Kadi Joke : கடும் கோபக்காரர்களையும், குளுக் என சிரிக்க வைக்கும் மொக்க ஜோக்குகள் இதோ!
Kadi Joke : உங்களை மனம் மகிழ வைக்கும் கடி ஜோக்குகளை படித்து சிரித்து மகிழ்ந்திருங்கள்.

வெயிட் இல்லாத ஹவுஸ் எது?
வேற எது? லைட் ஹவுஸ் ஹாஹாஹா!
உயிர் இல்லாத விலங்கு எது?
வேற எது, கை விலங்கு, ஹாஹாஹா!
முட்டையே போடாத பறவை எது?
வேற எது, ஆண் பறவை தாங்க, ஹாஹாஹா!
டாக்டர் ஊசி போட வரும்போது ஒருத்தன் தடுத்தானாம், ஏன்
ஏன்னா அது தடுப்பு ஊசியாம். ஹாஹாஹா!
கல்யாண வீட்டுல ஒரு ஆள மட்டும் இழுத்து சாம்பார்ல போட்டாங்களாம், ஏன்?
ஏன்னா, அந்த ஊர்லயே அவர்தான் பெரிய பருப்பாம். ஹாஹாஹா!
மாடு போலவே சின்னதாக இருக்கும். ஆனால் அது மாடு இல்லை. அது என்ன?
வேற என்ன? கண்ணுக்குட்டி, ஹாஹாஹா!
ஒருத்தன் எக்ஸாம் ஹாலுக்குப்போயிட்டு திரும்பி வந்துட்டனாம், ஏன்?
ஏன்னா அது ரிட்டர்ன் எக்ஸாமாம். ஹாஹாஹா!
ஒருத்தன் சாப்பிடுவதற்கு முன்னாடி ஃபேனை ஆஃப் பண்ணிட்டு சாப்பிட்டானாம், ஏன்?
ஏன்னா, அவனோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிடணும்னு சொல்லியிருக்காராம். ஹாஹாஹா!
எலிய என்ன பண்ணினா யானையாகும்?
வேற என்ன? அதுக்கு பேன்ட் போட்டா, எலிஃபேன்ட், ஹாஹாஹா!
தண்ணியே இல்லாத கடல் எங்க இருக்கும்?
வேற எங்க, மேப்ல தான், ஹாஹாஹா!
காலண்டருக்கு பிடித்த பழம் எது?
டேட்ஸ், பேரிட்சை பழம் தாங்க வேற என்ன? ஹாஹாஹா!
ஆபத்தான சிட்டி எது?
வேற எந்த சிட்டிங்க, எலக்ட்ரி சிட்டிதான்.
போஸ்ட் ஆபிஸ்ல என்ன மிருகம் இருக்கும்?
வேற எது ஒட்ட‘கம்‘ இருக்கும். ஹாஹாஹா!
தமிழ் நியூயியர்க்கும், இங்கிலிஷ் நியூயியர்க்கும் என்ன வித்யாசம்?
வேற என்ன வித்யாவம்? 4 மாசம் தான் வித்யாசம். ஹாஹாஹா!
எந்த ஊருக்கு அவார்ட் கொடுத்து இருக்காங்க?
வேற எந்த ஊருக்கு? ‘விருது’ நகர் ஹாஹாஹா!
கோலம் போடுவதற்கு முன்னாடி எதுக்கு தண்ணீர் தெளிக்கணும்?
கோலம் போட்ட பின்னாடி தெளிச்சா, கோலம் அழிஞ்சுடும். ஹாஹாஹா!
2 பேர் ஒரு ஓட்டலுக்குப் போயி நாலு நாலு இட்லி ஆர்டர் பண்றாங்க, அதை சாப்பிட்டவுடன் அவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஆயிடுது ஏன்?
ஏன்னா, 4, நாள் பழைய இட்லி, ஹாஹாஹா!
ஏன் பொண்டாட்டிய விட ஏன் பொண்டாட்டியோட புடவைதான் எனக்கு ரொம்ப மரியாதை தருதுன்னு, ஏன்?
ஏன்னா, அவர் பீரோவ திறந்தவுடனே அதுதான் வந்து அவர் கால்ல விழுகுதாம். ஹாஹாஹா!
4 டீ ஒரு ஜி இருக்குற ஆங்கில வார்த்தை என்ன?
ஒரிஜினாலிட்டிதான், வேற என்ன? ஹாஹாஹா!
ஒரு பையன் ஊதுபத்தி ஸ்டாண்ட விழுங்கிட்டானாம், ஆனால் அவனுக்கு ஒன்னும் ஆகுலையாம், ஏன்?
ஏன்னா அவன் விழுங்கியது வாழைப்பழம். ஹாஹாஹா!
தண்ணீருக்கும், கண்ணீருக்கும் என்ன வித்யாசம்?
வேற என்ன? தவும், கவும் தான் வித்யாசம். ஹாஹாஹா!
2050ல உலகம் எப்படியிருக்கும்?
வேற எப்படி, உருண்டையாத்தான் இருக்கும், ஹாஹாஹா!

தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்