Jackfruit Seed Vadai : பலாக்கொட்டையில் வடை செய்ய முடியுமா? இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!
Jackfruit Seed Vadai : பலாக்கொட்டையில் வடை செய்ய முடியுமா? பலருக்கும் பிடித்த பலாக்கொட்டையை சாம்பாரில் சேரத்து மட்டும் சாப்பபிடாமல் இதுபோன்ற வடை செய்து பாருங்கள். இதோ ரெசிபி! செஞ்சு அசத்துங்க!

தேவையான பொருட்கள்
பலாக்கொட்டை – கால் கிலோ
(பலாக்கொட்டையை ஒரு நாள் வெயிலில் உலர்த்த வேண்டும். அப்போதுதான் அதன் தோல்களை எளிதாக நீக்க முடியும். இல்லாவிட்டால், குக்கரில் வைத்து வேகவைத்தவுடனும் நீக்கலாம்)
நீங்கள் வெயிலில் வைத்து பலாக்கொட்டைகளை உலர்த்தினால், குக்கரில் வேகவைக்கும்போது 8 விசில்கள் விட்டு எடுக்கவேண்டும்.
சோம்பு – ஒரு ஸ்பூன்
வரமிளகாய் – 2
பூண்டு – 5 பல்
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – 2 கொத்து
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
செய்முறை
பலாக்கொட்டைகளை குக்கரில் வேகவைத்து, எடுத்து சுத்தம் செய்துகொள்ளவேண்டும்.
ஒரு மிக்ஸி ஜாரில் வரமிளகாய், பூண்டு, சோம்பு சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும். பின்னர் வேகவைத்த பலாக்கொட்டைகளை சேர்த்து அரைக்கவேண்டும்.
அதை ஒரு பவுலில் சேர்த்து, பொடிய நறுக்கிய பெரிய வெங்காயம் மற்றும் கறிவேப்பிலை மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.
கடாயில் எண்ணெயை சூடாக்கி, சிறு சிறு வடைகளாக சுட்டு எடுக்கவேண்டும். ‘
சூப்பர் சுவையில் பலாக்கொட்டை வடை ரெடி.
இது குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ஆகும்.
பலாக்கொட்டைகளை சாம்பாரில் சேர்த்து சமைப்பார்கள். ஆனால் இதுபோல் வடைகளாக செய்து சாப்பிடும்போது, வித்யாசமான சுவை நிறைந்ததாக இருக்கும்.
பலாக்கொட்டையின் நன்மைகள்
100 கிராம் பலாக்கொட்டையில் 64.5 கிராம் தண்ணீர் சத்துக்கள் உள்ளது. 38.4 கிராம் கார்போஹைட்ரேட்கள், 7.04 கிராம் புரதம், 1.5 கிராம் நார்ச்சத்துக்கள், 0.43 கிராம் கொழுப்பு, 1.5 மில்லி கிராம் இரும்புச்சத்துக்கள், 216 மில்லி கிராம் பொட்டாசிய சத்துக்கள், 97 மில்லி கிராம் பாஸ்பரஸ், 63.2 மில்லி கிராம் சோடியச் சத்துக்கள், 54 மில்லிகிராம் மெக்னீசியச் சத்துக்கள், 50 மில்லிகிராம் கால்சியம், 11 மில்லி கிராம் வைட்டமின் சி, 0.3 மில்லி கிராம் ரிபோஃப்ளாவின், 0.25 மில்லி கிராம் தியாமின், 17 ஐயூ வைட்டமின் ஏ ஆகியவை உள்ளன.
உடலில் கல்லீரல் அல்லது பித்தப்பை ஏற்படுத்தும் வாயுத்தொல்லைகளைப் போக்கும்.
பலா விதைகள், வயிறு தொற்றால் தண்ணீராக, ரத்தத்துடன், சளியுடன் மலம் கழிவதைப்போக்கும்.
வறுத்த பலாக்கொட்டைகள் பாலுணர்வைத் தூண்டக்கூடியவையாகும்.
ரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கும்.
வலியைப்போக்கும். எலும்புகளை உறுதியாக்கும்.
தொற்றுக்களைப்போக்கும்.
ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது என்பதால் உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்கிறது.
பாக்டீரியா தொற்றுகளுக்கு எதிராக செயல்படுகிறது.
நீரிழிவு நோய்க்கு எதிரான தன்மைகொண்டது.
எய்ட்ஸ் தொற்று நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான நோய் எதிர்ப்பாற்றலை பலாக்கொட்டைகள் வழங்கும்.
பலாக்கொட்டைகள் ப்ரீபயோடிக்குகளாக செயல்படுகின்றன.
ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது மற்றும் உடலை குளிரச்செய்கிறது.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பலன்பெறுங்கள்.

டாபிக்ஸ்