தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  Itchy Feet Remedies: கால் விரல்களுக்கு இடையில் அரிப்பா.. கையை வைத்தால் எடுக்க முடியவில்லையா.. இந்த பொருட்கள் போதும்!

Itchy Feet Remedies: கால் விரல்களுக்கு இடையில் அரிப்பா.. கையை வைத்தால் எடுக்க முடியவில்லையா.. இந்த பொருட்கள் போதும்!

Pandeeswari Gurusamy HT Tamil
Jul 04, 2024 02:49 PM IST

Itchy Feet Remedies: கால், தோலில் பூஞ்சை தொற்று, நகங்களுக்கு அருகில் பூஞ்சை தொற்று என பல வடிவங்களில் தோன்றும். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் ஆபத்தில் உள்ளனர். மழைநீரில் நனைந்த காலணிகளாலும் அல்லது பாதங்கள் நீண்ட நேரம் வியர்ப்பதாலும் பாதங்களில் பூஞ்சை தொற்று தொடங்குகிறது.

கால் விரல்களுக்கு இடையில் அரிப்பா.. கையை வைத்தால் எடுக்க முடியவில்லையா.. இந்த பொருட்கள் போதும்!
கால் விரல்களுக்கு இடையில் அரிப்பா.. கையை வைத்தால் எடுக்க முடியவில்லையா.. இந்த பொருட்கள் போதும்!

Itchy Feet Remedies: பருவமழை பலருக்கும் பல  உடல்நல பிரச்சனைகளை கொண்டு வருகிறது. இந்த வியர்வை சூழலில் தோல் ஒவ்வாமை மற்றும் பூஞ்சை தொற்று ஆபத்தை அதிகரிக்கிறது. தேசிய சுகாதார நிறுவனங்களின் கூற்றுப்படி, பூஞ்சை தொற்று பல்வேறு வடிவங்களில் வரலாம்.

கால், தோலில் பூஞ்சை தொற்று, நகங்களுக்கு அருகில் பூஞ்சை தொற்று என பல வடிவங்களில் தோன்றும். இவை தவிர, பல வகையான பூஞ்சை தொற்றுகள் இருக்கலாம். பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் ஆபத்தில் உள்ளனர். மழைநீரில் நனைந்த காலணிகளாலும் அல்லது பாதங்கள் நீண்ட நேரம் வியர்ப்பதாலும் பாதங்களில் பூஞ்சை தொற்று தொடங்குகிறது. இந்த பிரச்சனை என்றால் சில வீட்டு குறிப்புகளை பின்பற்றவும்.

பேக்கிங் சோடா:

பேக்கிங் சோடா ஒரு இயற்கை கிருமிநாசினி. இது அரிப்பைக் குறைத்து, மற்ற இடங்களில் பரவாமல் தடுக்கிறது. அதற்கு, 2 கப் வெந்நீரில் 2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கலக்க வேண்டும். குறைந்தது கால் மணி நேரம் முதல் இருபது நிமிடங்கள் வரை இந்த நீரில் பாதங்களை ஊற வைக்கவும். இது சருமத்திற்கு நிவாரணம் அளிக்கிறது. அரிப்பைக் குறைக்கிறது.

வேப்ப இலைகள்:

வேப்ப இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன, அவை அரிப்பு மற்றும் தொற்றுநோயைக் குறைக்க உதவுகின்றன. இதற்கு, வேப்ப இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் குளிர்ந்த பிறகு, அரிப்பு அல்லது பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவவும். இதனால் அரிப்பு குறைகிறது.

ட்ரெண்டிங் செய்திகள்

தேயிலை எண்ணெய்:

தேயிலை மர எண்ணெய் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இவை அரிப்புகளை குறைக்க உதவுகிறது. மேலும் தொற்றுடன் தொடர்புடைய பாக்டீரியாக்களை அழிக்கவும் உதவுகின்றன. ஆனால் இதை நேரடியாகப் பயன்படுத்தக்கூடாது.  

ஆப்பிள் சீடர் வினிகர்:

ஆப்பிள் சீடர் வினிகர் கால் தொற்று மற்றும் அரிப்புக்கு சிறந்த மருந்தாக செயல்படுகிறது. இதற்கு ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் தண்ணீரை சம விகிதத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கலவையை ஒரு தொட்டியில் ஊற்றி அதில் உங்கள் கால்களை மூழ்க வைக்கவும். குறைந்தது கால் மணி நேரம் வைத்திருந்த பின், கால்களை தண்ணீரில் கழுவினால் போதும். இதை ஒரு நாளைக்கு ஒரு முறை செய்தால் போதும்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை சருமத்திற்கு நன்மை பயக்கும். அரிப்பு பிரச்சனையை நீக்குகிறது. தேங்காய் எண்ணெயை சூடாக்கி பிரச்சனை உள்ள இடத்தில் தடவவும். இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளிக்கிறது. இது அரிப்பிலிருந்து சிறிது நிவாரணம் தருகிறது.

பொறுப்பு துறப்பு

இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்த ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.

எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும்.

சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடரலாம். லிங்க்குகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

Google News: https://bit.ly/3onGqm9