இந்த ஒரு பொடி மட்டும் செஞ்சு வெச்சுடுங்க; 5 நிமிடத்தில் லன்ச் ரெடி செய்து விடலாம்! இதோ ரெசிபி!
சட்டுன்னு லன்ச் செய்ய ஏற்ற புளியோதரைப் பொடியை செய்வது எப்படி என்று பாருங்கள்.
புளியோதரை மிக்ஸ்தான் அந்த ரெசிபி, அதை எப்படி செய்வது என்று பாருங்கள். இதை நீங்கள் செய்து காற்றுப்புகாத ஒரு கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் அது எப்போதும் ஃபிரஷ்ஷாக இருக்கும். இதை ஃபிரிட்ஜில் வைத்து ஒரு மாதம் வரை பயன்படுத்த முடியும்.
தேவையான பொருட்கள்
கடலைபருப்பு – 100 கிராம்
உளுந்து – 80 கிராம்
வெள்ளை எள் அல்லது கருப்பு எள் – 3 டேபிள் ஸ்பூன்
மல்லி விதைகள் – ஒன்றரை டேபிள் ஸ்பூன்
கடுகு – ஒரு ஸ்பூன்
மிளகு – 2 ஸ்பூன்
சீரகம் – 2 ஸ்பூன்
வெந்தயம் – 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் – 10 ஸ்பூன்
வர மிளகாய் – 12 முதல் 15
கறிவேப்பிலை – ஒரு கொத்து
புளி – 2 எலுமிச்சை அளவு
கல் உப்பு – தேவையான அளவு
தாளிக்க தேவையான பொருட்கள்
நல்லெண்ணெய்
கடுகு – ஒரு ஸ்பூன்
உளுந்து – ஒரு ஸ்பூன்
கடலை பருப்பு – ஒரு ஸ்பூன்
கடலை – ஒரு கப்
வர மிளகாய் – 1
பச்சை மிளகாய் – 1
வடித்து ஆறவைத்த சாதம் – ஒரு கப்
கறிவேப்பிலை – ஒரு கொத்து
பெருங்காயத் தூள் – ஒரு ஸ்பூன்
செய்முறை
ஒரு கடாயில் கடலை பருப்பு, எள், உளுந்து, மல்லி விதைகள் என அனைத்தையும் தனித்தனியாக வறுக்கவேண்டும். அடுத்து கடுகு, மிளகு, சீரகம், வெந்தயம் என அனைத்தையும் ஒன்றாக சேர்த்து வதக்கவேண்டும். அனைத்தையும் நல்ல பொன்னிறமாக வறுத்து ஒரு தட்டில் கொட்டி ஆறவைத்துக்கொள்ளவேண்டும்.
அடுத்து அதே கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி வர மிளகாய், கறிவேப்பிலை, புளி, கல் உப்பு என அனைத்தும் சேர்த்து நன்றாக வறுக்கவேண்டும். இதை தனியாக ஆறவைத்து, முதலில் மிக்ஸி ஜாரில் இதை சேர்த்து ஒருமுறை சுழலவிட்டு, மற்ற வறுத்து வைத்துள்ள பொருட்களை சேர்த்து நல்ல பொடியாக்கிக்கொள்ளவேண்டும். இதை காற்றுப்புகாத பாட்டிலில் அடைத்து வைத்துக்கொள்ளவேண்டும்.
சாதத்தை வடித்து ஆறவைத்துவிடவேண்டும்.
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுந்து, கடலை பருப்பு, கடலை சேர்த்து தாளிக்கவேண்டும். அடுத்து பச்சை மிளகாய், வர மிளகாய் இரண்டையும் முழுதாக சேர்த்து, கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவேண்டும்.
அடுத்து பெருங்காயத்தூள் மற்றும் நீங்கள் தயாரித்து வைத்துள்ள புளியோதரைப்பொடி சேர்த்து கலந்துகொள்ளவேண்டும். அடுத்து வடித்து ஆறிய சாதத்தை சேர்த்து கிளறவேண்டும். புளியோதரை தயார். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய் துவையல் அல்லது கறிவேப்பிலை துவையல் இருந்தால் போதும்.
இதை உங்கள் வீட்டில் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் நீங்கள் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று நினைப்பீர்கள். இது உங்களை அடிக்கடி சாப்பிடத்தூண்டும் சுவை கொண்டதாக இருக்கும். நீங்கள் லன்ச் செய்ய முடியாத அவசர காலத்தில் இது உங்களுக்கு கைகொடுக்கும்.
காலையில் தாமதமாக எழுந்துவிட்டு குழந்தைகளுக்கு லன்ச் என்ன கட்டிக்கொடுப்பது என குழம்ப வேண்டாம். சாதம் மட்டும் வடித்து இதை கிளறி, உருளைக்கிழங்கு சிப்ஸ் அல்லது வத்தல் பொரித்து கொடுத்து விட்டால் போதும். குழந்தைகளுக்கு இந்த லன்ச் பாக்ஸை மகிழ்ந்து சாப்பிடுவார்கள்.
இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்