ஜிங்கில் பெல்ஸ், ஜிங்கில் பெல்ஸ்; கோதுமையில் கேக் செய்து, இந்த கிறிஸ்துமஸை கொண்டாடுங்கள்! இதோ ரெசிபி!
இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்ய கோதுமை கேக் ரெசிபி இதோ.

கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் துவங்கிவிட்டன. கிறிஸ்துமஸ் என்றாலே கேக்தான் பிரதானம். கேக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒன்றாகும். இது பல்வேறு ஃப்ளேவர்களில் தயாரிக்கப்படுகிறது. சாதாரண கேக் முதல் பல எண்ணற்ற வெரைட்டிகளில் கேக்குகள் கிடைக்கின்றன. நாம் எப்போதும் மகிழ்ந்திருந்தால் கேக் சாப்பிடுகிறோம். அதை சாப்பிடுவது ஒரு மகிழ்ச்சியையும் கொடுக்கிறது. கேக் என்றால் மைதாவில் தான் பெரும்பாலும் செய்யப்படுகிறது. ஆனால் மைதா இல்லாமல் கோதுமையைப் பயன்படுத்தி, நீங்கள் கேக் செய்ய முடியும். இது ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஆற்றலைக் கொடுப்பதாகவும் இருக்கும். இந்த கிறிஸ்துமஸ்க்கு கோதுமை கேக் செய்து சாப்பிட்டு மகிழுங்கள். இதோ உங்களுக்காக சிம்பிள் கிறிஸ்துமஸ் கோதுமை கேக் ரெசிபி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த கேக்குக்கு அவன், மைதா, பட்டர் என எதுவும் தேவையில்லை. மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு – ஒரு கப்
சர்க்கரை – முக்கால் கப்