உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டதா? அதை குறைக்கும் 8 வழிகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!
தமிழ் செய்திகள்  /  லைஃப்ஸ்டைல்  /  உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டதா? அதை குறைக்கும் 8 வழிகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டதா? அதை குறைக்கும் 8 வழிகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

Priyadarshini R HT Tamil
Jan 03, 2025 03:35 PM IST

உடலில் அதிகரித்துவிட்ட யூரிக் அமிலத்தை குறைக்கும் வழிகள் எவை?

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டதா? அதை குறைக்கும் 8 வழிகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!
உடலில் யூரிக் அமிலம் அதிகரித்துவிட்டதா? அதை குறைக்கும் 8 வழிகள் இவைதான்! பயன்படுத்தி பலன்பெறுங்கள்!

நீர்ச்சத்து

அதிகம் தண்ணீர் பருகுவது உங்கள் உடலில் அதிகம் உள்ள யூரிக் அமிலத்தை சிறுநீர் வழியாக அடித்து வெளியேற்ற உதவும். எனவே தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீரை கட்டாயம் நீங்கள் பருகவேண்டும். மேலும் இது உங்கள் சிறுநீரக செயல்பாட்டுக்கு உதவும். இது யூரிக் அமிலம் கற்களாக மாறாமல் இருப்பதை தடுக்கும்.

ப்யூரின் அதிகம் கொண்ட உணவுகள்

ப்யூரின் அதிகம் கொண்ட உணவுகளை தவிர்க்கவேண்டும். ப்யூரின்கள் என்பவை யூரிக் அமிலமாக மாறும் தன்மை கொண்டவை. எனவே சிவப்பு இறைச்சி, இறைச்சி, குறிப்பிட்ட சில கடல் உணவுகள் ஆகியவற்றை நீங்கள் தவிர்க்கவேண்டும். மதுவை முற்றிலும் குறைக்கவேண்டும். குறிப்பாக பீர் குடிக்கக்கூடாது. இதில் ப்யூரின்கள் அதிகம் உள்ளது. குறைவான ப்யூரின் கொண்ட பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

ஆரோக்கியமான உடல் எடை

அதிக உடல் எடையால் உங்கள் உடலில் யூரிக் அமிலம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இது உங்களுக்கு முடக்கு வாதம் ஏற்படும் அறிகுறிகளையும் கொண்டுவரும். எனவே முறையான உடல் எடையை உடற்பயிற்சி மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளுடன் சேர்த்து எடுத்துக்கொள்ளவேண்டும். இது உங்கள் உடலில் யூரிக் அமில அளவை முறைப்படுத்த உதவும். புரதம் அதிகம் மற்றும் குறைவான கார்போஹைட்ரேட் உணவுகளை நீங்கள் அதிகம் சேர்த்துக்கொள்வதை தவிர்க்கவேண்டும். அது கிராஷ் டயட் எனப்படும். இதனால் உங்கள் உடலில் தற்காலிகமாக யூரிக் அமில அளவு அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

செரிப்பழங்களை அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்

செரிப்பழங்கள், செரிகளில் அதிகளவில் உங்கள் உடலில் யூரிக் அமிலத்தை குறைக்கும் என்றும், வீக்கத்தை போக்கும் என்று கூறப்படுகிறது. எனவே நீங்கள் அதிகம் அவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது. புதிய ஃபிரஷ் செரிகளை வாங்கி, அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். இனிப்பில்லாத செரி பழச்சாறுகளை பருகுங்கள். இது உங்கள் உடலுக்கு எண்ணற்ற நன்மைகளைக் கொடுக்கிறது. மேலும் உங்களுக்கு வாத நோய் ஏற்படாமல் காக்கிறது.

சர்க்கரை உணவுகள் மற்றும் பானங்கள்

இனிப்புச் சுவை அதிகம் நிறைந்த உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்கவேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் ஃப்ரூக்டோஸ் அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது. இயற்கை இனிப்பு வகைகளை மட்டும் சாப்பிடவேண்டும். சர்க்கரை பானங்கள், சோடா மற்றும் பாக்கெட் பானங்களை தவிர்க்கவேண்டும். சாக்லேட்கள், கேன்டிகளும் ஆபத்துதான்.

வைட்டமின் சி

வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள். இவை உங்கள் உடலில் யூரிக் அமில அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சை போன்ற சிட்ரஸ் அமிலம் நிறைந்த பழங்களை அதிகம் சாப்பிடுங்கள். ஸ்ட்ராபெரிகள், குடைமிளகாய், ப்ராக்கோலி போன்றவற்றையும் உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

கொழுப்பு குறைந்த பால் பொருட்கள்

கொழுப்பு குறைந்த பால் பொருட்கள் மற்றும் யோகர்ட் இதை சாப்பிடும்போது, அது உங்கள் உடலில் யூரிக் அமிலத்தை குறைக்க உதவுகிறது. இதை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். இது உங்களுக்கு வாதம் ஏற்படாமலும், யூரிக் அமிலம் தொடர்பான பிரச்னைகளையும் தடுக்கிறது.

மதுவை தவிர்க்கவேண்டும்

மதுவை தவிர்க்கவேண்டும். குறிப்பாக பீர் குடிக்கவே கூடாது. இது ப்யூரினை உடைத்து உங்கள் உடலில் யூரிக் அமிலத்தை அதிகரிக்கச் செய்து விடும். மேலும் நீங்கள் அதிகம் மது எடுத்துக்கொள்ளும்போது, அது பல்வேறு உபாதைகளையும் ஏற்படுத்தும் என்பதால், மதுவை குறைத்துக்கொள்ளவேண்டும். முடிந்தால் தவிர்ப்பது நலம். உங்கள் உடலில் வாத நோய்கள் உள்ளது என்று தெரிந்துகொண்டாலோ அல்லது யூரிக் அமிலம் அதிகம் உள்ளதை பார்த்தாலோ மதுவை தவிர்த்தல் நலம்.

Whats_app_banner

தொடர்புடையை செய்திகள்

டாபிக்ஸ்

உடல்நலம், அழகு குறிப்புகள், சமையல் குறிப்புகள், பயணம், உடற்பயிற்சி, போன்ற பல கட்டுரைகளை, லைஃப் ஸ்டைல் பிரிவில் படிக்கலாம்.