Bed wetting: படுக்கையில் பிள்ளைகள் ‘உச்சா’ போவதைத் தடுப்பது எப்படி?
படுக்கையில் பிள்ளைகள் உச்சா போவதைத் தடுப்பது எப்படி என்பது பற்றி இங்கு அறிந்து கொள்ளலாம்.
இளம்பிள்ளைகள் இரவு நேரம் தூங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிப்பது சகஜமான விஷயமாகும். ஆண் பெண் இரு குழந்தைகளுமே படுக்கையில் சிறுநீர் கழிப்பார்கள்.
ட்ரெண்டிங் செய்திகள்
பிள்ளைகள் 10 வயது வரை படுக்கையில் சிறுநீர் கழிப்பதைப் பற்றி தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவர்களுக்கு அதைப் புரிய வைக்க வேண்டியது உங்கள் கடமையாகும்.
7 வயது வரை படுக்கையில் சிறுநீர் கழிப்பது சாதாரணமான விஷயம். வாரத்துக்கு 3 முதல் 5 முறை வரை இப்படி நிகழலாம்.
இரவு தூங்குப் போவதற்கு முன்பாக சிறுநீர் கழிக்க வேண்டிய அவசியத்தைப் பற்றி பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்.
ஆழ்ந்த தூக்கத்தில் இருந்து எழுவதில் குழந்தைகளுக்கு சிரமம் இருக்கலாம். எனவே நடுராத்திரியில் நீங்கள் எழும்போது பிள்ளைகளை எழுப்பி சிறுநீர் கழிக்கப் பழக்கப்படுத்துங்கள்.
சிறுநீர் பாதையில் தொற்று ஏற்பட்டு படுக்கையில் நனையும் நிலை ஏற்படலாம். படுக்கையில் சிறுநீர் கழிப்பது ஒரு தொடர்கதையாக இருந்தால் மருத்துவர்களை அணுகுவது சிறந்த வழியாகும்.
ஏனென்றால் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கு சில மருத்துவக் காரணங்களும் உள்ளன.
உங்கள் பிள்ளையின் சிறுநீர்ப்பை இரவில் உற்பத்தியாகும் சிறுநீரை வைத்திருக்கும் அளவுக்கு வளர்ச்சியடையாமல் இருக்கலாம். சிறுநீர்ப்பையை கட்டுப்படுத்தும் நரம்புகள் உரிய பருவத்தில் முதிர்ச்சியடையாமல் இருந்தால் குழந்தைகள் சிறுநீர் வரும் உணர்வை அறிய முடியாமல் போகும்.
ஆழ்ந்து உறங்கும்போது படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தவிர்க்க முடியாமல் போய்விடும்.
இரவு நேரத்தில் உங்கள் பிள்ளைகள் படுக்கும் அறையில் சிறிய இரவு விளக்குகளைப் பயன்படுத்துங்கள். இதனால் பெட்ரூமுக்கும் பாத்ரூமுக்கும் இடையே உள்ள வழியை எளிதாகக் கண்டுபிடிக்க முடியும். உங்கள் குழந்தைக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்பட்டால் அவர்கள் உடனடியாக அங்கு செல்வர்.
கழிப்பறை பயன்பாட்டை ஊக்குவிக்கவும். பகல் மற்றும் மாலை நேரங்களில், உங்கள் பிள்ளை ஒவ்வொரு இரண்டு மணிநேரத்துக்கு ஒருமுறை சிறுநீர் கழிக்குமாறு பரிந்துரைக்கவும்.
இந்த வழிமுறைகளைக் கடைப்பிடித்தால் பிள்ளைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்கமாட்டார்கள்.