Joint Pain : மூட்டு வலி, முழங்கால் வலி, ஆர்த்ரிட்டிசால் அவதியா? இந்த இரண்டு இயற்கை தீர்வுகள் போதும்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Joint Pain : மூட்டு வலி, முழங்கால் வலி, ஆர்த்ரிட்டிசால் அவதியா? இந்த இரண்டு இயற்கை தீர்வுகள் போதும்!

Joint Pain : மூட்டு வலி, முழங்கால் வலி, ஆர்த்ரிட்டிசால் அவதியா? இந்த இரண்டு இயற்கை தீர்வுகள் போதும்!

Priyadarshini R HT Tamil
Jul 15, 2024 09:54 AM IST

Joint Pain : மூட்டு வலி, முழங்கால் வலி, ஆர்த்ரிட்டிசால் அவதியா? இந்த இரண்டு இயற்கை தீர்வுகள் போதும்!

Joint Pain : மூட்டு வலி, முழங்கால் வலி, ஆர்த்ரிட்டிசால் அவதியா? இந்த இரண்டு இயற்கை தீர்வுகள் போதும்!
Joint Pain : மூட்டு வலி, முழங்கால் வலி, ஆர்த்ரிட்டிசால் அவதியா? இந்த இரண்டு இயற்கை தீர்வுகள் போதும்!

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

ஆர்த்ரிட்டிஸ், மூட்டுவலி, முழங்கால் வலியால் அவதிப்படுவர்கள் இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் செய்தால் அதில் இருந்து விடுபடலாம். 

நீங்கள் நாள்பட்ட முழங்கால் வலி, மூட்டு வலி, ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுகிறீர்கள் என்றால், உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு தீர்வுகளும் உதவும். முதலில் நீங்கள் இந்த பானத்தை தினமும் எடுத்துக்கொள்ளவேண்டும்.

தீர்வு – 1

தேவையான பொருட்கள்

ஆரஞ்சு பழம் – 1

ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எலும்பை பாதுகாக்கும் கால்சியச்சத்துக்கள் நிறைந்தது. இது தங்களின் மூட்டுகளின் ஆரோக்கியத்தை இயற்கையான முறையில் பராமரிக்க விரும்புபவர்களுக்கு முக்கியமானது.

எலுமிச்சை – 1

இதில் வைட்டமின் சி மற்றும் எண்ணற்ற சத்துக்கள் உள்ளது.

மஞ்சள் தூள் – ஒரு ஸ்பூன்

தேன் – 2 ஸ்பூன்

செய்முறை

ஆரஞ்சு, எலுமிச்சை இரண்டையும் தோலுடனே நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் சேர்க்கவேண்டும். பின்னர் அதில் மஞ்சள் தூள் மற்றும் ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து அடித்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் அதை வடிகட்டி தேன் சேர்த்து பருகவேண்டும். அதை தேன் சேர்த்தும் பருகலாம் அல்லது வடிகட்டாமல் தேன் சேர்த்தும் பருகலாம்.

இதை தயாரித்த உடனே பருகவேண்டும். அப்போதுதான் இதன் முழு நன்மைகளும் உங்களுக்கு கிடைக்கும். இதை ஒரு வாரம் முயற்சித்து பாருங்கள், உங்களுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும். வீக்கம் மற்றும் வலிகள் குறைந்திருக்கும். 

பின்னர் நீங்கள் தொடர்ந்து பருகிவர முற்றிலும் குணமாகும். அடுத்து நீங்கள் தேவைப்படும்போது மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது.

தீர்வு 2

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் – கால் கப்

பேரிட்சை பழம் – 6

செய்முறை

தேங்காயை துருவி, பேரிட்சை பழத்தை அதில் பிசைந்து நீங்கள் காலை உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனால் உங்கள் எலும்பு தேய்மானம், மூட்டு வலி, எலும்பு முறிவு, நரம்பு பலவீனம், உடல் பருமன், இதய பலவீனம், மனஅழுத்தம் என அனைத்தும் குணமாகும். இதையும் கட்டாயம் முயற்சித்து பலன்பெறுங்கள்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.