Joint Pain Remedy : மூட்டுவலியால் அவதியா? இதை மட்டும் ஒரு வாரம் சாப்பிட்டால் போதும்! குடுகுடுவென துள்ளி ஓடுவீர்கள்!
Joint Pain Remedy : மூட்டுவலியால் அவதிப்படுகிறீர்களா? இதோ உங்களுக்கு தீர்வு.
மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம் ஆகியவற்றால் நாம் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாக நேரிடுகிறது. இதனால், 30 முதல் 40 வயதுக்கு பின்னரே பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறோம். நம் வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட ஏற்பட நமக்கு ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?
மூட்டுவலியால் அவதியா? உட்கார்ந்து எழுவதில் சிரமம். படியேற முடியவில்லை. கை-கால் குடைச்சல் இருந்தால் இதை மட்டும் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டு வர அனைத்துக்கும் தீர்வு கிடைக்கும்.
தேவையான பொருட்கள்
பிரண்டை – 3 இனுக்கு
பூண்டு – 3 பல்
பிரண்டை இலை – 5
நெய் – ஒரு ஸ்பூன்
முருங்கைக்கீரை – கைப்பிடியளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை
பிரண்டையை சுத்தம் செய்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிரண்டையில் அதிகளவில் கால்சியச்சத்து உள்ளது. அது உங்கள் எலும்புகளுக்கு வலு சேர்க்கிறது. இதனால் உங்களுக்கு மூட்டு வலி, முழங்கால் வலி ஆகியவை குணமாகிறது.
சுத்தம் செய்த பிரண்டை மற்றும் பூண்டை உரலில் சேர்த்து தட்டிக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் இடித்த பூண்டு மற்றும் பிரண்டையை சேர்த்து நன்றாக வதக்கவேண்டும். அதனுடன் முருங்கைக்கீரை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கீரை நிறம் மாறி சுருளும் வரை வதக்கவேண்டும். பின்னர், அடுப்பில் இருந்து இறக்கி ஆறியபின் அப்படியே சாப்பிடலாம்.
இதை தினமும் காலையில் உணவு உட்கொள்வதற்கு முன் சாப்பிட்டால் நல்லது. காலையில் முடியாவிட்டால், மதிய உணவு சாப்பிடும் முன்னர் எடுத்துக்கொள்ளலாம்.
இதை ஒருவாரம் தொடர்ந்து சாப்பிட்டுவர உங்கள் மூட்டுவலி காணாமல் போகும். இதில் சேர்த்துள்ள பொருட்கள் அனைத்துமே மூட்டுவலியை நிரந்தரமாக குணமாக்கக்கூடியவைதான்.
இவை உடலில் கால்சியம் சத்தை அதிகரிக்கச் செய்து, கை-கால் வலி, மூட்டுவலி, பாத வலி, கை-கால் குடைச்சல் என அனைத்துக்குமே தீர்வு கொடுக்கிறது.
மேலும் இதனுடன், வாயுத்தொடர்பான பிரச்னைகளையும் இது சரிசெய்துவிடும். நெஞ்செரிச்சல், வாயுத்தொல்லை நீக்கி, நல்ல பசியைத்தரும்.
ரத்தத்தை சுத்தம் செய்யும். உடலில் உள்ள நரம்புகளில் உள்ள அடைப்பை சரிசெய்யும். கட்டாயம் இதை முயற்சி செய்து மூட்டுவலியில் இருந்து விடுபடுங்கள்.
இதை ஒரு வாரம் தொடர்ந்து எடுத்தாலே உங்கள் மூட்டுவலி குறையும். ஆனால் மீண்டும் வந்தால், அவ்வப்போது இடையிடையே ஒரு வாரம் எடுத்துக்கொள்ளுங்கள் உங்கள் உடலை மேலும் உறுதிபடுத்தும்.
பிரண்டை கிடைக்கவில்லையெனில் பிரண்டை பொடியிலும் இதுபோல் செய்துகொள்ளலாம். பிரண்டைப்பொடியை அரை ஸ்பூன் சேர்த்து இதுபோல் வதக்கி சாப்பிடவேண்டும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
https://twitter.com/httamilnews
https://www.facebook.com/HTTamilNews
https://www.youtube.com/@httamil
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்