உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா? இதோ இந்த 6 அறிகுறிகள் தோன்றுகிறதா பாருங்கள்! செக் செஞ்சுக்கங்க!
உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளதா என்று தெரிந்துகொள்ளுங்கள்.

உங்களுக்கு இந்த 6 அறிகுறிகள் தோன்றினால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தம். உங்களின் இதயம் ஆரோக்கியமான உள்ளதா என்பது குறித்து நீங்கள் குழப்பத்தில் உள்ளீர்களா? இதயத்தின் ஆரோக்கியம் என்பது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைக் குறிக்கிறது. உங்கள் இதயம் நல்ல நிலையில் உள்ளதா என்பதைக் கண்டறிய சில அறிகுறிகள் உள்ளது. இந்த அறிகுறிகள் இருந்தால், உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று பொருள்.
இதயத் துடிப்பு
உங்களின் வழக்கமான இதயத்துடிப்பு, ஒரு நிமிடத்துக்கு 60 முதல் 100 பீட்கள் இருக்கவேண்டும். நீங்கள் ஓய்வில் இருக்கும்போது இதுதான் அளவு. நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்பவர் என்றால், அது 40க்கும் குறைவாக இருந்தால், அது நல்ல அறிகுறியாகும். உங்களின் இதயத்துடிப்பு எப்போதும் இந்த ரேஞ்சில் இருக்கவேண்டும். இது உங்களுக்கு இதயத்தில் எந்த பிரச்னையும் இல்லை என்பதன் அறிகுறியாகும்.
சுவாசம்
உங்களுக்கு சிறிய உடல் உழைப்புக்குப் பின்னர் கூட அதிகம் மூச்சு வாங்கினால், அது உங்களின் இதயம் பிரச்னையில் உள்ளது என்பதன் அறிகுறியாகும். நீங்கள் அமைதியாக மூச்சுவிடுவதுதான் சரியான மூச்சு விடும் முறை. மூச்சுத்திணறல் வரக்கூடாது. தினசரி வேலைகளை நீங்கள் செய்யும்போது உங்களுக்கு மூச்சு வாங்கக்கூடாது. இவையெல்லாம் இருந்தால் உங்கள் இதயம் ஆரோக்கியமாக உள்ளது என்று பொருள்.