தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  இனி 6 மாதம் குளிர்தான்! குளுகுளுவென மகிழ்ச்சியாக இருந்தாலும் தொற்றுகள் குறித்த கவனம் தேவை!

இனி 6 மாதம் குளிர்தான்! குளுகுளுவென மகிழ்ச்சியாக இருந்தாலும் தொற்றுகள் குறித்த கவனம் தேவை!

Priyadarshini R HT Tamil
Jul 02, 2024 05:52 AM IST

இனி 6 மாதம் குளிர்காலம்தான் நிலவும். குளுகுளுவென மகிழ்ச்சியாக இருந்தாலும் சளி, இருமல், காய்ச்சல் என தொற்றுகள் குறித்த கவனம் கட்டாயம் தேவை.

இனி 6 மாதம் குளிர்தான்! குளுகுளுவென மகிழ்ச்சியாக இருந்தாலும் தொற்றுகள் குறித்த கவனம் தேவை!
இனி 6 மாதம் குளிர்தான்! குளுகுளுவென மகிழ்ச்சியாக இருந்தாலும் தொற்றுகள் குறித்த கவனம் தேவை!

தற்போது காற்று, மழை, பனி என தொடர்ந்து ஜில்லென்ற வானிலையே நிலவும். தொடர்ந்து 6 மாதங்கள் இந்த நிலைதான் இருக்கும். இதனால் திடீரென காய்ச்சல், சளி, இருமல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

எனவே மழைக்காலத்தில் நீங்கள் வெளியூர் செல்ல நேரிட்டால் அவை உடனே உங்களை பிடித்துக்கொள்ளும். மழைக்காலத்தில் பாதுகாக்காக இருப்பது எப்படி என்ற குறிப்புகளை வழங்குகிறோம்.

மழைக்காலம் என்றால், வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்தான். ஆனால், சாதாரண சளி, இருமல், காய்ச்சல் எனத்துவங்கி டெங்கு, மலேரியா, சிக்கன்குனியா, டைபாஃய்ட் என வரிசை கட்டி வரும் வைரஸ் காய்ச்சல்களை நினைத்தாலே பதைபதைக்கிறது. 

வீட்டில் இருந்தால் ஓரளவு பாதுகாப்பாக இருக்கலாம். ஆனால் மழைக்காலங்களில் வெளியூர் செல்ல நேரிட்டால், அப்போது உங்களை பாதுகாத்துக்கொள்வதற்கு உங்களுக்கு சில டிப்ஸ்கள் அவசியம். ஏனெனில் முன்னெச்சரிக்கையின்றி நீங்கள் பயணித்தால், சுகாதாரமற்ற சூழலால் நிச்சயம் நோயுடன்தான் வீடு வந்து சேர்வீர்கள்.

ட்ரெண்டிங் செய்திகள்

மழைக்காலத்தில் ஒருமுறையும், பனிக்காலத்தில் ஒருமுறையும் குழந்தைகளுக்கு லீவு கிடைக்கும். அப்போது சில இடங்களுக்கு செல்ல நேரிடும். மழை கூட்டும் அழகைகாண சுற்றுலாக்களுக்கு நீங்கள் குடும்பத்துடன் சென்று மகிழ விரும்புவீர்கள். எனவே சுற்றுலா செல்லாம். ஆனால் தடுப்பு நடவடிக்கைகள் என்ன?

சுத்தமான தண்ணீரை பருகுங்கள்

எங்கு சென்றாலும் அங்கு சுத்தமான தண்ணீரை தேடி கண்டுபிடித்து பருகுங்கள். எனவே தண்ணீரை கையில் எடுத்துச்செல்வது சிறந்தது. நீரை காய்ச்சி குடிக்கும் வசதியிருந்தால், கண்டிப்பாக அதை பின்பற்ற முயற்சி செய்யுங்கள்.

ஜங்க் உணவுகளை தவிர்த்தல் நலம்

தெருவோர உணவுகள் எப்போதும் நம்மை கவர்ந்து இழுக்கத்தான் செய்யும். எனவே நாவை அடிக்கிக்கொண்டு இருத்தல் நலம் பயக்கும். ஏனெனில் தெருவோர கடைகள் மற்றும் ஜங்க் உணவுகளால்தான் வயிறு தொடர்பான பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.

குளிக்கும் நீரில் மிதமான கிருமி நாசினிகளை உபயோகப்படுத்துங்கள்

எப்போது மிதமான ஒரு கிருமிநாசினி பாட்டிலை எங்கு சென்றாலும் எடுத்துச்செல்லுங்கள். அதை நீங்கள் குளிக்கும் ஒரு பக்கெட் நீரில் கலந்து குளியுங்கள். நீங்கள் ஓட்டலில் தங்க நேரிட்டால் பாத்டப்களில் குளிக்காதீர்கள். ஏனெனில் அது சுத்தமாக பராமரிக்கப்படுகிறதா என்பது தெரியாது. எனவே வெளியில் செல்லும்போது அதை தவிர்ப்பது நல்லது.

நாம் வெளியூர் செல்ல நேர்ந்தால், குறைந்தளவு உடைகளையே எடுத்துச்செல்வோம். எனவே அவை ஈரமாகிவிட்டால் அவற்றை அயர்ன் செய்து பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், ஈரமான உடை உங்களுக்கு பூஞ்ஜை தொற்றை ஏற்படுத்திவிடும்.

அங்கு கிடைக்கும் உள்ளூர் உணவுகளை சாப்பிடுங்கள், ஆனால் கவனம் தேவை!

உள்ளூரில் விளையும் உணவு வகைகளை சாப்பிடுவது நல்லது. ஆனால் அதற்கு முன் அவற்றை நன்றாக சுத்தம் செய்துவிட்டு சாப்பிடுங்கள். மழைக்காலத்தில் பயணம் செய்தால், பச்சையாகவோ, பாதி வெந்த உணவுகளையோ எடுத்துக்கொள்ளாதீர்கள். அதில் கிருமிகள் நிறைந்திருக்கும். நன்றாக சமைத்த உணவு வகைகளையே எடுத்துக்கொள்ளுங்கள்.

சுகாதாரத்தை கடைபிடியுங்கள்

ஏற்கனவே கோவிட் - 19 நமக்கு சுகாதாரத்தின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது. எனவே அதை தொடர்ந்து பின்பற்றுங்கள். குறிப்பாக வெளியில் தங்கும்போது மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. கையை நன்றாக சுத்தமாக கழுவுங்கள். பெட்ஸ்பிரட்டை தினமும் மாற்றிவிடுங்கள்.

போதியளவு உறக்கம் தேவை

சூரிய உதயம் பார்க்கவும், பின்னிரவு பார்ட்டிகளில் கலந்துகொள்ளவும் நீங்கள் உங்கள் தூக்கத்தை தொலைக்க நேரிடலாம். எனவே போதியளவு தூக்கம் கெடாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். 7 முதல் 9 மணி நேர உறக்கம் ஒருவருக்கு கட்டாயம் தேவை என்பதை மனதில் கொள்ளுங்கள். அதன்படி தூக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.

நோயுற்றவர்களிடம் இருந்து விலகியிருங்கள்

யாராவது இருமினாலோ, தும்மினாலோ அவர்களிடம் இருந்து விலகியிருங்கள். ஏனெனில் அருகில் இருந்தால் உடனே உங்களுக்கும் தொற்று பரவிவிடும். எப்போதும் பயணங்களுக்கு ஒரு சிறிய மெடிக்கல் கிட்டை, உங்கள் மருத்துவர் பொதுவான வியாதிகளுக்கு பரிந்துரைத்துள்ளவற்றையும், நீங்கள் வழக்கமாக மாத்திரைகள் எடுத்துக்கொள்வீர்கள் என்றால் அந்த மாத்திரைகளையும் உடன் எடுத்துச்செல்லுங்கள். எனவே இந்த டிப்ஸ்களை பயன்படுத்தி உங்கள் மழைக்கால பயணத்தை மகிழ்ச்சியாக்குங்கள்.