தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Joint Pain Remedy : மூட்டு வலியை அடித்து விரட்டும்! 10 நாட்கள் இந்த கஷாயம் மட்டும் போதும்! பலன் நிச்சயம்!

Joint Pain Remedy : மூட்டு வலியை அடித்து விரட்டும்! 10 நாட்கள் இந்த கஷாயம் மட்டும் போதும்! பலன் நிச்சயம்!

Priyadarshini R HT Tamil
Jun 04, 2024 12:15 PM IST

Joint Pain Remedy : மூட்டு வலியை அடித்து விரட்டும், 10 நாட்கள் இந்த கஷாயம் மட்டும் போதும். பலன் நிச்சயம் கிடைக்கும்.

Joint Pain Remedy : மூட்டு வலியை அடித்து விரட்டும்! 10 நாட்கள் இந்த கஷாயம் மட்டும் போதும்! பலன் நிச்சயம்!
Joint Pain Remedy : மூட்டு வலியை அடித்து விரட்டும்! 10 நாட்கள் இந்த கஷாயம் மட்டும் போதும்! பலன் நிச்சயம்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

30 வயதைக் கடந்தாலே மூட்டு வலியால் நாம் அவதிப்பட நேரிடுகிறது. இதனால், ஆண்கள், பெண்கள் என அனைவரும் அவதிப்படுகிறார்கள். அவர்களின் மூட்டு வலிகளைப் போக்க நமது வீட்டில் உள்ள பொருட்களே உதவும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?

உங்கள் மூட்டு வலியைப் போக்கும் கஷாயம்

தேவையான பொருட்கள்

வரமல்லி – ஒரு ஸ்பூன்

சீரகம் – அரை ஸ்பூன்

சோம்பு – அரை ஸ்பூன்

செய்முறை

சோம்பு, சீரகம், வரமல்லி இந்த மூன்றையும் ஒரு டம்ளர் தண்ணீரில் சேர்த்து ஓரிரவு ஊறவைக்க வேண்டும். காலையில் திறந்த பார்த்தால் இவையனைத்தும் ஊறி நன்றாக அதன் சாறுகள் தண்ணீரில் இறங்கியிருக்கும். அதை வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் பருகவேண்டும்.

இதை வெறும் வயிற்றில் பருகிய பின்னர் நீங்கள் அடுத்த எதுவும் பருகக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துதான் காலை உணவையே உட்கொள்ள வேண்டும். தண்ணீர் மட்டும் வேண்டுமானால் பருகலாம். நீங்கள் வழக்கமான பானங்களை உட்கொண்டால் அது உங்களுக்கு முழு பலனைத்தராது. எனவே, அதிக கவனம் தேவை.

இந்த கஷாயத்தை நீங்கள் பத்து நாட்கள் குடித்தாலே போதும். உங்களின் மூட்டு வலி பறந்தோடிவிடும். ஒருமுறை நீங்கள் இதை பருகிவிட்டு, பின்னர் உங்களுக்கு மீண்டும் மூட்டு வலி ஏற்படும்போது 10 நாட்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். தொடர்ந்து எடுக்கத் தேவையில்லை. தேவைப்படும்போது எடுத்துக்கொண்டால் போதும்.

உங்களுக்கு நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆண், பெண் இருவரும் எடுத்துக்கொள்ளலாம். இதனுடன் நீங்கள் நடைப்பயிற்சியையும் செய்யவேண்டும். அதுதான் உங்களின் மூட்டுகளில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து வலியைப்போக்கும். இந்த கஷாயம் உங்கள் மூட்டுகளில் உள்ள அழுக்கை வெளியேற்றி வலியைப் போக்க உதவும்.

நீங்கள் மருத்துவரிடம் செல்லும் முன் இதை கட்டாயம் பயன்படுத்தி பலன்பெறுங்கள் அல்லது நீங்கள் மருந்துகள் மூட்டுவலிக்காக எடுத்துக்கொண்டாலும் அதனுடன் இதையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். உங்களுக்கு அது எவ்வித பக்கவிளைவுகளை ஏற்படுத்தாது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்