உங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கையானவர்களா? இந்த 7 விஷயங்கள் அவரிடம் உள்ளதா பாருங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கையானவர்களா? இந்த 7 விஷயங்கள் அவரிடம் உள்ளதா பாருங்கள்!

உங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கையானவர்களா? இந்த 7 விஷயங்கள் அவரிடம் உள்ளதா பாருங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 04, 2025 02:17 PM IST

உங்கள் குழந்தைகளிடம் இந்த 7 விஷயங்கள் இருந்தால் அவர்கள் தன்னம்பிக்கையுடன் வளர்கிறார்கள் என்று பொருள்.

உங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கையானவர்களா? இந்த 7 விஷயங்கள் அவரிடம் உள்ளதா பாருங்கள்!
உங்கள் குழந்தைகள் தன்னம்பிக்கையானவர்களா? இந்த 7 விஷயங்கள் அவரிடம் உள்ளதா பாருங்கள்!

தோல்விகளை பாடமாகப் பார்ப்பது

தன்னம்பிக்கை நிறைந்த குழந்தைகள், பின்னடைவுகள், தோல்விகளைக் கண்டு துவண்டு போகமாட்டார்கள். ஆனால் மாறாக அவர்கள் தவறுகளை வாய்ப்புக்களாக பார்ப்பார்கள். அவர்கள் அதில் இருந்து கற்றுக்கொண்டு முன்னேறுவார்கள். அவர்களுக்கு வளர்ச்சி மனநிலை ஏற்படும். அதில் இருந்து மீண்டும் அவர்கள் வளர்ந்து வருவார்கள்.

அச்சமின்றி கேள்விகள் கேட்கவேண்டும்

அதிக தன்னம்பிக்கை கொண்ட குழந்தைகள் ஆர்வமிக்கவர்களாக இருப்பார்கள். கேள்விகள் கேட்க தயங்கமாட்டார்கள், பதில்கள் பெறுவதற்கு அச்சம் கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் கூட, அதுகுறித்து அவர்கள் ஒத்துக்கொள்ள மறுக்கமாட்டார்கள். இது அவர்கள் கற்கும் மனநிலையில் உள்ளார்கள். அவர்கள் கற்பதை தன்னம்பிக்கையுடன் கற்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

முனைப்புடன் முன்னெடுப்புகளை செய்வார்கள்

ஒரு உரையாடலை துவங்குவது அல்லது ஒரு பணியை துவங்க முன்னெடுப்பது என அவர்கள் எதற்கும் தயங்காமல் முன்வருவார்கள். தன்னம்பிக்கை நிறைந்த குழந்தைகள் செயல் ஊக்கத்துடன் இருப்பார்கள். அவர்களுக்கு சவுகர்யமான இடத்தில் இருந்து வெளியே வர அவர்கள் தயங்க மாட்டார்கள். அவர்கள் ஒரு விஷயத்தை முயற்சிக்க முனைவார்கள். தலைமையேற்க முன்வருவார்கள்.

பாராட்டு மற்றும் விமர்சனம் இரண்டையும் ஒன்றாக ஏற்றுக்கொள்வார்கள்

தன்னம்பிக்கை நிறைந்த குழந்தைகள் பாராட்டும்போது, மிகுந்த பெருமிதம், இருமாப்பு, செருக்கு கொள்ளமாட்டார்கள். அதேபோல் அவர்களை விமர்சிக்கும்போதும், திட்டும்போதும், அமைதியாகவே இருப்பார்கள். இவர்கள் தனிப்பட்ட முறையில் பெறும் விமர்சனங்களை வளர்ச்சிக்கான ஒன்றாக எடுத்துக்கொள்வார்கள்.

மற்றவர்களை சேர்த்துக்கொள்வார்கள்

விளையாட்டு அல்லது வேலைகள் என எதுவாக இருந்தாலும், போட்டி என்று எண்ணமாட்டார்கள். மற்றவர்களை சேர்த்துக்கொண்டு முன்னேறவேண்டும் என்று நினைப்பார்கள். இவர்கள் குழுவாக சேர்ந்து பணியாற்ற தயங்கமாட்டார்கள். குழுவாக இயங்கும்போது, தனது பணியை அவர்கள் சரியாக செய்து முடிப்பார்கள்.

தேவைப்படும்போது மட்டும்தான் பேசுவார்கள்

இவர்கள் தங்களின் கருத்துக்களை மரியாதையாக தேவைப்படும்போது மட்டும்தான் எடுத்து வைப்பார்கள். உதவி கேட்பதாகட்டும் அல்லது அவர்களுக்காக பேசுவதாகட்டும், அவர்களின் மதிப்பறிந்து அவர்கள் நடந்துகொள்வார்கள்.

தொடர் முயற்சி

தன்னம்பிக்கை எப்போதும் விடாமுயற்சியுடன்தான் வரும். எனவே இவர்கள் சவால்களைக் கண்டு துவண்டு விடமாட்டார்கள். இவர்கள் தொடர்ந்து முயற்சித்துக்கொண்டே இருப்பார்கள். இவர்கள் வெற்றி பெறும் தனது முயற்சியில் எப்போதும் நம்பிக்கை கொண்டு இருப்பார்கள். இவர்கள் விடாமுயற்சியுடன் இருப்பார்கள்.

எனவே இவற்றை நீங்கள் உங்கள் குழந்தைகளின் செயல்களில் கண்டால், பெருமிதம் கொள்ளுங்கள். உங்கள் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர்கிறார். எனவே அவர் குறித்து நீங்கள் கவலைகொள்ள தேவையில்லை. இல்லாவிட்டாலும் வருந்தவேண்டாம். அவர்களிடம் தன்னம்பிக்கையை ஊட்டும் வழிகளில் கவனம் செலுத்துங்கள்.

இதுபோன்ற எண்ணற்ற தகவல்கள், விடுகதைகள், ஜோக்குள், வித்யாசமான ரெசிபிக்கள், குழந்தைகளின் பெயர்கள், தோட்டக்கலை பராமரிப்பு குறிப்புகள், பண்டிகைக் கால சிறப்பு உணவுகள், பழக்கங்கள், மரபுகள், குழந்தைகளுக்கு அர்த்தமுள்ள பெயர்கள், அழகு குறிப்புகள் மற்றும் ஆரோக்கிய குறிப்புக்கள் தேர்ந்தெடுத்து வழங்கப்பட்டு வருகிறது. எனவே தகவல்களை தொடர்ந்து பெற்று ஆரோக்கியமான வாழ்வு வாழ வாழ்த்துக்கள்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.