Kadapa Cabbage Poriyal : கடப்பா கோஸ் பொரியல்! இந்த ஒரு ஸ்பெஷல் மசாலா அரைத்து செஞ்சு பாருங்க! சுவை அசத்தும்!
Kadapa Cabbage Poriyal : கடப்பா கோஸ் பொரியல். அதற்கு ஒரு ஸ்பெஷல் மசாலா உள்ளது. அதை அரைத்து செஞ்சு பார்த்தால் சுவை அசத்தலாக இருக்கும்.
கடப்பா ஸ்டைலில் முட்டைக்கோஸ் பொரியல் செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். முட்டைகோஸில் இருந்து வரும் மணத்தால் அது சிலருக்குப் பிடிக்காது.
தேவையான பொருட்கள்
முட்டைகோஸ் – ஒரு கப் (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
கடுகு – கால் ஸ்பூன்
சீரகம் – கால் ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (கீறியது)
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மல்லித்தழை – ஒரு கைப்பிடியளவு
ஸ்பெஷல் மசாலாப் பொடி செய்ய
வரமிளகாய் – 5 (கார அளவுக்கு ஏற்ப மாற்றிக்கொள்ளலாம்)
பொட்டுக்கடலை – ஒரு கப்
பூண்டு – 6 பல்
சோம்பு – அரை ஸ்பூன்
தேங்காய் துருவல் – 2 ஸ்பூன்
(தேங்காய், பொட்டுக்கடலை, சோம்பு, பூண்டு, வரமிளகாய் சேர்த்து நன்றாக கொரகொரப்பாக தண்ணீர் விடாமல் பொடியாக பொடித்துக்கொள்ளவேண்டும்)
செய்முறை
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடலை பருப்பு, உளுந்து, கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும். அனைத்தும் பொரிந்தவுடன், பச்சை மிளகாய், கறிவேப்பிலை வதக்கவேண்டும்.
பின்னர், பொடியாக நறுக்கிய முட்டைக்கோஸ், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் அரைத்து வைத்து தேங்காய், பொட்டுக்கடலை மசாலாப்பொடியை சேர்த்து நன்றாக கிளறிவிடவேண்டும். அனைத்தும் பச்சை வாசம் போகும் அளவுக்கு வேகவிடவேண்டும். வெந்தவுடன் சிறிது மல்லித்தழை தூவி மூடிவைத்துவிடவேண்டும்.
பின்னர் சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் மணக்க மணக்க கடப்பா முட்டைகோஸ் பொரியல் தயார்.
முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்
முட்டைகோஸில் எண்ணற்ற நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் உள்ளது. ஒரு கப் முட்டைகோஸில் 22 கலோரிகள் உள்ளது.
நீங்கள் அன்றாடம் எடுத்துக்கொள்ளவேண்டிய அளவில் 54 சதவீதம் வைட்டமின் சி சத்து உள்ளது. 85 சதவீதம் வைட்டமின் கே உள்ளது. நார்ச்சத்து 2 கிராமுக்கு மேல் உள்ளது. ஒரு கிராம் புரதச்சத்து உள்ளது.
முட்டைக்கோஸ் பொட்டாசியம் அதிகம் உள்ள ஒன்றாகும். இது ரத்த அழுத்தத்தை குறைக்க உதவுகிறது. பச்சை காய்கறிகளே நமது உடலுக்கு எண்ணற்ற நன்மைகளை வழங்குகிறது என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
முட்டைகோஸின் நன்மைகள்
வீக்கத்தை எதிர்த்து போராடுகிறது.
உங்களை வலுவாக வைக்கிறது.
செரிமானத்தை அதிகரிக்கிறது.
உங்கள் இதயத்தை பாதுகாக்கிறது.
ரத்த அழுத்தத்தை குறைக்கிறது.
கொழுப்பை குறைக்கிறது.
எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது.
புற்றுநோயைத் தடுக்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
டாபிக்ஸ்