தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Jeerana (Indigestion) Podi : இந்த ஒரு பொடியை மாதம் ஒருமுறை 3 நாட்கள் எடுக்கவேண்டும்! அஜீரண கோளாறை அடித்து விரட்டும்!

Jeerana (Indigestion) Podi : இந்த ஒரு பொடியை மாதம் ஒருமுறை 3 நாட்கள் எடுக்கவேண்டும்! அஜீரண கோளாறை அடித்து விரட்டும்!

Priyadarshini R HT Tamil
Jun 25, 2024 03:58 PM IST

Jeerana (Indigestion) Podi : இந்த ஒரு பொடியை மாதம் ஒருமுறை 3 நாட்கள் எடுத்தால்போது உங்களுக்கு வாழ்நாள் முழுவதும் அஜீரண கோளாறுகளே ஏற்படாது.

Jeerana (Indigestion) Podi : இந்த ஒரு பொடியை மாதம் ஒருமுறை 3 நாட்கள் எடுக்கவேண்டும்! அஜீரண கோளாறை அடித்து விரட்டும்!
Jeerana (Indigestion) Podi : இந்த ஒரு பொடியை மாதம் ஒருமுறை 3 நாட்கள் எடுக்கவேண்டும்! அஜீரண கோளாறை அடித்து விரட்டும்!

ட்ரெண்டிங் செய்திகள்

அதற்கு நாம் மருத்துவர்களை நாடி, மருந்துகள் எடுத்துக்கொள்கிறோம். ஆனால் அவை பக்கவிளைவை ஏற்படுத்தக்கூடியவை. 

ஆனால் பிரச்னைகள் சிறிய அளவில் இருக்கும்போதே நாம் வீட்டிலே சிலவற்றை செய்தால், எளிய பிரச்னைகளில் இருந்து குணமாகி, அவை மேலும் அதிகரிக்காமல் தடுக்க முடியும். அவ்வாறு இன்று நீங்கள் தெரிந்துகொள்ளப்போவது என்ன?

அஜீரணக் கோளாறு

எப்போதாவது அஜீரணக் கோளாறு ஏற்பட்டால், அது பிரச்னை கிடையாது. ஆனால் முழு உணவு சாப்பிட்டபின் வயிறு வலி ஏற்பட்டாலோ, அதை நீங்கள் மாத்திரை சாப்பிட்டுத்தான் குணப்படுத்தவேண்டுமெனில், அது பிரச்னைதான். 

அடிக்கடி அஜீரணக் கோளாறு ஏற்பட்டால், நிறைய பிரச்னைகள் உள்ளது என்று பொருள். அல்சர் அல்லது அசிடிட்டி ஏற்பட்டுள்ளது. எனவே நீங்கள் இதுகுறித்து கவனம் செலுத்துவது அவசியம்.

அஜீரணக்கோளாறு என்பது வயிற்றில் வலி அல்லது அசவுகர்யம் செரிமானத்தின்போது ஏற்படும் நிலை ஆகும். சுகாதார ஊழியர்கள் இதை டிஸ்பெப்சியா என்று அழைப்பார்கள். அதற்கும் செரிமானத்தில் கோளாறு என்று பொருள். 

உங்களுக்கு வயிற்றில் வலியோ அல்லது வயிறு உப்புசமோ ஏற்பட்டால், உங்கள் செரிமானத்தில் ஏதோ பிரச்னை என்று பொருள். சில நேரங்களில் நீங்கள் தேவையில்லாதவற்றை சாப்பிடுவதால் ஏற்படும் அல்லது அதிவேகமாக சாப்பிட்டதால் ஏற்பட்டதாக கருதப்படும்.

அனைவருக்குமே எப்போதாவது செரிமானத்தில் பிரச்னைகள் ஏற்படும். ஆனால் சிலருக்கு தினமுமே ஏற்பட்டு அவர்களின் வாழ்வையே பாதிக்கும். செரிமான கோளாறு உங்களுக்கு பிரச்னையானால், நீங்கள் மருத்துவரை அணுகவேண்டியது அவசியம். சில நேரங்களில் உங்களுக்கு சிகிச்சையும் தேவைப்படலாம்.

செரிமானம் எப்படி இருக்கும்?

செரிமானத்தால் பல்வேறு அறிகுறிகள் ஏற்படும். வயிற்று வலி அல்லது அசவுகர்யங்கள் ஏற்படும். வயிற்றில்தான் அனைத்து செரிமான உறுப்புகளும் உள்ளன. செரிமான கோளாறுகள் பொதுவாக சாப்பிட்ட பின்னர்தான் ஏற்படும்.

செரிமான கோளாறுகளின் அறிகுறிகள்

எபிகேஸ்ட்ரிக் வலி – நடு வயிறு மற்றும் மேல் வயிற்றில் வலி ஏற்படும்.

எரிச்சல் – வயிறு முதல் நெஞ்சுப்பகுதி வரை எரிச்சல் ஏற்படும்.

வயிறு உப்புசம் – சாப்பிட்ட பின் வயிறு உப்பிய உணர்வு ஏற்படும்.

வாயுத்தொல்லை

வாந்தி

எதிர்க்களித்தல்

ஆசிட் ரிப்ளக்ஸ்

நெஞ்செரிச்சல்

உள்ளிட்டவையும் அஜீரணக்கோளாறின் அறிகுறிகள் ஆகும்.

உங்களுக்கு இந்த அஜீரணக்கோளாறுகள் ஏற்படாமல் இருக்கவேண்டுமெனில், நீங்கள் சில வீட்டு மருத்துவ முறைகளைப் பின்பற்ற வேண்டும். அதில் ஒன்று இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. இதை நீங்கள் வழக்கமாக எடுத்துக்கொண்டால் உங்களுக்கு அஜீரணக்கோளாறே ஏற்படாது. இதனால் நீங்கள் அல்சர் போன்ற வியாதிகளையும் தவிர்க்க முடியும்.

ஜீரணப்பொடி செய்ய தேவையான பொருட்கள்

சுக்கு – 50 கிராம்

மிளகு – 50 கிராம்

சீரகம் – 50 கிராம்

வசம்பு – 50 கிராம்

ஓமம் – 50 கிராம்

இந்துப்பு – 10 கிராம்

செய்முறை

இவையனைத்தையும் சுத்தம் செய்து எடுத்துக்கொள்ளவேண்டும். அனைத்தையும் தனித்தனியாக பொடி செய்துகொள்ளவேண்டும். பொடித்த அனைத்தையும் ஒன்றாக கலந்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்த்க்கொள்ள வேண்டும்.

இதை பகல் உணவுக்கு முன்னர் ஒரு ஸ்பூனும், மாலை 6 மணிக்கு ஒரு ஸ்பூனும் சாப்பிடவேண்டும்.

பெரியவர்கள் மாதத்தில் ஒரு நாள் மூன்று முறை சாப்பிடவேணடும். அஜீரணக்கோளாறு சரியாகவில்லையென்றால், மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடவேண்டும். இந்த ஜீரணப்பொடியை 10 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இந்த அளவு எடுத்துக்கொள்ளவேண்டும்.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.