Japanese Lifestyle : ஆரோக்கிய வாழ்க்கை வேண்டுமா? எனில் ஜப்பானியர்களிடம் இருந்து இதை மட்டும் கற்றுக்கொள்ளுங்கள் போதும்!
Japanese Lifestyle : ஜப்பானியர்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள் என்ன தெரியுமா? தெரிந்துகொண்டு பயன்பெறுங்கள்.
ஆரோக்கிய பழக்கங்களே ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து. ஜப்பானியர்கள் கடைபிடிக்கும் ஆரோக்கிய பழக்கங்கள் இவைதான்.
ஜப்பானியர்களிடம் இருந்து நாம் கற்கவேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள்
ஜப்பான், நீண்ட ஆயுளைப்பெற்ற மற்றும் நாள்பட்ட நோய்கள் குறைந்த நாடு என்று அழைக்கப்படுகிறது. அவர்களிடம் இருந்து ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கு நாம் கற்கவேண்டிய நற்பழக்கங்கள் என்ன? ஜப்பானியர்களின் வழியை பின்பற்றினால்போதும் உலகெங்கிலும் உள்ள அனைத்து மக்களும், அவர்களின் ஆயுளை நீடித்துக்கொள்ளலாம். இது அவர்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. ஜப்பானியர்களிடம் இருந்து நீங்கள் கற்கவேண்டிய ஆரோக்கிய பழக்கங்கள் என்ன?
சீசனல் உணவுகள்
ஜப்பானியர்கள் அந்தந்த பருவத்தில் கிடைக்கும் உணவுகள் மற்றும் ஃபிரஷ் உணவுகளை மட்டுமே உட்கொள்கிறார்கள். அவர்கள் சாப்பிடும் அளவில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள். ஒவ்வொரு கவள உணவையம் மகிழ்ந்து உண்கிறார்கள். அவர்களின் உணவில் அதிகளவில் காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் முழுதானியங்கள் உள்ளது. இதை உட்கொள்ளும்போதுதான் உடல் ஆரேக்கியம் மேம்படுகிறது.
கிரீன் டீ
ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் கிரீன் டீ என்பது, முக்கியமான ஒன்றாக உள்ளது. ஆரோக்கியமான உட்பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. எனவே கிரீன் டீயை தினமும் பருகுவது உங்கள் உடல் ஆரோக்கியத்துடன் தொடர்புகொண்டது. இது உடல் வளர்சிதைக்கு நன்மை கொடுக்கிறது. இதய ஆரோக்கியம் மற்றும் நாள்பட்ட நோய்களையும் குறைக்கும் வாய்ப்புள்ளது.
தினசரி உடல் உழைப்பு
ஜப்பானியர்களின் ஆரோக்கியத்தில் தினசரி உடல் உழைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்கள் உடலின் நெகிழ்தன்மையை ஊக்குவிக்கும், மனநல தெளிவை ஆதரிக்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் உடற்பயிற்சிகளான நடைப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுவது மற்றும் யோகா, தாய்சி ஆகியவற்றை செய்கிறார்கள்.
நீர்ச்சத்து பழக்கங்கள்
நாள் முழுவதும் தண்ணீர் பருகுவது ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் அதிகம் கடைபிடிக்கப்படுகிறது. உடலின் பொது ஆரோக்கியத்துக்கு நீர்ச்சத்துடன் இருப்பது மிகவும் அவசியம். எனவே தண்ணீரை அதிகளவில் பருகினால், அது ஆரோக்கியமான செரிமானத்துக்கு உதவுகிறது. உடவை நீர்ச்சத்துடன் வைத்திருக்கச் செய்கிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்குகிறது.
பொதுவான இடத்தில் குளிப்பது
பொதுவான இடங்களான ஆறு, குளம், வாய்க்கால் ஆகியவற்றில் குளிப்பதை ஜப்பானியர்கள் ஊக்குவிக்கிறார்கள். இது மனதை அமைதிப்படுத்துவதுடன், உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. அடிக்கடி இதுபோல் குளிப்பதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கும் வழிவகுக்கிறது. தசைகளில் உள்ள இறுக்கத்தைப் போக்குகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.
நன்றியுணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள்
ஜப்பானியர்கள் நன்றியுணர்வை வளர்த்துக்கொள்கிறார்கள். நன்றியுணர்வு கொண்டவர்களாக இருப்பது வாழ்வில் முன்னோக்கிச் செல்லும் உத்வேகத்தை அதிகரிக்கிறது. மனஅழுத்தத்தை குறைக்கிறது. நேர்மறை எண்ணத்தை மேம்படுத்துகிறது.
உறக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பது
ஓய்வு மற்றும் அமைதியாக அமர்வது ஜப்பானிய கலாச்சாரத்தில் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. எனவே அவர்கள் உறக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்துக்கு உறக்கம் மிகவும் அவசியம் என்கிறார்கள்.
உறக்கத்தின் தரம் மற்றும் அதிக நேரம் உடலுக்கு அமைதியைக் கொடுக்கிறது. எனவே அமைதியாக உறங்குவதற்கும், சரியான உறக்கப்பட்டியலை அமைத்துக்கொள்வது நல்லது.
வனக்குளியல்
வனக்குளியல் என்பது இயற்கையுடன் நேரத்தை செலவிடுவது. இதனால் மனஅழுத்தம் குறைகிறது. மனநலன் அதிகரிக்கிறது மற்றும் பொதுவான ஆரோக்கியம் அதிகரிக்கிறது.
ஜப்பானியர்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அவர்கள் அவை மேம்பட இயற்கையில் பொழுதை கழிப்பதை விரும்புகிறார்கள்.
வாழ்நாள் முழுவதும் கற்றல்
ஒருவர் வாழ்வின் நோக்கமே, தனிப்பட்ட வாழ்வின் முக்கியத்துவத்தை கற்பது மட்டுமே ஆகும். எனவே வாழ்நாள் முழுவதுமான கற்றல் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சி ஆகியவற்றுக்கு அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.
எனவே வாழ்நாள் முழுவதும் எதாவது ஒன்றை கற்கிறார்கள். அவர்களின் ஆர்வத்தை வளர்த்துக்கொள்கிறார்கள். அவர்களின தனிப்பட்ட பழக்கவழக்கங்களை தேர்ந்தெடுத்து அதை செய்கிறார்கள். இவை அவர்களுக்கு கிரியேட்டிவிட்டி, மனநிறைவு மற்றும் மனதில் அமைதியை ஏற்படுத்துகிறது.
டாபிக்ஸ்