Priyadarshini R

TwittereMail
பிரியதர்ஷினி. ஆர். திருச்சியைச் சேர்ந்தவர். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆய்வு மாணவி. 2005ம் ஆண்டு முதல் ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறார். தினமலர், சன் நியூஸ், விஜய் டிவி என அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் பணிபுரிந்துவிட்டு, 2023ம் ஆண்டு முதல் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் பணியாற்றி வருகிறார். இவர் கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் சிறப்பு செய்திகளை வழங்கி வருகிறார்.
Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.