தமிழ் செய்திகள்  /  Lifestyle  /  Iyarkkayin Pokkisham What Are The Benefits Of Betal Leaves .

Iyarkkayin Pokkisham:ஒரே ஒரு வெற்றிலை போதும்..வாரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டால் உடலில் இருக்கும் நோய்கள் அடியோடு ஓடும்

Aarthi Balaji HT Tamil
Feb 02, 2024 06:40 AM IST

Betal Leaves: வெற்றிலையின் அற்புத பலன்கள் என்னென்ன என பார்க்கலாம்.

வெற்றிலை
வெற்றிலை

ட்ரெண்டிங் செய்திகள்

எந்த விசேஷ வீட்டிற்கு சென்று சாப்பிட்டாலும் சாப்பிட்டு முடித்ததும், 'வெற்றிலை' போடுவது காலங்காலமாய் தொடர்ந்து வரும் 'நல்ல' வழக்கம். ஆனால் வெற்றிலையை எவரும் சமைத்துச் சாப்பிடுவதில்லை. சாதாரண வெற்றிலை, கற்பூர வெற்றிலை, கம்மாறு வெற்றிலை என வெற்றிலையில் மூன்று வகைகள் உள்ளன.

பெயர் தான் வெற்றிலையே தவிர அது வெற்று- இலையே அல்ல. இது நல்ல மருத்துவ மூலிகை நிறைந்து இருக்கிறது. வெற்றிலையை வாயில் போட்டு நன்கு கொப்பளித்துவிட்டு வெளியே துப்பப் பயன்படும் பொருள் அல்ல. பல நோய்களை குணப்படுத்தும் அற்புத மூலிகை அதில் நிறைந்து உள்ளது. அதை சாப்பிட்டால் அவ்வளவு நன்மை உடலுக்கு தரும்.

வெற்றிலையின் மருத்துவப் பயன்கள்

பால் சுரக்க

குழந்தை பெற்ற சில பெண்களுக்கு போதுமான அளவு தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். அப்படிப்பட்டவர்களுக்கு தேவையான பால் சுரக்க, வெற்றிலையை எடுத்து, அனலில், நெருப்பில் வாட்டி மார்பகங்களின் மேல் வைத்துக் கட்டி கொண்டால் தாய்ப்பால் சுரக்கும். கிராமங்களில் இன்றும் இம்முறையை தான் கடைப் பிடித்து வருகிறார்கள்.

தலைவலி குணமாக

மூன்று வெற்றிலைகளை எடுத்து அதைக் கசக்கிச் சாறு எடுத்து கிடைக்கும் சாற்றில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு, நன்றாக குழைத்து, நெற்றிப் பகுதியில் பற்று போட்டால் தலைவலி பறந்து போகும். எவ்வளவு பெரிய தலைவலியாக இருந்தாலும் இந்த முறைபடி செய்தால் தலைவலி பறந்துவிடும்.

புற்றுநோய்

வெற்றிலையில் புற்றுநோய்க்கு எதிரான குணங்கள் உள்ளன மற்றும் புற்றுநோயிலிருந்து உடலைப் பாதுகாக்கும். வெற்றிலைச் சாற்றில் உள்ள பினாலிக் கலவைகள் புற்று நோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கும் திறனைக் கொண்டு இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.  இருப்பினும், புற்றுநோய்க்கு வெற்றிலையின் பயன்பாட்டை சரிபார்க்க கூடுதல் ஆய்வுகள் தேவை. புற்றுநோய் ஒரு ஆபத்தான நோய்; எனவே, நீங்கள் சுய மருந்துக்கு பதிலாக சரியான சிகிச்சையைப் பெற வேண்டும். \

சர்க்கரை நோய்க்கு வெற்றிலை

நீரிழிவு நோய்க்கு வெற்றிலையின் ஆரோக்கிய நன்மைகள் உண்டு. வெற்றிலை இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும் என்று காட்டியது. நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தால், நீங்கள் நீரிழிவு நோயைக் கண்டறிந்து, இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருந்தால், சரியான சிகிச்சைக்காக மருத்துவரை அணுக வேண்டும்.

கட்டிகள் குணமாக

ஆறாத கட்டிகளையும் வெற்றிலை குணமாக்கும். 4 முதல் ஐந்து வெற்றிலையை நெருப்பில் காட்டினால் வதங்கிவிடும். அது, கூடவே கொஞ்சம் மஞ்சளையும் சேர்த்து அரைத்து, கட்டிகள் மேல் வைத்து கட்டிவிடவும். இப்படி செய்வதால் கட்டிகள் உடைந்து குணமாகும்.

அஜீரண பிரச்னை

கம்மார் வெற்றிலை இரண்டெடுத்து நன்றாகக் கழுவிவிட்டு, அதில் சிறிது சீரகத்தையும், உப்பையும் வைத்து வாயில் போட்டு நன்கு மென்று விழுங்குங்கள். சிறிது நேரம் கழித்து வெந்நீர் குடியுங்கள். அஜீரணம் அகன்று, நன்கு ஜீரணமாகும்.

மயக்கத்தை தெளிவிக்கும்.

காதுவலிகளை போக்கும்.

குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்று உப்புசத்தை நலமாக்கும்.

• தொடர் இருமலால் ஏற்படும் மூச்சிரைப்பை போக்கும்.

• தேளின் விஷத்தை நீக்கும்.

WhatsApp channel

டாபிக்ஸ்