Javvarisi Idly : ஒரே மாதிரி இட்லி போர் அடிக்கிறதா? இதோ வித்யாசமாக ஜவ்வரிசியில் செய்யலாம்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Javvarisi Idly : ஒரே மாதிரி இட்லி போர் அடிக்கிறதா? இதோ வித்யாசமாக ஜவ்வரிசியில் செய்யலாம்!

Javvarisi Idly : ஒரே மாதிரி இட்லி போர் அடிக்கிறதா? இதோ வித்யாசமாக ஜவ்வரிசியில் செய்யலாம்!

Priyadarshini R HT Tamil
Sep 09, 2024 03:11 PM IST

Javvarisi Idly : ஒரே மாதிரி இட்லி போர் அடிக்கிறதா? இதோ வித்யாசமாக ஜவ்வரிசியில் செய்யலாம். சூப்பர் சுவையில் அசத்தும்.

Javvarisi Idly : ஒரே மாதிரி இட்லி போர் அடிக்கிறதா? இதோ வித்யாசமாக ஜவ்வரிசியில் செய்யலாம்!
Javvarisi Idly : ஒரே மாதிரி இட்லி போர் அடிக்கிறதா? இதோ வித்யாசமாக ஜவ்வரிசியில் செய்யலாம்!

இத்தனை ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த ஜவ்வரசி இந்தியாவில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. இதில் பாயாசம் செய்வார்கள். குழந்தைகளுக்கான சத்து மாவில் சேர்ப்பார்கள். இதில் கிச்சடி, கேசடி, வடை, அடை என பல்வேறு உணவுகளும் சமைக்கப்படுகிறது. ஜவ்வரிசியில் இட்லி செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்

ஜவ்வரசி – ஒரு கப்

ரவை – ஒரு கப்

தயிர் – ஒரு கப்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் அல்லது நெய் – 2 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கடலை பருப்பு – கால் ஸ்பூன்

சீரகம் – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

பச்சை மிளகாய் – 1

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)

மிளகு – ஒரு ஸ்பூன்

கேரட் துருவியது – ஒரு கப்

தேங்காய் – 2 ஸ்பூன்

செய்முறை

ஒரு அகலமான பாத்திரத்தில் ஜவ்வரிசியை சேர்த்து, அது மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு இரவு முழுவதும் ஊறவைக்கவேண்டும். அது ஊறி வந்திருக்கும்.

அதில் ரவை, தயிர் மற்றும் உப்பு சேர்த்து ஊறவைக்கவேண்டும். இவையனைத்தையும் அரை மணி நேரம் தனியாக ஊறவைத்துவிடவேண்டும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு, உளுந்து, சீரகம், கடலைபருப்பு சேர்த்து தாளிக்கவேண்டும். அனைத்தும் சிவந்தவுடன் கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய வெங்காயம், முழு மிளகு என அனைத்தும் சேர்த்து நன்றாக வதக்கி மாவில் சேர்க்க வேண்டும்.

துருவிய கேரட் மற்றும் தேங்காய் துருவல் சேர்த்து மாவை கலந்துவிடவேண்டும். மாவை நன்றாக அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும். அனைத்தும் அப்போதுதான் செட்டாகும்.

பின்னர் இட்லியாக ஊற்றி எடுக்கவேண்டும். இதற்கு தொட்டுக்கொள்ள தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, சாம்பார் என எதுவேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம்.

சூப்பர் சுவையில் அசத்தும். இட்லிக்கு ஊறவைத்து அரைக்கவில்லையென்றால், இதுபோல் இட்லி செய்து அசத்தலாம்.

இந்த இட்லியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். ஒருமுறை ருசித்தால் அடிக்கடி சாப்பிட தூண்டும் சுவை நிறைந்தது இந்த இட்லி. எனவே இதை கட்டாயம் ஒருமுறை செய்து சாப்பிட்டு பாருங்கள்.

 

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.