Krishna Jayanthi Special: கிருஷ்ணனுக்கு படித்த குங்குமம்பூ ஸ்ரீகண்ட் பச்சடி.. செய்முறையை பார்க்கலாம் வாங்க
கிருஷ்ண பகவானுக்கு பிடித்த இனிப்பு பலகாரங்கள், சீடை, முறுக்கு போன்ற பதார்த்தங்கள் செய்து நெய்வேத்தியம் செய்கின்றனர். அப்படி செய்யும் உணவுகளில் ஒன்று தான் குங்குமப்பூ ஸ்ரீகண்ட் பச்சடி அதன் செய்முறையை பார்க்கலாம் வாங்க.

இந்துக்கள் கொண்டாடும் மிகப் பெரிய பண்டிகையாக கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாட்டின் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடி வருகிறார்கள். தென் மாநிலங்களான தமிழ்நாடு மற்றும் கேரளாவில் அரிசி மாவு கலவையில் வைத்து சிறிய கால்களின் அச்சுக்கள் அல்லது வீட்டில் உள்ள குழந்தைகளின் கால்களை அரிசி மாவில் நனைய வைத்து நடக்க வைப்பார்கள். கிருஷ்ணரின் குழந்தை பருவத்தை பிரதிபலிக்க இவ்வாறு செய்கிறார்கள்.
மேலும் கிருஷ்ண பகவானுக்கு பிடித்த இனிப்பு பலகாரங்கள், சீடை, முறுக்கு போன்ற பதார்த்தங்கள் செய்து நெய்வேத்தியம் செய்கின்றனர். அப்படி செய்யும் உணவுகளில் ஒன்று தான் குங்குமப்பூ ஸ்ரீகண்ட் பச்சடி அதன் செய்முறையை பார்க்கலாம் வாங்க.
குங்குமப்பூ ஸ்ரீகண்ட் பச்சடி, கோபாலின் விருப்ப உணவு. இது வெண்ணெய் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதை செய்வது எப்படி என செவன்த் ஹெவன் கொல்கத்தா உரிமையாளர் ரிஷப் சாதுகான், இந்துஸ்தான் டைம்ஸிடம் அந்த செய்முறையை கூறினார். முழுக்க முழுக்க சைவ பதார்த்தம் செய்வதற்கான செய்முறையைப் பார்ப்போம்.