Iyarkkayin Pokkisham: சர்க்கரை நோய்யை ஓட விடும் ஆரைக்கீரை.. 10 நாள் சாப்பிட்டால் உடலில் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன?
ஆரைக்கீரை அற்புத பலன்கள் என்னென்ன என பார்க்கலாம்.
மழை காலங்களில் ஏரி, குளம் குட்டைகளில் ஓரங்களில் ஏராளமாய் வளர்ந்து கிடக்கும் ஆரைக்கீரை பற்றி பலருக்குத் தெரியாது. அதிலும் நகர மக்களுக்கு இந்த கீரையைப் பற்றி சுத்தமாக தெரிந்து இருக்கவே முடியாது.
ஆரைக்கீரை சிறந்த வைத்தியக்கீரை ஆகும். வளர்ச்சிக்கு ஏற்ப வளர்ந்து கொண்டிருக்கும் தடுப்பு இக்கீரை சூரணம் என்ற பெயரில் நீரிழிவைப் பங்கு வகிக்கிறது
இக்கீரை வெயில் காலங்களில் அவ்வளவாக கிடைக்கவே கிடைக்காது. பூவும், காயும் இல்லாத நான்கு இலைகளை கொண்டு ஒற்றைக் காம்புடன் அழகாக நிற்கும் இக்கீரை பார்ப்பதற்கே அழகாக இருக்கும். அதனாலேயே பலரும் இதை விரும்பி வாங்குவார்கள். உடல் சுடு இருப்பவர்கள் குளிர்ச்சி தரும் இந்த கீரைகளை சாப்பிடலாம்.
மருத்துவ பலன்கள்
சிறுநீரைக் கட்டுப்படுத்த
சிலருக்கு அடிக்கடி அதிக அளவில் சிறுநீர் கழிந்து கொண்டே இருப்பார்கள். இதனால் உடல் எடை குறைந்து மெலிந்து காணப்படுவார்கள். இப்படிப்பட்டவர்கள், 'ஆரைக்கீரையை சமைத்து, பந்து நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வர மேற்கண்ட நோய் குணமாகும்.
நீரிழிவு நோய் நீங்கும்
ஆரைக்கீரையை தொடர்ந்து 40 நாட்கள் உணவுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்கள். நீரிழிவு நோய் இருந்த இடம் தெரியாமல் காணமால் போய்விடும். இன்சுலின் போடுபவர்கள் இந்த கீரை சாப்பிட்டால் இனிமே அதற்கு அவசியமே இருக்காது
பித்த வியாதிகள் குணமாகம்
ஆரைக்கீரையை பாசிப்பருப்பு , பூண்டு , மிளகு சேர்த்து சாம்பாராகவோ, பொரியலாகவோ பத்து நாட்களுக்குத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், பித்த சம்பந்தமான பித்த வாந்தி, பித்த சூடு, பித்த கிறுகிறுப்பு, புத்தி தடுமாற்றம், வாந்தி, தலை வலி போன்ற நோய்கள் குணமாகும்.
சிறுவயதிலிருந்தே இக்கீரையை உண்டு வந்தால் பல நோய்கள் அணுகாமல் உடம்பு காப்பாற்றப்படும். ஆயுளையும் நீட்டிக்கச் செய்யும்.
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல், அதிக ரத்த போக்கு உள்ளிட்ட நோய்களை நோய்களை ஆரைக்கீரை தீர்க்கும்.
ஆரைக்கீரைப் பொடி
கீரையை உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு, அவ்வப்போது 'கஷாயம்' போட்டு அதனோடு பாலையும் சேர்த்து, 'டீ' போல குடித்து வந்தால் பல நோய்கள் நம்மை பார்த்து பயந்து பறந்தோடும்.
இக்கீரை கிடைக்கும் போது அவசியம் வாங்கி சாப்பிட்டு ஆயுளை விருத்தி செய்து கொள்ளுங்கள்.
சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
Google News: https://bit.ly/3onGqm9
டாபிக்ஸ்