தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Jack Fruit Kozhukattai : பலாப்பழ இலை கொழுக்கட்டை! அசத்தலான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி! குழந்தைகள் விரும்புவார்கள்!

Jack Fruit Kozhukattai : பலாப்பழ இலை கொழுக்கட்டை! அசத்தலான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி! குழந்தைகள் விரும்புவார்கள்!

Priyadarshini R HT Tamil
Jun 08, 2024 12:57 PM IST

Jack Fruit Kozhukattai : பலாப்பழ அடை கொழுக்கட்டை செய்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள். அசத்தலான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

Jack Fruit Kozhukattai : பலாப்பழ இலை கொழுக்கட்டை! அசத்தலான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி! குழந்தைகள் விரும்புவார்கள்!
Jack Fruit Kozhukattai : பலாப்பழ இலை கொழுக்கட்டை! அசத்தலான ஈவ்னிங் ஸ்னாக்ஸ் ரெசிபி! குழந்தைகள் விரும்புவார்கள்! (kavithavin samayalarai)

ட்ரெண்டிங் செய்திகள்

தேவையான பொருட்கள்

பூரணம் செய்ய

நெய் - 4 டேபிள் ஸ்பூன்

முந்திரி – ஒரு கைப்பிடியளவு (உடைத்தது)

பாதாம் – 6 (உடைத்தது)

பிஸ்தா – 6 (உடைத்தது)

உலர் திராட்சை – ஒரு கைப்பிடியளவு

தேங்காய் துருவல் – ஒரு கப்

பலாச்சுளைகள் – 8

வெல்லம் – அரை கப் (பொடித்தது)

வாழையிலை – தேவையான அளவு

கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள் 

பச்சரிசி மாவு – 2 கப்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

பலாச்சுளைகளை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

கடாயில் நெய் சேர்த்து, அதில் உடைத்த முந்திரி, பாதாம், பிஸ்தா மற்றும் உலர்ந்த திராட்சைகளை சேர்த்து வதக்கவேண்டும். பின்னர் அதில் தேங்காய், நறுக்கிய பலாத்துண்டுகளையும் சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

பின்னர் அதில் பொடித்த வெல்லத்தை தூவி இறக்கிவிடவேண்டும்.

இதை பூரணத்துக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த பூரணத்தை அப்படியே கூட குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.

கொழுக்கட்டைக்கு வெளிப்புறம் வைப்பதற்கான பச்சரிசி மாவை பிசைந்து வைத்துக்கொள்ளவேண்டும்.

வாழை இலைகளை சதுரமாக வெட்டிக்கொள்ள வேண்டும்.

வாழையிலையில் சிறு உருண்டை மாவை எடுத்து தட்டவேண்டும். அதில் பூரணத்தை வைதது, இலை மற்றும் மாவுடன் சேர்த்து மூடிவைத்து அடுக்கிக்கொள்ள வேண்டும்.

இட்லி பாத்திரம் அல்லது வேக வைக்கும் ஸ்டீமரில் இவற்றை அடுக்கி வேகவைத்து எடுத்தால், சூப்பர் சுவையான பலாப்பழ இலை கொழுக்கட்டை தயார்.

இதை குழந்தைகள் முதல் பெரியவர்கவரை விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பர் சுவையில் அசத்தும் இந்த கொழுக்கட்டையை அரிசி மாவுக்கு பதில், ராகி மாவு சேர்த்தும் செய்யலாம். ராகி பலாப்பழ இலை கொழுக்கட்டையும் சுவை நிறைந்தது. 

பலாப்பழத்தின் நன்மைகள்

பலாப்பழம் ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டது. இதில் புரதங்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஒரு கப் பலாப்பழத்தில் 157 கலோரிகள் உள்ளது. 2.8 கிராம் புரதச்சத்துக்கள் உள்ளது. 1.1 கிராம் கொழுப்பு, 38.3 கிராம் கார்போஹைட்ரேட்கள், 2.5 கிராம் நார்ச்சத்துக்கள் உள்ளது.

22.6 மில்லிகிராம் வைட்டமின் சி, 0.5 மில்லிகிராம் வைட்டமின் பி6, 1.5 மில்லிகிராம் நியாசின், ரிபோஃபிளேவின் 0.1 மில்லிகிராம், கால்சியம் 39.6 மில்லிகிராம், மெக்னீசியம் 47.8 மில்லிகிராம், பொட்டாசியம் 739 மில்லிகிராம், பாஸ்பரஸ் 34.6 மில்லிகிராம் உள்ளது.

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. 

கரோட்டினாய்ட்கள், ஃப்ளேவனாய்ட்கள், லிகனட்கள் நிறைந்தது. 

பலாப்பழம் வீக்கத்தை குறைக்கிறது.

மலச்சிக்கலைப் போக்குகிறது.

அல்சரை குணப்படுத்துகிறது.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது.

இதய நோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.

சரும பிரச்னைகளை சரிசெய்கிறது.

புற்றுநோயைத் தடுக்கிறது.

எலும்புப்புரை நோயைத் தடுக்கிறது.

தொற்றுக்களை குணப்படுத்துகிறது.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9 

ஹிந்துஸ்தான் தமிழ் வாட்ஸ் அப் குடும்பத்தில் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.

WhatsApp channel

டாபிக்ஸ்