இரவு தூக்கம் தொலைவானதா? காதல் மட்டும் காரணம் இல்லைங்க; இன்சோமேனியா? எளிய தீர்வு என்ன?
இரவில் ஆழ்ந்த உறக்கம் வர என்ன செய்யவேண்டும்?
இரவில் தூக்கம் வராமல் போவதுதான் இன்சோமேனியா எனப்படும் உறக்கமின்மை வியாதி. ஒரு சிலருக்கு இரவில் உறக்கம் வராது. ஆனால் பகலில் நன்றாக உறங்குவார்கள். ஆனால் ஒரு சிலரால் பகல், இரவு என இருவேளைகளிலும் நன்றாக உறங்க முடியாமல் போகும். அதற்குப்பெயர் தான் இன்சோமேனியா என்பதாகும். அப்படியே உறங்கினாலும் உங்களால் நீண்ட நேரம் உறங்க முடியாமல் போகும். விரைவிலே விழித்துக்கொள்வீர்கள். திரும்ப உறங்வே முடியாமல் போய்விடும். போதிய உறக்கமின்மையால் நீங்கள் விழித்த பின்னரும் உங்களால் சுறுசுறுப்புடன் இருக்க முடியாது. சோர்ந்திருப்பீர்கள். உறக்கமின்மை என்ற வியாதி உங்கள் உடலின் ஆற்றலை அழித்துவிடும். மேலும் உங்கள் மனநிலையை பாதிக்கும். இது உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் குலைத்து, வேலையையும் பாதித்து, கடைசியில் உங்கள் வாழ்க்கை தரத்தையே சீர்குலைத்துவிடும்.
ஒருவருக்கு எந்த அளவுக்கு உறக்கம் வேண்டும் என்பது நபருக்கு நபர் மாறுபடும். எனினும், ஒருவருக்கு 7 முதல் 9 மணி நேர உறக்கம் என்பது கட்டாயம். சிலருக்கு குறைந்த கால இன்சோமேனியா ஏற்படும். இது சில நாட்கள் அல்லது வாரங்கள் மட்டுமே இருக்கும். இது மனஅழுத்தம் அல்லது விரும்பத்தகாத நிகழ்வுகளால் ஏற்படுகிறது. சிலருக்கு நீண்ட கால இன்சோமேனியா ஏற்படும். அது நாள்பட்ட இன்சோமேனியா என்று அழைக்கப்படுகிறது. இது மூன்று மாதங்களுக்கு மேல் கூட சிலருக்கு ஏற்படும். இன்சோமேனியா என்பது முக்கியமான பிரச்னையாகும். இது மற்ற நோய்கள் மற்றும் மருந்து, மாத்திரைகளால் கூட ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஆனால் உறங்காமல் தவிக்கவேண்டாம். சில வாழ்வியல் முறை மாற்றங்கள் கூட உங்களின் உறக்கமின்மை வியாதியைப் போக்கும் தன்மை கொண்டது.
அறிகுறிகள்
நீண்ட நேரம் உறக்கம் வராமல் தவிப்பது
இரவில் உறக்கத்தின் இடையில் விழித்துக்கொள்வது
அதிகாலையில் விரைவிலே விழித்துக்கொள்வது
நாள் முழுவதும் உறக்கக்கலக்கத்துடனும், சோர்வாகவும் இருப்பது
பயம், பதற்றம், நடுக்கத்துடன் இருப்பது
மறதி, நினைவிழப்பு, வேலையில் கவனம் செலுத்த முடியாமல் போவது, எதையும் கவனிக்காமல் விட்டுவிடுவது
விபத்துக்களை அதிகம் சந்திப்பது மற்றும் அதிக தவறுகள் செய்வது
உறங்கும்போது பல்வேறு மனக்கவலைகள் கொள்வது, மனஅழுத்தம் ஏற்படுவது
எப்போது மருத்துவரை சந்திக்க வேண்டும்?
உறக்கமின்மை உங்களின் அன்றாட நடவடிக்கைகளை பாதிக்கும்போது, நீங்கள் மருத்துவரை கட்டாயம் சந்திக்கவேண்டும். உங்கள் மருத்துவர் அதற்கான காரணத்தை கண்டுபிடித்து உங்களுக்கு தேவையான சிகிச்சையைக் கொடுப்பார். உங்களுக்கு உறக்கக் கோளாறுகள் இருந்தால், நீங்கள் சிறப்பு பரிசோதனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுவீர்கள்.
இரவு உறக்கம் வராமல் அவதிப்படுவர்கள் என்ன செய்யவேண்டும் தெரியுமா?
தேவையான பொருட்கள்
புடலங்காய் – 100 கிராம்
உப்பு – கால் ஸ்பூன்
மிளகு – கால் ஸ்பூன்
செய்முறை
புடலங்காயை மிக்ஸியில் சேர்த்து அரைத்து வடிகட்டி, உப்புத்தூள், மிளகுத்தூள் சேர்த்து குடித்துவிட்டு உறங்கினால், படுத்த உடனே தூக்கம் வரும்.
பொறுப்பு துறப்பு
இங்கு பகிரப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் முற்றிலும் உண்மை என்றும், இதனால் தீர்வு நிச்சயம் என்றும் கூற முடியாது. ஆனாலும், அனுபவங்களின் அடிப்படையில் தேர்ந்தெடுத்து ஆய்ந்தறிந்தே வழங்கப்படுகிறது. இவையனைத்தும் தீர்வு என்று நாங்கள் ஒருபோதும் கூறமாட்டோம்.
எனவே, நாள்பட்ட அல்லது தீவிரமான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகுவதுதான் சிறந்த வழி. எனவே உங்கள் உடல் அமைப்புக்கு ஏற்ப தேவையான பிரச்னைகளுக்கு மருத்துவரை அணுகி பலன்பெறுவதே சிறந்தது. இவையெல்லாம் முதலுதவி போல் உதவக்கூடும். இங்கு கொடுக்கப்படும் மருத்துவக்குறிப்புக்களை பின்பற்றி பயன்பெறுங்கள்.
தொடர்புடையை செய்திகள்
டாபிக்ஸ்