Jamun for Weight Loss: உடல் எடை குறைப்புக்கு உதவும் நாவல் பழம்! வேறு நன்மைகள் என்ன?
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Jamun For Weight Loss: உடல் எடை குறைப்புக்கு உதவும் நாவல் பழம்! வேறு நன்மைகள் என்ன?

Jamun for Weight Loss: உடல் எடை குறைப்புக்கு உதவும் நாவல் பழம்! வேறு நன்மைகள் என்ன?

Muthu Vinayagam Kosalairaman HT Tamil
Published Jun 26, 2024 10:56 AM IST

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் குறைந்த கலோரி உள்ளடக்கம் ஆகியவற்றின் சரியான கலவையுடன், உடல் எடை குறைப்புக்கு உதவும் நாவல் பழம் பற்றிய நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

உடல் எடை குறைப்புக்கு உதவும் நாவல் பழம்
உடல் எடை குறைப்புக்கு உதவும் நாவல் பழம்

இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை கொண்டிருந்தாலும் ஏராளமான சத்துக்களின் பொக்கிஷம் இருந்து வருகிறது. சுவை மொட்டுகளைக் திருப்திபடுத்தி புத்துணர்ச்சியூட்டும் பழமாக மட்டுமல்லாமல் உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இதில் குறைந்த கலோரிகள், அதிக நார்ச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற நன்மைகள் உள்ளன. எடை இழப்பு பயணத்தை விரைவுபடுத்த உங்கள் தினசரி உணவில் அல்லது காலை உணவில் நாவல் பழத்தை சேர்த்துக்கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறுவீர்கள்.

நாவல் பழத்தில் இருக்கும் ஊட்டச்சத்துகள்

இந்திய ப்ளாக்பெர்ரி அல்லது ஜாவா பிளம் என்றும் அழைக்கப்படும் நாவல் பழம், இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த வெப்பமண்டலப் பழமாகும். இது அதன் ஆழமான ஊதா சாயல் மற்றும் தனித்துவமான சுவைக்காக நன்கு அறியப்பட்டதாக உள்ளது. இனிப்பு மற்றும் புளிப்பு சுவைகளின் கலவையாக இருப்பதோடு பல்வேறு விதமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது. 

நாவல் பழத்தில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. இதில் வைட்டமின்கள் சி மற்றும் ஏ அதிகமாக உள்ளது. போதிய அளவில் பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் டயட்ரி நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பாலிபினால்கள் உள்ளன. 100 கிராம் நாவல் பழத்தில் 60 கலோரிகள் இருக்கின்றன. எனவே எடை மேலாண்மைக்கு ஏற்ற குறைந்த கலோரி பழம் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள்.

எடை இழப்புக்கு ஜாமூனை எப்படி பயன்படுத்துவது?

உடல் எடையை குறைக்க விரும்புவோர் நாவல் பழம் பல்வேறு வகைகளில் டயட்டில் சேர்த்துகொள்ளலாம்.

இதனை பச்சையாகவே சிற்றுண்டி போல் சாப்பிடலாம். அதே போல் இதன் சாற்றை பிழிந்து பழரசமாகவும் குடிக்கலாம்.

குறைவான கலோரி கொண்ட இந்த பழத்தில், தயிர், பால், தேன் போன்றவற்றை சேர்த்து புத்துணர்ச்சியூட்டும், மனதுக்கு நிறைவு அளிக்கும் ஸ்மூத்திக்காக தயார் செய்து பருகலாம்.

அதேபோல் பழங்கள் அல்லது காய்கறி சாலட்களில் நாவல் பழத்தையும் சேர்க்கலாம்.அதன் இனிப்பு மற்றும் சுவையுடன் கூடுதல் ஊட்டச்சத்துக்களை பெறலாம்.

நாவல் பழத்தை நன்கு உலர வைத்து, அதை பொடியாக்கி ஸ்மூர்த்தி அல்லது உணவில் பயன்படுத்தலாம். உங்கள் ஓட்மீலில் சுவை மற்றும் நார்ச்சத்து அதிகரிப்பதற்காக நாவல் பழத்தை டாப்பிங்காக சேர்க்கலாம்.

நாவல் பழம் எடை குறைப்புக்கு எப்படி உதவுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்

குறைந்த கலோரி உள்ளடக்கம்

குறைந்த கலோரி பழமாக இருப்பதால், உடல் எடையை நிர்வகிக்க சிறந்த பழமாக உள்ளது. ஒரு கப் நாவல் பழத்தில் சுமார் 35 கலோரிகள் மட்டுமே உள்ளன. எனவே உங்கள் கலோரி இலக்குகளைத் தடுக்காமல், தினசரி காலை உணவில் இதை சேர்த்து கொள்ளலாம். 

அதிக நார்ச்சத்து

நாவல் பழத்தில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. நார்ச்சத்து இதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் கூடுதல் கலோரிகளை மேலும் உட்கொள்வதை கட்டுப்படுத்த உதவுகிறது, இதனால் எடை இழப்புக்கு உதவுகிறது.

ரத்த சர்க்கரை மேலாண்மை

குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட பழமாக இருப்பதால் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, இதன் மூலம் இன்சுலின் ஸ்பைக் மற்றும் கொழுப்புச் சேமிப்பைத் தடுக்கிறது உணவுகளை மெதுவாக ஜீரணமாகி, ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது, 

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம்

நாவல் பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன. அவை உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்துப் போராடுகிறது. 

உடலில் வெளியிடப்படும் ஃப்ரீ ரேடிக்கல்கள் நமது செல்களை சேதப்படுத்தி, உடல் பருமன், நீரிழிவு அல்லது புற்றுநோய் போன்ற பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கும். 

வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும்

 வளர்சிதை மாற்ற செயல்பாட்டை மேம்படுத்தும் என கூறப்படும் கேலிக் அமிலம் மற்றும் எலாஜிக் அமிலம் போன்ற சில கலவைகள் நாவல் பழத்தில் உள்ளன. ஒழுங்கான வளர்சிதை மாற்றம் உங்கள் உடல் கலோரிகளை திறமையாக எரிக்க முடியும் என்று உறுதியளிக்கிறது, இது எடை இழப்புக்கு வழிவகுக்கும். மேலும், நாவல்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவுகிறது, கொழுப்பை திறம்பட எரிக்க உதவுகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின் தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டு உள்ளன:

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

Whats_app_banner

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.