தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Jowar Kuzhipaniyaram How To Make Corn Meal That Provides Protein To Children

Jowar Kuzhipaniyaram : குழந்தைகள் அடிக்கடி சோர்ந்துவிடுகிறார்களா? இந்த பணியாரம் மட்டும் கொடுங்க; துள்ளி ஓடுவார்கள்!

Priyadarshini R HT Tamil
Apr 01, 2024 02:24 PM IST

Jowar Kuzhipaniyaram : 100 கிராம் சோளத்தில் 349 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 10.4 கிராம், கார்போஹைட்ரேட் 72.6 கிராம், கொழுப்பு 1.9 கிராம், நார்ச்சத்து 9.7 கிராம் உள்ளது.

Jowar Kuzhipaniyaram : குழந்தைகளுக்கு தேவையான புரதச் சத்தை வாரி வழங்கும் சோள பணியாரம் செய்வது எப்படி?
Jowar Kuzhipaniyaram : குழந்தைகளுக்கு தேவையான புரதச் சத்தை வாரி வழங்கும் சோள பணியாரம் செய்வது எப்படி?

ட்ரெண்டிங் செய்திகள்

உளுந்து – அரை கப்

வெந்தயம் – ஒரு ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

தேங்காய் துருவல் – ஒரு கப்

கறிவேப்பிலை – 2 கொத்து

மல்லித்தழை – ஒரு கைப்பிடி

உப்பு – தேவையான அளவு

செய்முறை

சின்ன சோளம், உளுந்து, வெந்தயம் ஆகிய அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஓரிரவு ஊறவைக்க வேண்டும்.

காலையில் அதை அரைத்து 8 மணி நேரம் புளிக்க வைக்க வேண்டும்.

கடாயில் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து தாளிக்க வேண்டும். பின்னர், பெரிய வெங்காயம், கறிவேப்பிலை, தேங்காய் துருவல் சேர்த்து வதக்க வேண்டும். கடைசியாக மல்லித்தழை தூவி இறக்கி இதை புளித்த மாவில் சேர்க்க வேண்டும்.

பின்னர் தேவையான அளவு உப்பு சேர்த்து பணியாரக்கல்லில் பணியாரங்களாக சுட்டு எடுக்க வேண்டும். இதை தோசையாகவும் வார்த்து எடுக்கலாம்.

இதற்கு தேங்காய், தக்காளி சட்னிகள் மிகவும் நன்றாக இருக்கும். தோசையாக சாப்பிடும்போது சாம்பார், அனைத்து சைவ, அசைவ கிரேவிகளும் நன்றாக இருக்கும்.

புரதச்சத்து குறையும்போது குழந்தைகள் சோர்வடைகிறார்கள். குழந்தைகளுக்கு தேவையான புரதச்சத்து கிடைப்பதை உறுதி செய்வதற்கு இந்த பணியாரத்தை நீங்கள் அடிக்கடி செய்து கொடுப்பது நல்லது. 

சோளத்தின் நன்மைகள்

குளூட்டன் இல்லை

குளூட்டன் என்பது கோதுமை மற்றும் பார்லியில் உள்ள புரதச்சத்து. இது செரிமான கோளாறுகளை ஏற்படுத்திவிடும். இதனால் வயிறு உப்புசம், வலி மற்றும் பொருமல் ஆகியவை ஏற்படுகிறது. சோளம் குளூட்டன் இல்லாத முழுதானியம். குளூட்டன் ஏற்றுக்கொள்ளாதவர்களுக்கு இது சிறந்த மாற்றாக உள்ளது.

நார்ச்சத்துகள் நிறைந்தது

பார்லி அல்லது அரிசியைவிட சோளத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. ஒருமுறை இதை எடுத்துக்கொண்டால், இதில் 12 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது. இது தினம் எடுக்கவேண்டிய நார்ச்சத்தில் பாதியளவு ஆகும். அதிக நார்ச்சத்து எடுத்துக்கொள்வதால், உடல் பருமன், பக்கவாதம், உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய் மற்றும் செரிமான கோளாறுகள் ஆகியவை ஏற்படுவது குறைகிறது.

ரத்தச்சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது

சோளத்தில் நிறைய மாவுச்சத்தும் உள்ளது. அதனால் இது செரிக்க தாமதம் ஏற்படுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவு காக்கப்படுகிறது. அதனால் இது நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.

சோளத்தில் புரதச்சத்து நிறைந்துள்ளது

100 கிராம் சோளத்தில் 11 கிராம் புரதம் உள்ளது. அது உடலுக்கு தேவையான சக்தியை வழங்குகிறது. செல்கள் புதிதாக தோன்ற உதவுகிறது.

இரும்புச்சத்து நிறைந்தது

ஒரு கப் சோளத்தில் 8.45 கிராம் இரும்புச்சத்து உள்ளது. இதில் உள்ள இரும்புச்சத்துடன் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் உடலுக்கு அதிகப்படியான நன்மைகளை வழங்குகிறது.

எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

இதில் மெக்னீசியச்சத்து அதிகம் உள்ளது. உடலில் உள்ள கால்சிய அளவை பராமரிக்கிறது.

வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது

வைட்டமின் பி சத்துக்கள் நிறைந்துள்ளது. அது உடலை புதிய திசுக்கள் உருவாகவும், பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களையும் வழங்குகிறது.

உடல் எடை குறைப்பதற்கு உதவுகிறது

இதில் அதிக நார்ச்சத்து உள்ளது. அதிக நார்ச்சத்து பசியை கட்டுப்படுத்துகிறது. இதனால் அடிக்கடி சாப்பிடுவது தவிர்க்கப்படுகிறது. இது உடல் எடை குறைப்பவர்களுக்கு சிறந்தது.

செரிமானத்துக்கு உதவுகிறது

இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை அதிகரிக்கிறது. எளிதாக மலம் கழிக்கவும் உதவுகிறது. செரிமான மண்டல ஆரோக்கியத்தை காக்கிறது.

சோளம் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது

சோளத்தில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, கெட்ட கொழுப்பை குறைக்கிறது. இது மாரடைப்பு ஏற்படும் ஆபத்தை குறைக்கிறது. இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இதயத்தின் அனைத்து பாகங்களிலும் கிருமித்தொற்று ஏற்படாமல் தடுக்கிறது.

சோளம் சக்தியை அதிகரிக்கிறது

சோளத்தில் உள்ள வைட்டமின் பி3 உடலில் சக்தியை அதிகரிக்கிறது. அது நாள் முழுவதும் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கிறது.

ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது

சோளத்தில் உள்ள இரும்புச்சத்து, ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த செல்களை அதிகரிப்பதில் இரும்புச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. அனீமியா ஏற்படுவதை தடுக்கிறது.

100 கிராம் சோளத்தில் 349 கலோரிகள் உள்ளது. புரதச்சத்து 10.4 கிராம், கார்போஹைட்ரேட் 72.6 கிராம், கொழுப்பு 1.9 கிராம், நார்ச்சத்து 9.7 கிராம் உள்ளது.

WhatsApp channel

டாபிக்ஸ்