Joint Pain : வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியை துரத்தியடிக்கும் வழிகள்! இதை மட்டும் மூட்டுகளில் தேய்த்தால் பலன் உறுதி!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Joint Pain : வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியை துரத்தியடிக்கும் வழிகள்! இதை மட்டும் மூட்டுகளில் தேய்த்தால் பலன் உறுதி!

Joint Pain : வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியை துரத்தியடிக்கும் வழிகள்! இதை மட்டும் மூட்டுகளில் தேய்த்தால் பலன் உறுதி!

Priyadarshini R HT Tamil
Published Apr 08, 2024 02:05 PM IST

Joint Pain : மேலும் சத்தான உணவுகள் மற்றும் சிறிய அளவில் உடற்பயிற்சிகள் என செய்தால் உங்கள் உடலுக்கு அது நன்மையைத்தரும். இங்கு கொடுக்கப்படும் குறிப்புகளை பின்பற்றி பலன்பெறுங்கள்.

Joint Pain : வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியை துரத்தியடிக்கும் வழிகள்! இதை மட்டும் மூட்டுகளில் தேய்த்தால் பலன் உறுதி!
Joint Pain : வாழ்நாள் முழுவதும் மூட்டு வலியை துரத்தியடிக்கும் வழிகள்! இதை மட்டும் மூட்டுகளில் தேய்த்தால் பலன் உறுதி!

மேலும் சத்தான உணவுகள் மற்றும் சிறிய அளவில் உடற்பயிற்சிகள் என செய்தால் உங்கள் உடலுக்கு அது நன்மையைத்தரும். இங்கு கொடுக்கப்படும் குறிப்புகளை பின்பற்றி பலன்பெறுங்கள்.

இப்போதெல்லாம் 30 முதல் 40 வயதை கடந்தாலே போதும். உடல் உபாதைகளும் ஒவ்வொன்றாக வந்து தொற்றுக்கொள்ளும். அதிலிருந்து விடுபடவேண்டுமென்றால், நாம் ஆரோக்கியமான வாழ்க்கையைத்தான் வாழவேண்டும்.

குறிப்பாக 40 வயதுக்குப் பின்னர் ஏற்படும் மூட்டுவலியால் ஆண்கள், பெண்கள் என அனைவரும் அவதிப்படுகிறார்கள். மூட்டு வலியை சரிசெய்வது மிகவும் கடினம். மூட்டுவலி ஏற்பட்டால், அதனால் ஏற்படும் வலியை சொல்ல மளாது. நடக்க முடியாது.

படிகட்டுகளில் ஏற முடியாது. இதிலிருந்து விடுபட உதவும் குறிப்பு இது. ஒவ்வொரு எலும்பும் சேரும் இடத்தில் இந்த மூட்டு வலி தோன்றும்.

அதற்கு வீட்டிலே பல்வேறு தீர்வுகள் உள்ளன. நாம் ஒரு சில தீர்வுகளை உணவுகளின் மூலம் ஒரு சிலவற்றை வெளியேயும் பயன்படுத்த வேண்டும். இன்று நாம் பார்ப்பது வெளிப்புறத்தில் இருந்து மூட்டைக்காப்பது எப்படி என்பதாகும். 

இதை செய்வதும் எளிதுதான். தினமும் கட்டாயம் ஆரம்பத்தில் செய்யவேண்டும். சில நாட்கள் தொடர்ந்து செய்தால் பலன் கிட்டும். அப்போது வாரத்தில் 3 முதல் 4 முறை வரை செய்து பயன் பெறலாம்.

எனவே வீட்டில் இருந்து செய்யக்கூடிய இந்த எளிய முறையை பின்பற்றினாலே போதும் உங்களுக்கு பலன் கிடைக்கும். அது என்னவென்று பாருங்கள்.

தேவையான பொருட்கள்

கற்றாழை – சிறிது

(முள் மற்றும் பச்சை தோலை நீக்கிவிட்டு உள்ளே இருக்கும் ஜெல் பகுதியை எடுத்துக்கொள்ள வேண்டும். ஃபிரஷ்ஷான ஜெல் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதில் உள்ள வழவழப்புத்தன்மை மூட்டுகளில் உள்ள சவ்வுகளுக்கு உதவும். அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்)

பூண்டு – 6

மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்

விளக்கெண்ணெய் – ஒரு ஸ்பூன்

செய்முறை

சுத்தப்படுத்திய கற்றாழையுடன் தோல் உரித்த பூண்டை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் மஞ்சள் தூள் மற்றும் விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துகொள்ள வேண்டும்.

பின்னர் ஒவ்வொரு மூட்டிலுமே தடவவேண்டும். முட்டி பகுதிகளில் நல்ல திக்காக போடவேண்டும். வெற்றிலை அல்லது எருக்க இலையை சூடாக்கி அந்த பத்தின் மீது சேர்க்கலாம். அரை மணி நேரம் கழித்து கழுவலாம் அல்லது இரவு முழுவதும் தடவி வைத்துக்கொள்ளலாம்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.